உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தினகரன், அன்புமணியுடன் அண்ணாமலை சந்திப்பு: பின்னணியில் அமித் ஷா?

 தினகரன், அன்புமணியுடன் அண்ணாமலை சந்திப்பு: பின்னணியில் அமித் ஷா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அன்புமணி மற்றும் தினகரனை சமாதானப்படுத்தும் பணியில், மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தலின்படி, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை ஈடுபட்டிருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b2ev44b3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தினகரனை சேர்க்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், அவரை தினகரன் விமர்சித்து வருகிறார். பா.ம.க.,வில், அன்புமணி மற்றும் ராமதாஸ் மோதல் காரணமாக, அக்கட்சி ஓட்டுகள் பிரியும் நிலை உள்ளது. இவை, தி.மு.க.,வுக்கு எதிராக, பலமான கூட்டணி அமைக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் திட்டத்தில், பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, தங்கள் கூட்டணிக்கு த.வெ.க., வரும் என்ற பழனிசாமியின் ஆசையும் நிறைவேறவில்லை. அதே நேரத்தில், அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேற்றப்பட்ட செங்கோட்டையன், த.வெ.க.,வில் இணைகிறார். இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை பலப்படுத்துவதற்கான பணிகளில், அமித் ஷா தீவிரம் காட்ட துவங்கி உள்ளார். இதனால் தான், தினகரன், அன்புமணி ஆகியோருடன் நல்ல நட்பில் இருக்கும், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, அவர்களை சமாதானப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். கரூரில் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் அ.ம.மு.க., பொதுச்செலயர் தினகரனையும், சென்னையில் கடந்த, 25ம் தேதி நடந்த தனியார் நிகழ்ச்சியில் பா.ம.க., தலைவர் அன்புமணியையும், அண்ணாமலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகள் பரஸ்பர சந்திப்பு என்றாலும், பின்னணியில் அமித் ஷா இருக்கிறார். அதன்படி, 'பழனிசாமிக்கு எதிராக கருத்து தெரிவிக்க வேண்டாம்; அவருடன், மேலிடத் தலைவர்கள் பேசி தங்களை விரைவாக கூட்டணியில் சேர்ப்பர்' என்று தினகரனிடம் அண்ணாமலை கூறியுள்ளார். இதுபோல, 'ஒருங்கிணைந்த பா.ம.க.,வை தொண்டர்கள் விரும்புகின்றனர். தந்தையுடன் இணைந்து செயல்படவும்' என, அன்புமணியிடம் அண்ணாமலை கூறியுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sun
நவ 27, 2025 10:16

தினகரன், ஓ.பி.எஸ், அன்புமணி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஒதுங்கி நிற்க காரணமே அண்ணாமலை கொடுத்த யோசனைப் படிதான் என அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள். அமித்ஷாதான் அரசியலில் கிங் மேக்கர், ராஜதந்திரி ஆயிற்றே? அவர்களை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அழைத்து வர வேண்டியது உன்னுடைய பொறுப்பு என அமித்ஷா அண்ணாமலைக்கு கட்டளை இட்டு இருக்கலாம்?


பாமரன்
நவ 27, 2025 09:00

என்னது நம்ம ஸார் தினகரன் மற்றும் அன்புமணியோட நல்ல நட்பில் உள்ளாரா?? ஆமாமாம் இவிங்க நட்பும் கேரக்டரும் காந்தி அம்பேத்கர் வல்லபாய் படேல் மாதிரி... அவ்ளோ சுத்தமானவங்க இந்த மும்மூர்த்திகள்..


M.Sam
நவ 27, 2025 08:48

முன்னணி கூட்டணிக்கு பின்னணி வேலையா


bharathi
நவ 27, 2025 08:31

Fate of BJP treating Annamalai like a broker is not a good sign. if he could have continued there is no necessary to ally with any of these dravidian party who has no ethics in politics and never allow a clean TN


Barakat Ali
நவ 27, 2025 08:29

மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் ..... ஆகவே எதிரணியில் யார் சேர்ந்தாலும் அக்கூட்டணி வெல்லும் .....


பாமரன்
நவ 27, 2025 09:01

நீங்க எதிரி கட்சி கூட்டணி கெலிக்கும்னு தானே சொல்றீக...???


vivek
நவ 27, 2025 05:59

பொய்ஹிந்துவின் கதறல் அருமை.....வாங்கும் இருநூறுக்கு பொருத்தமான கொத்தடிமை


திகழ் ஓவியன், AJAX AND
நவ 27, 2025 08:04

அவன் ஜெய் யும் அல்ல ஹிந்து வும் அல்ல. kothadimai மூர்க்கன்


பாமரன்
நவ 27, 2025 09:03

தோபார்ரா...


Mani . V
நவ 27, 2025 04:30

மூன்று காலி பெருங்காய டப்பாக்கள் சந்திப்பால் ஒரு பிரயோஜனமும் இல்லை.


kamal 00
நவ 27, 2025 08:28

நீ யாரு திராவிட கொத்தடிமைக்கு கதறல்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ