சென்னை: சீனாவிற்கு கிடைத்த அனுபவத்தால், கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலம் வடிவமைப்பில், பொதுப்பணித் துறை மாற்றம் செய்து, கட்டுமானம் செய்து வருகிறது.கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து, 950 மீட்டர் தொலைவில், விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை உள்ளது. திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு, 25 ஆண்டுகள் ஆகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5hfi1qyz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த இரண்டு இடங்களுக்கும் செல்வதற்கு, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் வாயிலாக, சிறிய சுற்றுலா கப்பல்கள் மற்றும் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. விரக்திகடல் சீற்றம் அதிகம் உள்ள நாட்கள், கடல்நீர் மட்டம் குறைதல் உள்ளிட்ட நேரங்களில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இதனால், திருவள்ளுவர் சிலைக்கு அருகில் சென்று பார்க்க முடியாமல், வெளி மாநில சுற்றுலா பயணியர் விரக்தி அடைகின்றனர்.எனவே, விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில், பொதுப்பணித் துறை வாயிலாக கண்ணாடி இழை பாலம் கட்டப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதற்கு அரசு, 37 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. அதில் பாலம் கட்டும் பணிகள் முடிந்து, ஓரிரு நாட்களில் கண்ணாடி இழை பொருத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள், இரவு, பகலாக நடந்து வருகின்றன.அதே நேரத்தில், கண்ணாடி இழை பாலம் என்று கூறிவிட்டு, 'டைல்ஸ்' கற்களை பயன்படுத்தி தரையும் அமைக்கப்பட்டு வருவது ஏன் என்ற கேள்வி  எழுந்துள்ளது.அது தொடர்பாக, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சீனாவில் உள்ள ஆற்றின் குறுக்கே, கழிமுகப் பகுதியில் ஒரு பிரபல நிறுவனம் கண்ணாடி இழை பாலத்தை கட்டியுள்ளது. முழுதும் கண்ணாடி பயன்படுத்தி கட்டப்பட்ட அந்த பாலத்தில் நடப்பதற்கு குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் அச்சப்படுகின்றனர். அச்சமின்றி நடக்கலாம்அதே நிறுவனத்தின் தொழிற்சாலை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. அந்நிறுவனம் வாயிலாகவே, கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சீனாவின் அனுபவத்தை அந்நிறுவன அதிகாரிகள், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, செயலர் மங்கத்ராம் சர்மா உள்ளிட்டோரிடம் எடுத்து கூறியுள்ளனர். கடலில் பாலம் கட்டப்படுவதால், மக்களுக்கு அச்ச உணர்வு அதிகரிக்கும் என்றும் விளக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, பாலத்தின் இரண்டு பகுதிகளில், டைல்ஸ் கற்களை பொறுத்தி விட்டு, நடுவில் கண்ணாடி இழையை பயன்படுத்தி, பாலம் கட்டுமானம் செய்யப்பட்டு வருகிறது.இதனால், பொது மக்கள் எந்த அச்சமும் இன்றி, இந்த பாலத்தில் நடந்து செல்லலாம்.இவ்வாறு அவர் கூறினார்.