உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சுதந்திர தினப் பொன் விழா, பவள விழா ஓட்டம்; தினமலர் வலுவூட்டிய தேசப்பற்று

சுதந்திர தினப் பொன் விழா, பவள விழா ஓட்டம்; தினமலர் வலுவூட்டிய தேசப்பற்று

நாட்டின் சுதந்திரத்தை போற்றுவதிலும், நாட்டுப்பற்றை நெஞ்சில் சுமக்கும் பல்லாயிரக்கணக்கானோரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்க 'தினமலர்' நாளிதழ் என்றும் தவறுவதில்லை.திருப்பூரில், கடந்த, 1998ல், சுதந்திர தின பொன் விழா ஓட்டமும்; 75வது சுதந்திர தின பவள விழாவை கொண்டாடும் வகையில், 2022, ஆக., 14ல், சுதந்திர தின பவள விழா மெல்லோட்டமும் 'தினமலர்' நாளிதழ் சார்பில் நடத்தப்பட்டது.ரத்தத்தில் கலந்துள்ள தேசப்பற்றையும், சுதந்திர உணர்வையும் வெளிக்காட்ட, ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பின்னலாடை தொழில் துறையினர், தன்னார்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சேவை அமைப்பினர், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அலுவலர்கள், ஊழியர்கள் என, அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர்.'தினமலர்' நாளிதழ் விதைத்த தேசப்பற்று, லட்சக்கணக்கானோரிடம் ஆல் போல் வேரூன்றி, தழைத்து வளர்கிறது.

40 அடி நீளத்துக்கு

சுதந்திரக் கொடிகடந்த, 1997ல் நடந்த பொன் விழா சுதந்திர தின மெல்லோட்டத்தில் பங்கேற்ற திருப்பூர், கருவம்பாளையம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் கூறியதாவது:'தினமலர்' நாளிதழ் நடத்திய பொன் சதந்திர தின ஓட்டத்தில், பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர், பொது நுல அமைப்பினர், பொதுமக்கள் என, ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். நாங்கள், 40 அடி நீளத்துக்கு சுதந்திர கொடி தயாரித்து ஏந்தி சென்றோம். காட்டன் மார்க்கெட் பகுதியில் துவங்கிய ஓட்டம், பேண்டு வாத்தியம் முழங்க டவுன்ஹால் வழியாக, நஞ்சப்பா பள்ளியை அடைந்தது; அங்கு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர், காவல் துறை அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர். அனைவரும் பாராட்டும் வகையில் இந்நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழ் நடத்தியது.- சுதந்திர தின பொன் விழா ஓட்டத்தில் பங்கேற்ற கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன்

மக்களிடம் ஒற்றுமை உணர்வை

மேலாங்கச் செய்த மெல்லோட்டம்கடந்த, 2022ல் 'தினமலர்' நாளிதழ் சார்பில் நடந்த பவள விழா மெல்லோட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் திரண்டர்; எனது கல்லுாரி தோழர்களுடன் இணைந்து பங்கேற்றது, மனதுக்கு திருப்தியளிக்கும் வகையில் இருந்தது. தேச ஒற்றுமை, சகிப்புத்தன்மை உள்ளிட்ட பண்புகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருந்தது. தற்போதைய சூழலில் பல்வேறு உலக நாடுகளில், உள்நாட்டு போர், கலவரம் என பல பிரச்னைகள் நிலவுகின்றன; ஆனால், நம் நாடு அமைதி பூங்காவாக, மக்கள் மகிழ்வுடன் வாழ்கின்றனர்; இதுதொடர வேண்டும். அத்தகைய ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த இது போன்ற நிகழ்ச்சிகள் உதவும்.- பவள விழா ஓட்டத்தில் பங்கேற்ற திருப்பூரை சேர்ந்த நடராஜன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை