உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மவுலிவாக்கம் கட்டட விபத்து: ஸ்டாலின் வழக்கு வாபஸ்?

மவுலிவாக்கம் கட்டட விபத்து: ஸ்டாலின் வழக்கு வாபஸ்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை, மவுலிவாக்கத்தில், 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவை முடித்து வைக்க கோர உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில், 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம், 2014ல் இடிந்து விழுந்தது. இதில், 61 பேர் பலியாகினர். இந்த விபத்தை தொடர்ந்து, அருகில் இருந்த மற்றொரு 11 மாடி கட்டடம், சில ஆண்டுகள் கழித்து இடிக்கப்பட்டது.விபத்து குறித்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மற்றும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்து உத்தரவிட்டார்.இந்நிலையில், 'சிறப்பு புலனாய்வு குழு விசாரணை திருப்தி அளிக்கும் வகையில் இல்லை; உண்மை குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில், குழு விசாரணை உள்ளது. 'எனவே, கட்டட விபத்து குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, அப்போதைய தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.கடைசியாக, 2017ல் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஏழு ஆண்டுகளுக்கு பின், நேற்று தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, முதல்வர் ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் , ''இந்த வழக்கில் ஏற்கனவே ஆஜரான வழக்கறிஞருக்கு பதிலாக ஆஜராக ஏதுவாக, 'வக்காலத்து' மனு தாக்கல் செய்ய இருப்பதால், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்,'' என்றார்.அப்போது, 'மாநில அரசுக்கு எதிராக, முதல்வர் வழக்கு தொடர முடியுமா? இந்த வழக்கை விசாரிக்க வேண்டுமா?' என, தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.அதற்கு, ''எதிர்கட்சி என்ற முறையில், அப்போது இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 'வக்காலத்து' தாக்கல் செய்தால் தான், தங்கள் தரப்பு கருத்தை முன் வைக்க முடியும்.''இந்த வழக்கை முடித்து வைக்க கோர உள்ளோம்,'' என, வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

ஆரூர் ரங்
ஜன 03, 2024 19:07

யாருடா சூனா பானா கஷ்டப்பட்டு கலைச்ச பஞ்சாயத்தை மறுபடியும்???? கூட்டச் சொல்லுறது?


rsudarsan lic
ஜன 03, 2024 17:48

Shame on Judiciary and nothing else. These things should have gone for an instant yes or no


Sami Sam
ஜன 03, 2024 17:26

இப்படியே மாறி மாறி திராவிடக் காட்சிகள் ரத்தமும் தக்காளி சட்னியும் என்ற நிலையில் இருந்தால் தமிழ் நாடு எப்படி உருப்படும் காப்பாற்றுவார் இல்லையா


Jai
ஜன 03, 2024 17:15

அன்னைக்கு அரசியலுக்கு போட்ட வழக்கு, அதை போய் இன்னைக்கு ஞாபகபடுத்திகிட்டு? GST, NEET-exam கொண்டு வந்ததை மறைத்து யாரோ கொண்டு வந்தது என்று நம்ப வைத்து ஓட்டு வாங்கியாச்சு? இந்த வழக்கு எம்மாத்திரம்?


Anand
ஜன 03, 2024 14:40

இதுவல்லவோ வழக்கு, செம காமெடி.....


theruvasagan
ஜன 03, 2024 14:31

சிபிஐ ஆகாசத்துல இருந்து குதிச்சதான்னு இப்ப கேக்குற .. வாய்கள்தான் அன்னிக்கு எதிர் அணியில் இருந்தபோது சிபிஐ விசாரணைதான் வேண்டும் என்று ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதிச்சு கூச்சல் போட்டன.


Kalyan Singapore
ஜன 03, 2024 13:42

நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் இப்போ எங்கிருக்கிறார் ? சென்னை உயர் நீதி மன்றத்தில் தானே ?


duruvasar
ஜன 03, 2024 12:30

அய்யோ, திமுகவின் வழக்கறிஞர் பிரிவின் வாதங்களை கேட்டால் எப்படி அத்தனை சட்ட புலிகளும் ஒரு சேர ஒரு அணியில் இருக்கிறார்கள் என்ற வியப்புத்தான் ஏற்படுகிறது.


பேசும் தமிழன்
ஜன 03, 2024 12:21

இவர்கள் எதிர்கட்சியாக இருந்த போது கெட்டவர்கள் என்று கூறிய ஆட்கள்..... இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நல்லவர்களாக மாறி விட்டார்களா ???


அஆ
ஜன 03, 2024 11:40

ஊத்தி முழுகுறதுனா என்னனு யாராவது கேட்டா இதை செல்லலாம். இனி எந்த கட்டடம் இடிந்தாலும் இந்த வக்கீல் பயலுக இந்த தீர்பை காட்டி தள்ளுபடி கேட்பாங்க.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ