உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஓட கூட முடியாதவர்கள் ; பாகிஸ்தான் போலீஸ் பணிக்கு வந்தனர்

ஓட கூட முடியாதவர்கள் ; பாகிஸ்தான் போலீஸ் பணிக்கு வந்தனர்

கராச்சி: ஒரு கிலோ மீட்டர் கூட ஓட முடியாதவர்கள் பாகிஸ்தான் போலீஸ் பணிக்கு வந்தனர். தேர்வுக்கு வந்த பலர் மயக்கமுற்றனர். பாகிஸ்தான் ரயில்வே போலீஸ் படையினருக்கு புதிதாக 250 பேர் ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டது. 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இதில் 4 ஆயிரம் பேர் மட்டுமே தகுதி அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். லாகூரில் இருந்து வந்தவர்கள் 3,500 பேர். ஆயிரத்து 200 பேர் அடுத்தக்கட்ட தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளதாக ரயில்வே டிஐஜி அப்துல்ராப் தெரிவித்தார்.

சிலர் மயக்கமுற்றனர்

அவர் மேலும் கூறியதாவது: பணி தேர்வுக்கு ஆண்கள் பெண்கள் அழைக்கப்பட்டிருந்தனர். பலர் பிஸிக்கல் தேர்வுக்கு தகுதியற்றவர்களாக இருந்தனர். குறிப்பாக ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட பலரால் ஓட முடியவில்லை. குறிப்பிட்ட கால நிர்ணயத்திற்குள் பலரால் ஓட முடியாமல் தோல்வியுற்றனர். சிலர் மயக்கமுற்றனர். இவர்கள் பலர் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வந்த மொத்த நபர்களில் 75 சதவீதம் பேர் 'அன்பிட் 'டாக இருந்தனர். 25 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று அடுத்தக்கட்ட தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். என்றார்.

சமூகவலை தளங்களில் கேலி

இவ்வாறு இளைஞர்கள் தோல்வி குறித்து பாகிஸ்தான் சமூகவலை தளங்களில் பலர் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர். அடிப்படையில் இப்படி இருந்தால் இவர்களால் எப்படி நாட்டை காப்பாற்ற முடியும் என்றும் பதிவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ramesh Sargam
ஜன 19, 2025 21:02

ஆனால் குழந்தை அதிகம் பெற்றுக்கொள்வார்கள். அந்த சாமர்த்தியத்தை பத்தியும் நீங்கள் எழுதவேண்டும்.


தமிழ்வேள்
ஜன 19, 2025 20:52

போலீஸ் வேலைக்கு பாலியல் வன்முறையை தகுதி ஆக்கினால் பாகிஸ்தானில் அத்தனை முக்கால்களும் போலீஸார்களே...தகுதி நீக்கம் இல்லவேயில்லை


Sampath Kumar
ஜன 19, 2025 16:59

இங்கே மட்டும் என்ன வாழுது டாஸ்மாக் வந்த பிறகு பாதி போலீஸ்க்கு தொப்பை தொந்தி பெருத்து விட்டது அதை செய்தியபோட உங்களால் முடியுமா ? முடியாது அதுனால இந்த செய்தியை போட்டு ஆறுதல் அடைகிறீர்கள் போல


சிவம்
ஜன 19, 2025 16:56

ஒருத்தனுக்கு எழுந்து நடக்கவே வக்கில்லையாம்... என்னும் வடிவேலு ஜோக் தான் ஞாபகம் வருகிறது.


R. SUKUMAR CHEZHIAN
ஜன 19, 2025 15:57

BLA. என்கிற பலுஜிஸ்தான் விடுதலை படை போராளிகள் வராங்க என கூறி பார் எப்படி ஓடுகிறார்கள் என்று பாகிஸ்தான் கமாடோகளே தோத்து விடுவார்கள்.???????


Kundalakesi
ஜன 19, 2025 14:39

இங்க ஒரு போட்டி வெச்சு பார்ப்போமா. அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். நீ எப்படி ?


Sambath
ஜன 19, 2025 13:10

இவர்களின் தீவிர வாதம் இந்தியாவை பதம் பார்த்ததை விட பாகிஸ்தானை பாதித்தது அதிகம். பிறரை துன்புறுத்துபவர்கள் நன்றாக வாழ முடியாது. பிறரக்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்


அப்பாவி
ஜன 19, 2025 13:01

எப்புடி ஓட முடியும்? மூர்க்கனுங்க வெச்ச குண்டுல பொழச்சவங்கதானே கை கால்.போயி வேலைக்கு விண்ணப்பிச்சிருப்பாங்க.


xyzabc
ஜன 19, 2025 12:31

உருப்புடாத பசங்க. தீவிரவாதம் ஒன்றே புரியும்.


Padmasridharan
ஜன 19, 2025 09:56

75 சதவீதம் பேர் அன்பிட் டாக.. இதை மாத்துங்கோ ?? "அன்ஃபிட்" = un"F"it


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை