உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்து தரிசிப்பேன்: துர்கா

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்து தரிசிப்பேன்: துர்கா

சென்னை: ''அயோத்தி ராமரை தரிசனம் செய்ய கண்டிப்பாக வருவேன்,'' என, ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகளிடம், முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா உறுதி அளித்துள்ளார்.அயோத்தியில் குழந்தை ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடக்க உள்ளது.

பூஜிக்கப்பட்ட அட்சதை

ஆர்.எஸ்.எஸ்., மாநில நிர்வாகிகள் ராம ராஜசேகர், பிரகாஷ், விஷ்வ ஹிந்து பரிஷத் தேசிய இணைச்செயலர் நாகராஜன் உள்ளிட்டோர், நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்காவை, அவருடைய இல்லத்தில் சந்தித்தனர். அப்போது ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ், அயோத்தியில் பூஜிக்கப்பட்ட அட்சதை ஆகியவற்றை வழங்கினர்.இது குறித்து, ஆர்.எஸ்.எஸ்., மாநில நிர்வாகி ராம ராஜசேகர் கூறியதாவது:ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்கனவே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், முதல்வரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுக்க நேரம் கேட்டிருந்தோம். அதன்படி, நேற்று முன்தினம் 11:30 மணிக்கு முதல்வர் மனைவி துர்காவை சந்தித்து, அழைப்பிதழ் வழங்கினோம்.

சிறப்பு அம்சங்கள்

மிகவும் அன்புடன் எங்களை வரவேற்றார். பின், பக்தியுடன் கும்பாபிஷேக அழைப்பிதழ் பெற்று கொண்டார். ராமர் கோவில் எப்படி கட்டப்படுகிறது, அதன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து சுருக்கமாக எடுத்து கூறினோம்.அதை ஆர்வமாக, அவர் கேட்டு கொண்டார். அவரும் ராமர் கோவில் பணிகள் தொடர்பாக சில விபரங்களை கேட்டார்.ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நீங்கள் அவசியம் வர வேண்டும் என கேட்டுக் கொண்டோம். அயோத்தி ராமரை தரிசிக்க ஆவலாகத்தான் இருக்கிறேன். வசதிப்படும் நாளில் கட்டாயம் அயோத்திக்கு வந்து, ராமரை தரிசிப்பேன் என்றார். கும்பாபிஷேகத்துக்கான அழைப்பிதழை வீட்டு பூஜை அறையில் வைத்து கும்பிட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 15, 2024 23:32

பார்த்து ......... டுமீலன்ஸ் மாதிரி வடக்கன்ஸ் இ வாயர்கள் அல்லர் ...... எதிர்ப்பு காட்டுவாங்க ......


Anantharaman Srinivasan
ஜன 15, 2024 21:50

கலப்பட குடும்பம். கருணாநிதி பாக்கா நாத்திகம் பேசி இந்து கடவுள்களை பழித்தவர். மகன் இந்துமதத்தை பழித்து முஸ்லீம் கிருத்துவர்பால் ஈர்ப்பு கொண்டவர். பேரன் உதயநிதி கிருஸ்துவன் என்று சொல்லிக்கொண்டு கிருத்துவதோத்தரம் படிப்பவர். துர்காஸ்டாலின் இந்து கடவுள்களை கும்பிட்டு ஸோத்திரங்களை சொல்பவர். தவறான மரத்தில் காய்த்த காஷ்மீர் ஆப்பிள்.


ஆசாமி
ஜன 15, 2024 21:14

தேவையில்லாத ஆணி.


Rajagopal
ஜன 15, 2024 20:43

பக்தியுள்ளவர்கள், அசுரர்களுக்கு வாக்கப்பட்டிருந்தாலும், வரவேற்கத் தகுந்தவர்கள். துர்கா ஸ்டாப்களின் தாராளமாக வரட்டும். தனது பிள்ளைக்கு நல்ல புத்தி வரட்டும் என்று வேண்டிக்கொள்ளட்டும்.


Kalyanasundaram Linga Moorthi
ஜன 15, 2024 19:52

husbands and children are running behind the christians and muslims, how come she is going to all Hindu Temples? looks like husband might have told her to go estimate The Great Ramar Temple properties and other assets, so that once I.N.D.I.A comes to power - the day 1 go for swindling - what a cheap woman she is and shameless piece?


Subramanian N
ஜன 15, 2024 19:26

விஷ்வ ஹிந்து பரிசத்திக்கு விவஸ்தையே கிடையாதா


Nachiar
ஜன 15, 2024 18:37

த்ரிஷ்ட்டி கழிக்க....


Nachiar
ஜன 15, 2024 18:31

அழைப்பிதழ் கொடுத்த RSS கொடுத்தவர்களை என்ன சொல்வது. இந்து சமயத்தை அவமதிக்கும் பெற்று வளர்த்த பிள்ளையை அந்நிய மதத்திற்கு பறிகொடுத்த தாய் செய்ய வேண்டிய பரிஹாரம் மக்களை சமயங்களை அவமதிக்கும் பிள்ளைக்கு கணவருக்கு அறிவுரை கூறி திருத்த வேண்டியது கடமை. எத்தனை கோவிலுக்கு போனாலும் பாவம் தீராது. அரசியல் காரணமாக இப்படியானவர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தவர்களை தர்மம் நின்று கொள்ளும். ஜெய் சிவராம்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 15, 2024 17:19

இந்தம்மா எப்போதும் கருப்பு சிவப்பு வண்ணப் புடவையிலேயே சுற்றுவதை பார்க்கிறோம். இப்பொழுதெல்லாம் கூடவே மஞ்சள் கலரில் ஜாக்கெட் வேறு அணிகிறார்கள். இன்னுமா புரியல? இதுகூட புரியாமல் இருக்கும் தமிழக மக்களை என்ன சொல்வது?


அசோகன்
ஜன 15, 2024 15:35

ஆளையும் கொன்னுட்டு மாலை போட்டு சவத்துக்கு மரியாதையும் செலுத்துவது......... எத்தனை கோவில்களை திமுக இடிச்சி தள்ளிடுச்சி


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை