உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பா.ஜ., அரசில் பதவி கேட்குது பா.ம.க., ராஜ்யசபா சீட் எதிர்பார்க்குது தே.மு.தி.க.,

பா.ஜ., அரசில் பதவி கேட்குது பா.ம.க., ராஜ்யசபா சீட் எதிர்பார்க்குது தே.மு.தி.க.,

தேர்தலுக்குப் பின், பா.ஜ., ஆட்சி அமைத்தால், பா.ம.க.,வுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவதாக உறுதி அளித்தால் தான் கூட்டணி என, பா.ம.க., நிபந்தனை விதிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.பா.ஜ.,வுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட அ.தி.மு.க., வலுவான கூட்டணியை அமைக்க முயற்சித்து வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி., நாம் தமிழர் கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சி பலன் அளிக்காததால், பா.ம.க., --------------------- தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வைக்க, அ.தி.மு.க., தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ccx4djp8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ம.க., - தே.மு.தி.க.,வுடன் பா.ஜ.,வும் பேசி வருகிறது. இதனால், எந்த கூட்டணியிலும் இல்லாத சிறிய கட்சிகளுக்கு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், சமீபத்தில் பா.ம.க., நிர்வாகிகள் சிலர், பா.ஜ., சங் பரிவார் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளுடன் பேசியுள்ளனர். அப்போது பா.ம.க., தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை:கடந்த 1998ல் வாஜ்பாய் அமைச்சரவையில் இடம்பெற்றது முதல், பா.ஜ.,வுடன் இணக்கமாகவே இருந்து வருகிறோம். 2014, 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் போட்டியிட்டோம். ஆனாலும், ஒரு எம்.பி., மட்டுமே உள்ள கட்சி எனக் கூறி, மத்திய அரசில் எந்த பதவியும் அளிக்காமல் விட்டு விட்டனர். ராஜ்யசபா உறுப்பினராக, பார்லிமென்டில் பா.ஜ., அரசுக்கு ஆதரவாக, எப்போதும் அன்புமணி குரல் கொடுக்கிறார். ஆனால், பார்லிமென்ட் நிலைக் குழு தலைவர், மத்திய அரசு வாரியத் தலைவர் என எந்த பதவியும் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், வரும் தேர்தலுக்குப் பின் பா.ஜ., ஆட்சி அமைத்தால், பா.ம.க.,வுக்கு மத்திய அமைச்சர் பதவி தர வேண்டும். இதற்கான உறுதியை பிரதமர் மோடி அல்லது அமித் ஷா அளித்தால் மட்டுமே கூட்டணி அமைக்க முடியும். இவ்வாறு பா.ம.க., தரப்பில் கூறப்பட்டுள்ளது.அதற்கு பா.ஜ., நிர்வாகிகள், 'தேர்தலுக்குப் பின் அமையும் ஆட்சியில், பா.ம.க.,வுக்கு கண்டிப்பாக முக்கியத்துவம் அளிக்கப்படும். பா.ம.க.,வின் கோரிக்கைகள், பா.ஜ., மேலிடத்தின் கவனத்திற்கு உரிய வகையில் கொண்டுச் செல்லப்படும்' என உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது.

பிரேமலதா நிபந்தனை

ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கினால், பா.ஜ., கூட்டணியில் சேர, தே.மு.தி.க., முடிவு செய்துள்ளது.தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., ஆர்வம் காட்டி வருகிறது. முன்னாள் அமைச்சர் வேலுமணி, சேலம் புறநகர் மாவட்டச் செயலர் இளங்கோவன் உள்ளிட்டோர் தனித்தனியாக பேச்சு நடத்தி வருகின்றனர். பிரேமலதா பிடி கொடுக்காமல் உள்ளார். அடுத்த மாதம், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு தெரிவிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.அதே நேரம், தே.மு.தி.க., நிர்வாகிகளில் பலர், பா.ஜ., அணியில் சேரவே விரும்புகின்றனர். 'விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் செய்தி வெளியிட்டதுடன், பத்மபூஷண் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இதெல்லாம் மறந்துவிட்டு, அ.தி.மு.க., பக்கம் போகக் கூடாது' என, அவர்கள் கொடி உயர்த்துகின்றனர்.அதையடுத்து, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட 15 மாநிலங்களில், 56 ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு பிப்., 27ல் தேர்தல் நடக்கவுள்ளது. இதில், ஏதாவது ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியை, தே.மு.தி.க.,வுக்கு வழங்க வேண்டும் என்றும், அதை ஏற்றால், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும், பா.ஜ.,வுக்கு பிரேமலதா தகவல் கூறியுள்ளதாக தெரிகிறது.பிரேமலதாவின் இந்த கோரிக்கையை எதிர்பார்க்காத பா.ஜ., தரப்பு, கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

K.Ramakrishnan
ஜன 31, 2024 21:59

நோகாம நொங்கு திங்கறது எப்படின்னு இந்த அரசியல்வாதிகள் கிட்டதான் பாடம் கத்துக்கணும். குறிப்பா ராமதாஸ் அதில் எக்ஸ்பர்ட். மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க முடியாது. அதனால இப்படி புறவாசல் வழியாக பார்லி.யில் நுழைய பார்க்கிறார்கள். மகன் அன்புமணியை இபபடித் தானே எம்.பி.ஆக்கிக்கொண்டே இருக்கிறாரு ராமதாஸ்... உங்க கட்சியில நியமன பதவிக்கு வேறு ஆளே கிடையாதா? இதுவும் வாரிசு அரசியல் தானே... புருஷன் இறந்து ஒரு மாதம் தான் ஆகுது. அதுக்குள்ள அரசியல் பேரம் துவங்கியாச்சா? அதுவும் 56ல் ஒன்று வேண்டுமாம். தமிழ்நாட்டில் அதற்கு சான்ஸே இல்லைன்னு இதர மாநிலத்தில் கேட்கிறாரே.. பிரேம் விவரமான ஆளு தான்..


தாமரை மலர்கிறது
ஜன 31, 2024 19:54

இந்தியா ஒரு சின்ன நாடு. இதை விட்டுவிடுங்கள். அமெரிக்காவில் தேர்தல் வருகிறது. அப்போது பிரேமலதா போட்டியிட்டால், பைடன் மற்றும் ட்ரம்பிற்கு நல்லா போட்டி கொடுக்க முடியும்.


Duruvesan
ஜன 31, 2024 18:54

பாஸ் படையாச்சி ஓட்டு இனியும் மருத்துவருக்கு கிடைக்குமா? எல்லாரும் அய்யா மேல மரியாதை வெச்சி பின்னாடி வந்தோம் நல்லது மக்களுக்கு செய்வாருன்னு, அன்பு சார் எங்க MP ஆகினோம். அவங்க தேர்தல் வந்தா எதுனா ஒரு கட்சி கூட்டணி, அவங்க நல்லா இருக்காங்க, மக்கள்? இனியும் திருந்தலைனா என்ன சொல்வது, எனது ஓட்டு கேப்டன் கட்சிக்கு இங்க நின்னா, இல்லைனா பிஜேபிக்கு. போதும்டா சாமி மருத்துவருக்கு காவடி தூக்கினது


Narayanan
ஜன 31, 2024 15:54

பாமக , தேதிமுக இரண்டுமே மக்கள் வங்கி இல்லாத கட்சிகள். அவர்கள் கேட்பதை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை


Sathyam
ஜன 31, 2024 14:44

தேவையை இல்லாத ஆணி ரெண்டுமே வேண்டவே வேண்டாம் ரெண்டு கட்சிகளும் இந்த வெட்டி ராமதாவூஸ் அவனோடபய்யன் தண்டமணி ஒரு மகா வீனா போன பேரவழை இவங்களுக்கு எம்பீ சீட் அமைச்சர் பதவி கேடா, குடுத்தாலும் அப்டியே தமிழ்நாட்டுக்கு என்னத்த கிழிச்சு புடுங்க போறே போங்கடா இருந்த இங்கே இல்லாட்டி கெட் அவுட் கெட் லாஸ்ட் போயி விஷ திமுக ஆதிமூக கிட்டே போயி பிச்சை ஏடு அவுங்க குடுப்பாங்க


duruvasar
ஜன 31, 2024 13:38

எதுக்குங்க இவ்வளவு பேச்சு, அதிமுக கூட்டணியில் சேர்ந்து, பா மா க வுக்கு நிதியமைச்சர் பதவியும், சதீஷுக்கு சபாநாயகர் பதவியையும் வாங்கிக்கொள்ளலாமே?


Sathyam
ஜன 31, 2024 18:55

ஹலோ ஆதிமூக இரட்டை இலை இனிமேல் மொட்டை இலை சாத்தியமா இந்த எடப்பாடி தேறவேமாட்டான் , இனி இந்த ஆதிமூக துரு பிடிச்ச கட்சி சீக்ரம் இறுதி சடங்கு தான்


மொட்டை தாசன்...
ஜன 31, 2024 13:01

இந்த கட்சிக்கு மரியாதை மற்றும் ஓட்டுவங்கி எல்லாமே கேப்டன் உள்ளவரைதான். இது புரியாமல் இந்தம்மா ஏக டிமாண்ட் வைக்கிறார். எல்லாம் பேராசை .


அசோகன்
ஜன 31, 2024 12:41

இருக்கிற 2 ஓட்டுக்கு இந்த அம்மாவுக்கு இருக்கும் ஆசையோ துணை பிரதமர் ஆக வேண்டும் என்று ???????????????? கண்டுக்காம விட்டா தானா அழிஞ்சி போய்டும்


தமிழ்
ஜன 31, 2024 12:12

பாமக, தேமுதிக இரண்டு கட்சிகளையும் யாரும் கண்டுக்காமல் விட்டுவிடவேண்டும்.அதிலும் இந்த பிரேமலதாவிற்கு ஆசை அதிகம். மேங்கோ பாய்ஸ்கு திமிர் மிகவும் அதிகம்.


Sathyam
ஜன 31, 2024 14:47

ஹலோ மாங்காய் எல்லாம் அழுகி நாத்தம் தான் வருது இந்த வெட்டி ராமதாஸ் வெட்டி தண்டமணி ரெண்டுமே தேவை இல்லாத ஆணி விஜயகாந்த பார்ட்டி ஒரு வெட்டி வீனா போன பார்ட்டி , போயி தொலையட்டும் திமுக ஆதிமூக கிட்டே போயி கெஞ்சி பிச்சை எடுக்கட்டும்


ram
ஜன 31, 2024 11:46

சசிகலா, தினகரன் மற்றும் சிறிய கட்சிகள் இருந்தால் போதும் பீ ஜே பி கூட்டணி கணிசமான இடங்களை பிடிக்கும்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை