உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இன்னும் அவகாசம் தேவை; எதிர்பார்க்கிறது கோவை!

இன்னும் அவகாசம் தேவை; எதிர்பார்க்கிறது கோவை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை மாஸ்டர் பிளான் வரைவில், நிலப்பயன்பாடு வகைப்பாட்டில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதால், ஆட்சேபம் தெரிவிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுக்கத் துவங்கியுள்ளது.கோவை மாஸ்டர் பிளான், 30 ஆண்டுகளுக்குப் பின் புதுப்பிக்கப்படவுள்ளது. இதற்கான வரைவு தயார் செய்யப்பட்டு, கடந்த பிப்.,11ல் வெளியிடப்பட்டது.வரும் ஏப்.,11 வரை, மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, ஆட்சேபங்கள் மற்றும் ஆலோசனைகள் பெறப்படுகின்றன. கடந்த 11ம் தேதி வரை, மொத்தமே 300 ஆட்சேபங்கள் மட்டுமே வந்துள்ளன.நகர ஊரமைப்புத்துறை சார்பில், விவசாயிகள், கட்டுமானத் துறையினருக்கு நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத்தில், விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், கூட்டமே ரத்து செய்யப்பட்டது.உத்தேச கோவை - கரூர் பசுமை வழிச்சாலை, அன்னுார்-சத்தி பசுமை வழிச்சாலைகளுக்கான நிலங்களை, விவசாய விளைநிலத்தில் வரும் வகையில் குறித்துள்ளனர் என்று பலரும், கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.கள ஆய்வு செய்யாமல் அவசர கதியில் தயாரிக்கப்பட்டுள்ளதாக, கட்டுமானத் துறையினரும் புகார்களைக் குவித்து வருகின்றனர்.குறிப்பாக, நிலப்பயன்பாடு குறித்தே மிக அதிகளவிலான புகார்கள் எழுந்து வருகின்றன. பழைய வருவாய் கிராமங்களில் சர்வே நம்பர் தான், பத்திரங்களில் குறிக்கப்படும்; நகரங்களில் 'டவுன் சர்வே' ஆவணமாகும்போது, டி.எஸ்.எல்.ஆர்.,ஆக மாறிவிடும்; ஆனால் மாஸ்டர் பிளான் வரைவில், இந்த சர்வே எண்கள் குறிப்பிடுவதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளன.அங்கீகரிக்கப்பட்ட லே-அவுட்டில் உள்ள நிலங்களின் பயன்பாடுகளும் மாற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. பல திட்டச்சாலைகள் அழிக்கப்பட்டுள்ளன; பொது ஒதுக்கீட்டு இடங்கள் மறைக்கடிக்கப்பட்டுள்ளன. திட்ட வரைபடத்தில் உள்ள விரிவு அபிவிருத்தித் திட்டங்கள் (D.D.PLAN) மாற்றப்பட்டுள்ளன.குனியமுத்துாரில் 250 வீடுகள் கொண்ட ஒரு குடியிருப்புப் பகுதியை, வணிகப்பகுதி என்று மாஸ்டர் பிளான் வரைவில் குறிப்பிட்டிருப்பது பற்றி, கலெக்டரிடம் குடியிப்புவாசிகள் மனு கொடுத்துள்ளனர். திருச்சி ரோட்டில் ஒரு பிரபலமான மருத்துவமனையை, 'தொழிற்சாலைப் பகுதி' என்று மாற்றியுள்ளனர். அதேபோல, பல லே-அவுட்களில் பூங்கா, பொது ஒதுக்கீட்டு இடங்களை வேறு வகையான நிலப்பயன்பாடு என்று குறிப்பிட்டு இருப்பது பற்றி, குடியிருப்போர் நலச்சங்கங்களும் ஆட்சேபங்களைப் பதிவு செய்து வருகின்றன. உத்தேச ரோடு வரைபடங்களை, மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் ஆலோசிக்காமல் தயாரித்துள்ளனர். பல தரப்பிலும் கடும் அதிருப்தி எழுந்து வரும் நிலையில், கருத்துக்கேட்பு நடத்த முடியாத வகையில், தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டன. எனவே, மாஸ்டர் பிளான் வரைவு குறித்து ஆட்சேபம் தெரிவிக்க, தேர்தல் முடிந்தபின், மீண்டும் 60 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தன கோபால்
மார் 20, 2024 07:32

மாநகரில் உள்ள பள்ளிக்கு மேல் செல்லும் உயர் மின்சார 110 கம்பிகளை புதைவட கேபிளாக மாற்ற வேண்டும்


தன கோபால்
மார் 20, 2024 07:28

நன்றிகள்


தன கோபால்
மார் 20, 2024 07:27

நகரில் உள்ள உயர் மின்சார கேபிள் பள்ளிக்கு மேல் செல்வதை புதைவட கேபிளாக மாற்றி அமைக்க வேண்டும்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ