உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வேட்பாளர்கள் பட்டியல் தயார்!

வேட்பாளர்கள் பட்டியல் தயார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மார்ச் இறுதி மற்றும் ஏப்ரலில் லோக்சபா தேர்தல் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் எப்போது என்றும், அது எத்தனை கட்டமாக நடைபெறும் என்றும், பிப்ரவரி மாதத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என சொல்லப்படுகிறது.இந்நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. திரிணமுல் மற்றும்காங்கிரஸ் கட்சிகளிடையே கருத்து வேற்றுமை உள்ளது.மேற்கு வங்கத்தில் அனைத்து தொகுதிகளிலும் தன் கட்சி போட்டியிடும் என்கிறார் மம்தா. இன்னொரு பக்கம், பஞ்சாபில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மியும், அந்த மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவித்துள்ளது.இதனால் காங்., மேலிடம் கடுப்பில் உள்ளது. 'இந்த விஷயங்களில் கவனம் செலுத்தாமல் பாத யாத்திரைக்கு தயாராகி விட்டார் ராகுல்' என, கட்சி சீனியர் தலைவர்களே புலம்புகின்றனர்.ஆனால் கூட்டணி கட்சிகளுடன் பா.ஜ., தொகுதி பங்கீட்டையும் இறுதி செய்து வேட்பாளர் பட்டியலை தயாரித்து விட்டதாம். இந்த மாத இறுதியில் பட்டியல் வெளியாகும் என்கின்றனர்.சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் இந்த முறையை கடைப்பிடித்து, முன்னரே வேட்பாளர்களை அறிவித்தது பா.ஜ., தலைமை. இதனால் கட்சிக்குள் எந்தவித குழப்பமும் இல்லை; பிரசாரம் செய்யவும் போதிய நேரம் கிடைத்தது. எனவே, இதே திட்டத்தை லோக்சபா தேர்தலிலும் கடைப்பிடிக்க பா.ஜ., முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Godyes
ஜன 07, 2024 11:19

நல்ல பொது சேவை செய்யும் எண்ணமுள்ள ஆளா பாத்து நிக்க வையுங்கப்பா. இனிமேலாவது நாடு உருப்படட்டும்.


M Ramachandran
ஜன 07, 2024 10:36

இளைய தள்ளைய முறைக்கு விட்டு கொடுத்து விலக மனமில்லையா


Veena
ஜன 07, 2024 13:03

இது என்ன கிரிக்கெட் போட்டியா? நாடு டா , நாடு..... 140 கோடி மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருக்கிறது. நல்ல திறமையும், எண்ணமும், அனுபவமும் உள்ளவர்கள்தான் ஒரு சமுதாயத்தையோ, நாட்டையோ காப்பாற்ற முடியும். அனைத்தும், BJP தலைமைக்குத்தான் உள்ளன.


G. P. Rajagopalan Raju
ஜன 07, 2024 22:12

தமிழ நல்லா கத்துக்க மனமில்லையா?


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி