மேலும் செய்திகள்
பணி நிரந்தரம் கோரி மூன்றாவது நாளாக தொடர்ந்த செவிலியர்கள் போராட்டம்
18 hour(s) ago | 4
ஜி.கே.மணி தொகுதியில் களமிறங்கும் அன்புமணி?
20 hour(s) ago | 1
போதை பொருள் கடத்தல் வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் தேடப்பட்டு வருகிறார்.தமிழக தேர்தல் பிரசாரத்தில், இந்த விஷயத்தை பெரிதுபடுத்த உள்துறை அமைச்சர் அமித் ஷா முடிவெடுத்து உள்ளாராம்.தமிழகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு ஜாபர் எவ்வளவு நெருக்கம் என்பது உட்பட பல விஷயங்களை தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ., தலைவர்கள் பேசுவராம். அமலாக்கத்துறை, போதை பொருள் கடத்தல் தடுப்பு அமைப்பு, புதுடில்லி போலீஸ் என, பல அமைப்புகள் ஜாபர் விவகாரத்தை அலசி ஆராய்ந்து வருகின்றன.'ரெய்டில் என்ன கிடைத்தது... எப்படி போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டார்... இவருடைய கூட்டாளிகள் யார்.. தமிழக சினிமா உலகிற்கும், ஜாபருக்கும் உள்ள தொடர்பு என்ன? என, பல விஷயங்கள் வரும் நாட்களில் பத்திரிகைகளுக்கு கசிய விடப்படும்' என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.
18 hour(s) ago | 4
20 hour(s) ago | 1