உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வீடுகளில் மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு; 6 மாதத்தில் அமல்படுத்த வாரியம் தீவிரம்

வீடுகளில் மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு; 6 மாதத்தில் அமல்படுத்த வாரியம் தீவிரம்

சென்னை: வீடுகளில் மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கெடுக்கும் திட்டத்தை, ஆறு மாதங்களுக்குள் செயல்படுத்தும் வகையில், மின் வாரியம் துரித நடவடிக்கைளை மேற்கொண்டுஉள்ளது.தமிழகத்தில் வீடுகளுக்கு, 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது.

பேச்சு தாமதம்

சில ஊழியர்கள் தாமதமாக கணக்கெடுப்பது, நேரில் செல்லாமல் உத்தேசமாக கணக்கெடுப்பது உள்ளிட்ட செயல்களால், அரசின் சலுகைகளை பெற முடிவதில்லை. எனவே, மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கெடுக்கும் திட்டத்தை செயல்படுத்துமாறு, பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படும்' என, 2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. இத்திட்டம், இதுவரை செயல்பாட்டிற்கு வராத நிலையில், சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. எனவே, மாதந்தோறும் மின் பயன்பாட்டு கணக்கெடுப்பை, அடுத்த ஆறு மாதங்களுக்குள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, மின்வாரியத்திற்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாதந்தோறும் மின் பயன்பாட்டு கணக்கெடுப்பை, 2024 முதல் நடைமுறைக்கு கொண்டு வர, 'ஸ்மார்ட்' மீட்டர் திட்ட பணிக்கு, 2023ல், 'டெண்டர்' கோரப்பட்டது. அதில் பங்கேற்ற நிறுவனங்கள், புதுச்சேரியில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்கு குறைந்த விலை புள்ளி வழங்கிய நிலையில், தமிழகத்தில் அதை விட அதிக விலை புள்ளி வழங்கின. இதனால், விலை குறைப்பு பேச்சு தாமதமானது.இருப்பினும், எதிர்பார்த்த விலை கிடைக்காததால், ஒன்றரை ஆண்டுகளுக்கு பின், அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இதில், தாமதம் ஏற்படவில்லை எனில், தற்போது, ஸ்மார்ட் மீட்டர் செயல்பாட்டிற்கு வந்திருக்கும்.

ஏப்., 17 கடைசி நாள்

தற்போது, 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் திட்டத்திற்கு டெண்டர் கோரப்பட்டு உள்ளது. அதில், நிறுவனங்கள் பங்கேற்க, ஏப்ரல், 17 கடைசி நாள். அது, நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை. டெண்டர் ஆவணங்களை விரைந்து சரிபார்த்து, மூன்று - நான்கு மாதங்களுக்குள் தகுதியான நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கி, மாதம்தோறும் கணக்கெடுப்பு திட்டத்தை, ஆறு மாதங்களுக்குள் செயல்படுத்துமாறு, துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டு உள்ளார். அதற்கு ஏற்ப பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ethiraj
மார் 27, 2025 09:58

Monthly meter reading is there in Bangalore City for several decades TNEB introducing it late at high cost of replacing it with smart meters.Few years back only all old meters have been changed why this was not taken care.


Abdul Kabar
மார் 26, 2025 22:21

இந்த வாக்குறுதி மக்களுக்கு கொடுத்து நான்கு வருடம் ஆகிறது மக்களை முட்டாளாக்குகிறது இந்த அரசாங்கம்.


மின்சார கண்ணா
மார் 25, 2025 23:42

அப்பா சாமிகளா நீங்கள் எத்தனை மாதத்திற்கு ஒரு முறை ரீடிங் எடுங்க ஆனால் ஸ்லாப் கணக்கிட எத்தனை மாதம் இடைவெளி விட்டீங்ளோ அதால மொத்த யுனிட்டை வகுத்தால் போதும். உதாரணமாக வருடத்திற்கு ஒரு முறை ரீடிங் எடுத்தால் மொத்த யுனிட்டை 12 ஆல வகுத்து அந்த யுனிட் எந்த ஸ்லாபில் வருகிறதோ அதன்படி மொத்த மின் கட்டணம் கணக்கிடலாம்


எவர்கிங்
மார் 25, 2025 18:46

சும்மா வெட்டி உதார் இது


Varadarajan Nagarajan
மார் 25, 2025 16:29

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாக இவ்வளவுநாள் சொன்னதெல்லாம் பொய் என தங்களது இப்போதைய நடவடிக்கையும் அறிக்கையும் மக்களிடம் வெட்டவெளிச்சமாகிவிட்டது. அடுத்த தேர்தல் நெருங்கும்போதுதான் பழைய ஞாபகம் வரும்போல. இதுபோல நீட் தேர்வு, மதுக்கடைகள் மூடுதல் போன்ற தங்களது கோரிக்கைகளையும் மக்கள் மறக்காமல் நினைவில்வைத்துள்ளனர்


enkeyem
மார் 25, 2025 15:30

டெண்டர்களில் பேரம் படியவில்லை போலும்


kamal 00
மார் 25, 2025 14:40

கொத்தடிமை செயல்


M.Mdxb
மார் 25, 2025 14:05

வழக்கமான ஒன்னு கரெக்டா தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி ஒரு முடிவு என்ன பண்ணாலும் மக்களா ஒழித்துக்கட்டணும் திராவிட கட்சிகளை செய்வீர்களா செய் இல்லாட்டி உங்கள வச்சு அவர் செஞ்சுருவார்


Haja Kuthubdeen
மார் 25, 2025 11:12

இதை ஆட்சிக்கு வந்த ஒருவருடத்தில் நிறைவேற்றாமல் தூங்கி விட்டு இப்ப முடியும் தறுவாயில் செய்தால் என்ன அர்த்தம்???


hariharan
மார் 25, 2025 10:21

தேர்தல் முடியும். ஆனால் இவர்கள் திரும்ப வர முடியாது என இவர்களுக்கே தெரியும், ஆகையால் இப்பொழுது எந்த வாக்குறுதிகளைக் கொடுத்தாலும், வடிவேலு பாணியில் சொன்னால் அது ச்சும்மா...மக்களே உஷார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை