உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதி எவ்வளவு?

தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதி எவ்வளவு?

சென்னை: தமிழகத்திற்குள் நடக்கும் ரயில்வே திட்டங்களில், பல பணிகளுக்கு முந்தைய ஆண்டுகளை காட்டிலும், தற்போதைய ரயில்வே பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இது குறித்த விவரம் பின் வருமாறு:

திண்டிவனம் - திருவண்ணாமலை

திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு 70 கி.மீ., தூரத்துக்கு ரயில் வழித்தடம் அமைக்க 2006ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2008 ம் ஆண்டு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. 3 ஆண்டுகளில் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.900 கோடி

அத்திப்பட்டு - புத்தூர் திட்டம்

வேலூர் மாவட்டம் அத்திப்பட்டுவில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக புத்தூருக்கு 88.30 கி.மீ.,தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க 2008 ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. சென்னை துறைமுகத்தில் இருந்து ஆந்திர, கர்நாடகா மாநிலங்களுக்கான சரக்கு போக்குவரத்துக்கு என முக்கியமான திட்டமாக பார்க்கப்பட்டது. நிலத்தில் கையகபடுத்துவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், இத்திட்டத்திற்கு ஆர்வம் காட்டப்படவில்லை. தற்போது வரை ஒப்பந்த புள்ளி கோரப்படவில்லை

திண்டிவனம் - நகரி வழித்தடம்

திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் திருப்பதி வழியாக நகரிக்கு செல்லும் வகையில் 180 கி.மீ., தூரத்திற்கு புதிய ரயில் திட்டம் 2006- 07 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 2007 ல் ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட இத்திட்டத்தின் மதிப்பு ரூ.582 கோடி எனகணிக்கப்பட்டது. இத்திட்டம் இன்னும் நிறைவு பெறவில்லை.

ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி ரயில் பாதை

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 60 கி.மீ., தூரத்துக்கு புதிய ரயில்பாதை 2012-13 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது

மொரப்பூர் - தர்மபுரி

மொரப்பூரில் இருந்து தர்மபுரி வரை பழைய மீட்டர் கேஜ் பாதையை அகல பாதையாக்கக 2016 - 17 ம் ஆண்டு பட்ஜெட்டில் அிறவிக்கப்பட்டது. மொத்தம் 36 கி.மீ., தூரத்திற்காக இப்பணியின் மொத்த மதிப்பீடு ரூ.360 கோடி

சென்னை - கடலூர்

சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூர் துறைமுகம் வரை ரூ.323.52 கோடி மதிப்பில் புதிய ரயில்பாதை அமைக்க 2008-09 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 128.28 கி.மீ., தூரம் கொண்டு இத்திட்டம் தமிழகத்தையும், புதுச்சேரியையும் இணகை்கும் வகையில் இருந்தது

ஈரோடு - பழனி வழித்தடம்

ஈரோட்டில் இருந்து சென்னிமலை, தாராபுரம், காங்கேயம் வழியாக பழநிக்கு 91.05 கி.மீ.,தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க 2008 ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. திட்ட மதிப்பு ரூ.1,140 கோடி. தேவையான நதியில் பாதியை தமிழக அரசு வழங்க வேண்டும். தேவையான நிலத்தை தமிழக அரசு இலவசமாக ரயில்வே துறைக்கு வழங்கினால் மட்டும் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு நிலம் வழங்க தயாராக இல்லாததால் திட்டம் முடங்கி உள்ளது.

மதுரை -தூத்துக்குடி

மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.2,053 கோடியில் 143.5 கி.மீ., தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க2011 ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 18 கி.மீ., தூரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. இதுவரை ரூ.350 கோடி செலவாகி உள்ளது.

காரைக்கால் துறைமுகம் ரயில் பாதை

காரைக்காலில் இருந்து திருநள்ளாரு வழியாக பேரளத்துக்கு இருந்த மீட்டர் கேஜ் ரயில்பாதை நிரந்தரமாக மூடப்பட்டது. இதனை மீண்டும் புதிய அகல ரயில் பாதையாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்புசாமி
ஜூலை 28, 2024 22:20

சீனி சக்கரை சித்தப்பா... சீட்டிலெழுதி நக்கப்பாங்கற கதையா...


சசிக்குமார் திருப்பூர்
ஜூலை 28, 2024 21:42

ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது இந்த கூறுகெட்ட திராவிட ஊபீஸ் குறை மட்டுமே கூறும் ஜந்துக்கள். திமுக காங்கிரஸ் ஆட்சியில் அறிவிப்பு மட்டும் செய்து விட்டு 400 கோடிக்கு 10 லட்சம் மட்டும் ஒதுக்கி கல்லை மட்டும் பெயர் போட்டு நட்டிவிட்டானுக.


K.n. Dhasarathan
ஜூலை 28, 2024 20:30

நன்றி தினமலருக்கு சமயங்களில் செய்திகள் சரியாக வெளி வருகிறது.ரயில் அமைச்சர் தமிழகம் மீது சற்றும் கவனம் கொடுக்க வில்லை, இங்கு 36 ரயில்கள் கான்சல் செய்யப்பட்டன கொரோன காலத்தில், இதுவரை மீட்கப்படவில்லை, 9 ரயில் திட்டங்கள் பல வருடங்களாக இழுபறியில் கிடக்கின்றன, தினம் நுறு பொய்கள் பேசும் அண்ணாமலை இதைப்பற்றி பேச முடியுமா? மருத்துவர் ஐயா வாயை திறப்பாரா ? தவிர இன்னும் ரயில் விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன, ரயில் அமைச்சர் இதைப்பற்றி பேச முன் வருவாரா? இங்கிருந்து வரி வருமானம் மட்டும் வேண்டும், ஆனால் ஒன்றும் செய்யக்கூடாது, இங்கிருந்து போன நிதி அமைச்சரும் சேர்ந்து துரோகம் செய்வதுதான் தமிழகத்தின் சாபக்கேடு.


Saleem
ஜூலை 28, 2024 20:15

வழக்கம் போல் கோவை புறக்கணிக்கப்பட்டுள்ளது


venugopal s
ஜூலை 28, 2024 19:12

இந்தத் திட்டங்கள் எல்லாமே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2012 க்கு முன்பு கொண்டு வரப்பட்டது. பாஜக ஆட்சியில் முதல் எட்டு வருடங்கள் எந்த நிதியும் ஒதுக்காமல் தமிழக மக்களை ஏமாற்றி விட்டு கடந்த இரண்டு வருடங்களாக மட்டும் சொல்பமான நிதியை ஒதுக்கி பாஜக அரசு நாடகம் ஆடுகின்றனர்.2014 க்குப் பிறகு எந்த புதிய ரயில்வே திட்டங்களையும் பாஜக அரசு தமிழகத்துக்கு பாஜக அரசு கொடுக்கவில்லை.கடந்த பத்து வருடங்கள் தமிழர்களுக்கு அல்வா கொடுத்த இவர்களுக்கு ஓட்டு மட்டும் போட வேண்டுமாம்!


ஆரூர் ரங்
ஜூலை 28, 2024 15:04

உதயசபரி குழுமம் ஒதுக்க வாய்ப்பில்லை.


R K Raman
ஜூலை 28, 2024 15:03

விழுப்புரம் தஞ்சாவூர் இரட்டை பாதை திட்டம் என்ன ஆச்சு என்று புரிய வில்லை....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை