மேலும் செய்திகள்
பிரிவினை, பாகுபாடு உணர்வுகளை அகற்றுவதே நல்லிணக்கம்: பாகவத்
18 hour(s) ago | 5
மோடி எதைச் செய்தாலும், அதை கடுமையாக விமர்சிப்பது எதிர்க்கட்சிகளின் வழக்கம். முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்ம ராவ் மற்றும் விஞ்ஞானி சுவாமிநாதன் ஆகியோருக்கு, தேசத்தின் உயரிய விருதான, 'பாரத ரத்னா' வழங்கியதை எதிர்க்கட்சிகள் விமர்சிக்க முடியாமல் திண்டாடுகின்றன. இதனால், பார்லிமென்ட் தேர்தலில் பா.ஜ.,விற்கு ஆதாயம் ஏற்படுமே என்கிற கவலையும் எதிர்க்கட்சிகளிடம் உள்ளது.காங்., முன்னாள் தலைவர் சோனியா, வேறு வழியில்லாமல், 'நான் வரவேற்கிறேன்' என, இரண்டே வார்த்தையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நரசிம்ம ராவ் இறந்த பின், அவரது உடலை காங்., அலுவலகத்தில் வைக்க அனுமதி மறுத்தவர் சோனியா.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fmybaylj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சரண் சிங்கின் பேரன் ஜெயந்த் சவுத்ரி, உத்தர பிரதேசத்தில், தேசிய லோக்தளம் கட்சியை நடத்தி வருகிறார். மேற்கு உ.பி.,யில் இந்த கட்சிக்கு ஆதரவு அதிகம்; காரணம், ஜாதி அரசியல். எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இருந்த ஜெயந்த், தற்போது பா.ஜ., கூட்டணிக்கு தாவுகிறார். கடந்த லோக்சபா தேர்தலில், மேற்கு உ.பி., தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற முடியவில்லை; தற்போது பாரத ரத்னா விருது வாயிலாக, அதை சரி செய்துவிட்டார் மோடி.அதே போல ஆந்திரா, தெலுங்கானாவிலும் நரசிம்ம ராவிற்கு அளித்துள்ள விருதால், பா.ஜ.,விற்கு லாபம் கிடைக்கும் என, கட்சி நம்புகிறது. தமிழக விவசாய விஞ்ஞானி சுவாமி நாதனுக்கு விருது வழங்கியதன் வாயிலாக, தமிழகம் மீது மோடி அதிக கவனம் செலுத்துகிறார் என்பதும் தெரிகிறது.
18 hour(s) ago | 5