உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் துவங்கும்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் துவங்கும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'நிலம் கையகப்படுத்துவதில் சுணக்கம், திட்டச் செலவு அதிகரிப்பு காரணமாகவே மதுரை எய்ம்ஸ் மருத்துவனை கட்டுவது தாமதமாகி விட்டது. மற்றபடி, விரைவில் கட்டுமானப் பணிகள் துவங்கும்' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின்போது விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாக்கூர் பேசுகையில், ''2019ல் பொதுத்தேர்தலுக்கு முன்பாக, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த மருத்துமனை கட்டுமான பணிகள் எப்போது முடியும்,'' எனக் கேட்டார்.இதற்கு பதிலளித்து, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார் பேசியாதவது:

தொடர்ச்சியாக இந்த கேள்வி கேட்கப்படுகிறது. இதற்காகவே, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவனையை விரைந்து கட்டி முடிக்க வேண்டுமென பிரதமரும் விரும்புகிறார்.மதுரை எய்ம்ஸ்க்கு நிலம் கையகப்படுத்தும் பணி தாமதமாகி விட்டது. மாநில அரசின் பணி அது. நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததும், துரதிஷ்டவசமாக கொரோனோ பேரிடர் காலம் வந்துவிட்டது.சைக்காவுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் திட்டம் அது. காலதாமதம் காரணமாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பட்ஜெட்டில் இருந்த தொகையானது, மேலும் அதிகரித்துவிட்டது. 1,200 கோடி ரூபாயாக இருந்த திட்டச் செலவு, தற்போது 1,900 கோடி ரூபாயாகி விட்டது. அந்த திட்டத்தின் ஆரம்பகட்ட ஆய்வு பணிகள் முடிந்து விட்டன.திட்ட நிர்வாக ஆலோசகர் நியமனமும் முடிந்து விட்டது. மாஸ்டர் பிளான் தயாராகி விட்டது. டெண்டர் விடும் பணியும் முடிந்து விட்டது. இதைப் பற்றி யாருக்கும் கவலை வேண்டாம்.நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலோ, திட்டச் செலவு அதிகரித்துவிட்டால், அதை மறுசீராய்வு செய்து புதிய நிதிஒதுக்கீடு செய்யப்பட்டாலோ, எந்த குறிப்பிட்ட திட்டமும் தாமதம் ஆவது வழக்கமானது தானே. அதுதான், மதுரை எய்ம்ஸ் விவகாரத்திலும் நடந்துள்ளது. மற்றபடி, அங்கு விரைவில் பணிகள் துவங்கும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.-- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Viswam
பிப் 10, 2024 20:24

வேறு எந்த மாநிலமாக இருந்தால் செங்கல் திருடாமல் இந்நேரம் இடம் கொடுத்து சூட்டோடு சூடாக ஆசுபத்ரியை கட்டிமுடித்து இருப்பார்கள்


vbs manian
பிப் 10, 2024 19:29

எப்படி பார்த்தாலும் இந்த அளவு தாமதத்தை நியாயப்படுத்தவே முடியாது. பல மாநிலங்களில் தொடங்கப்பட்டு இயங்குகின்றன.


Anantharaman Srinivasan
பிப் 10, 2024 16:18

செங்கலும் சிமெண்ட் மூட்டைகளும் ரெடி. மேஸ்திரி கொத்தனார் கிடைத்தவுடன் வேலை தொடங்கிவிடும்.


venugopal s
பிப் 10, 2024 15:13

டெல்லியில் இருந்து ஒவ்வொரு அமைச்சராக இங்கு வந்து இதே பொய்யைச் சொல்லி விட்டு செல்வதால் மட்டும் உண்மையை மறைக்க முடியாது!


A1Suresh
பிப் 10, 2024 12:20

ஜம்முவில் ஒரு எய்ம்ஸ் , காஷ்மீரில் ஒரு எய்ம்ஸ் என்று 3 வருடங்களில் கட்டி முடித்தாகிவிட்டது . ஏனெனில் அங்கு கவர்னர் ஆட்சி நடக்கிறது . ஆனால் இங்கோ நிலைமையே வேறு . எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி யின் மகத்துவமே அறியாத எட்டப்பாடியும் , சுடாலினும் முதல்வர்கள் . நிலம் ஒதுக்குவதில் இருந்து பல்வேறு அரசு அனுமதிகள் வரை அலைக்கழிப்பு, நேர விரையங்கள். எங்கே மத்திய அரசிற்கு நல்ல பெயர் வந்துவிடுமே என்ற அச்சம் .


Sampath Kumar
பிப் 10, 2024 11:01

பொய் பொய் வேலை ஆட்களுக்கு சம்பளம் கொடுக்க படுகிறது என்று பார்லிமென்டைல் வாய் கூசாமல் பொய் சொன்னது தவிர வேற ஏதுவும் தெரியாதஙதான் சொல்லுவார்


Venkataraman
பிப் 10, 2024 10:25

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு தாமதம் ஏற்படுவதால் எந்த பாதிப்பும் இல்லை. ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி இரண்டாண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மற்றபடி தமிழ்நாட்டில் மருத்துவமனைகளுக்கு பஞ்சமில்லை. மதுரையில் நிறைய மருத்துவமனைகள் இருக்கின்றன.


VARUN
பிப் 10, 2024 14:14

ஒண்ணுமே அறியாத மண்டன்


gayathri
பிப் 10, 2024 09:59

தொண்ணுற்றி ஐந்து சதவிகிதம் முடிந்து விட்டது.... சொன்னதாக ஞாபகம்.


sahayadhas
பிப் 10, 2024 09:57

கட்டினால் மத்திய அரசுக்கு நன்றி.


venugopal s
பிப் 10, 2024 09:19

இவர்கள் எப்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிப்பார்கள் என்பது முக்கியயமில்லை, எப்போது கட்ட ஆரம்பிப்பார்கள் என்பது தான் அந்த அயோத்தி ராமனுக்கே தெரியாத ரகசியம் !


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை