உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மயானத்துக்கு உரிமை கோரும் வக்ப் கலெக்டருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

மயானத்துக்கு உரிமை கோரும் வக்ப் கலெக்டருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஈரோட்டில் உள்ள பனகஹள்ளி கிராம மயானத்துக்கு, வக்ப் வாரியம் உரிமை கொண்டாடுவதை எதிர்த்து மனுவுக்கு, மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பசவராஜு என்பவர் தாக்கல் செய்த மனு: மாவட்டத்தில் உள்ள பனகஹள்ளி, பாளையம் ஆகிய கிராமத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள சர்வே எண் 99/2 என்பது அரசு நிலம். இது, மயானம். ஹிந்துகளுக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த 1800ம் ஆண்டு முதல் மயானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தகுந்த ஆவணங்கள் இல்லாமல், தற்போது வக்ப் வாரியம் சொந்தம் கொண்டாடுகிறது.எந்தவொரு விசாரணையும் நடத்தாமல், தாசில்தார் மற்றும் காவல்துறை உதவியுடன், கிராம மக்கள் மயானத்தை பயன்படுத்த முடியாதவாறு, வேலி அமைத்து உள்ளனர். மனு அளித்தும், அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மயானத்தை மீட்டு, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படி, மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ., உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் எஸ்.செந்தில்குமார் ஆஜராகி, ''கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக, கிராம மக்கள் மயானமாக பயன்படுத்துகின்றனர். அரசுக்கு சொந்தமான அந்த நிலத்தை, தகுந்த ஆவணங்கள் இல்லாமல், திடீரென வக்ப் வாரியம் சொந்தம் கொண்டாடுகிறது,'' என்றார்.இதைப் பதிவு செய்த நீதிபதி, இந்த மனுவுக்கு, ஈரோடு மாவட்ட கலெக்டர், கோவை வக்ப் வாரிய கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜன.22ம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும் தன் உத்தரவில், இந்த இடைப்பட்ட காலத்தில், கிராமத்தில் ஏதேனும் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் யாரேனும் உயிரிழந்தால், அந்த மரணம் தொடர்பாக, உடனே ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகா தாசில்தாருக்கு தெரிவிக்க வேண்டும்.அவர் உடனே நேரில் சென்றோ அல்லது அதிகாரி ஒருவரை அனுப்பியோ, மனுதாரரால் கோரப்பட்டபடி, உடலை அடக்கம், தகனம் செய்வதற்கான இடத்தை அடையாளம் காண வேண்டும்.விசாரணையில், அடையாளம் காணப்பட்ட இடத்தில், உடல்கள் பாரம்பரிய முறைப்படி அடக்கம் அல்லது தகனம் செய்யப்படுகிறது என்பது தெரியவந்தால், அதிகாரிகள் தங்கள் விசாரணைக்கு ஏற்ப, அந்தந்த இடங்களில் உடலை அடக்கம் செய்யப்படுவதையோ அல்லது தகனம் செய்யப்படுவதையோ உறுதி செய்ய வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

cpv s
டிச 30, 2025 14:40

if hindu people not unity and care full tamil nadu become bangaladesh in one day


naranam
டிச 30, 2025 14:23

நம் நாட்டில் ஹிந்துக்களுக்கு முதல் எதிரியாக இருப்பது ஹிந்துக்கள் தான். அதன் பிறகு தான் மற்ற மதத்தினர்.. மெக்காலே அழுகின வெங்காயம் போன்றவர்கள் ஆரியன் திராவிடன் என்ற பொய்யான கருத்துகளைப் பரப்பி, ஏற்கெனவே ஜாதி ரீதியாக உயர்வு தாழ்வு பாராட்டிப் பிரிந்து கிடந்த ஹிந்து சமுதாயத்தில் மென்மேலும் பிரிவினையை வளர்த்தார்கள்.. இதை உணர்ந்து ஹிந்து சமுதாயம் என்று தான் ஒன்று சேருமோ?


naranam
டிச 30, 2025 13:50

ஹிந்துக்கள் ஒற்றுமை இல்லாமல் ஜாதி ரீதியாகப் பிரிந்து உள்ளதால் இந்த தீய முக உடன் தீய இஸ்லாமியர்கள் சேர்ந்து கொண்டு ஹிந்துக்களின் இடங்களை சொத்துக்களைக் கொள்ளையடிக்கின்றனர். வக்ஃபு ஒரு தேசவிரோத கொள்ளை வாரியம். அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தையும் உச்ச நீதிமன்றம் நீர்த்துப் போக வைத்து விட்டது. ஹிந்துக்கள் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே நாம் நம் சொத்துக்களைப் பாதுகாக்க முடியும். ஹிந்துக்கள் விழித்துக் கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.


duruvasar
டிச 30, 2025 13:27

தேர்தல் நெருங்கும் சமயத்தில் இப்படி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டால் மத சார்பற்ற ஆட்சி செய்யும் சாது ஸ்டாலினோ, இனியவனான இளம் பெரியாரோ என்ன செய்யமுடியும். நீதியரசர்கள் சுதானமாக நடந்துகொள்ளவேண்டும்


ஆரூர் ரங்
டிச 30, 2025 13:04

ஏற்கனவே புதைக்கப்பட்ட உடல்களின் எலும்புக் கூடுகளும் வக்குபுக்கு க்கு தான் சொந்தமா?.


தமிழ்வேள்
டிச 30, 2025 12:59

ஹிந்து மயானத்திலுள்ள புதைமேடுகளை ,திண்டுகளாக்கி , தர்கா கட்டி , எவனாவது அவுலியா என்று ஒரு உருது பெயரை வைத்து ஊரையே ஆட்டையை போடும் பலே திட்டம் உள்ளது போல ....


Siva Balan
டிச 30, 2025 11:38

இந்த நீதிபதியையும் சங்கின்னு சொல்லுவானுங்க திமுககாரனுங்க.....


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 30, 2025 11:26

ஹிந்துக்கள் எப்போது விழிப்பார்கள் >>>>


Sesh
டிச 30, 2025 10:37

பிற மத மக்களுக்கு தொல்லைதான் .


மேலும் செய்திகள்









புதிய வீடியோ