உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / துரைமுருகன் மகனை தொடர்ந்து நேரு மகனுக்கு மாவட்ட செயலர் பதவி?

துரைமுருகன் மகனை தொடர்ந்து நேரு மகனுக்கு மாவட்ட செயலர் பதவி?

தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்திற்கு, மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கியது போல், முதன்மை செயலர் நேருவின் மகன் அருண்குமாருக்கு, திருச்சி மத்திய மாவட்ட செயலர் பதவி வழங்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mruntsho&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எதிர்காலத்தில் துணை முதல்வர் உதயநிதிக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்பதற்காக, தி.மு.க.,வின் மூத்த மாவட்ட செயலர்கள், மூத்த அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு, மாவட்ட செயலர், ஒன்றிய செயலர் போன்ற முக்கிய பதவிகள் வழங்கப்படுகின்றன. சமீபத்தில், தி.மு.க., பொதுச்செயலரும், மூத்த அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்திற்கு, வேலுார் வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. துவக்கத்தில் மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டு, பின் மாவட்ட செயலர் பதவி வழங்கப்படும். இந்நிலையில், தி.மு.க., முதன்மை செயலரும், அமைச்சருமான நேருவின் மகனும், பெரம்பலுார் தொகுதி எம்.பி.,யுமான அருண்குமாருக்கு, மாவட்ட செயலர் பதவி வழங்குமாறு, அவரது ஆதரவாளர்கள் கட்சி தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை நேற்று அருண்குமார் சந்தித்து, தனக்கு மாவட்ட செயலர் பதவி வழங்கினால், சட்டசபை தேர்தலில் தனக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதனால், திருச்சி மத்திய மாவட்ட செயலர் வைரமணியின் பதவி பறிபோக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

சமீபத்தில், திருச்சி மத்திய மாவட்ட செயலர் வைரமணியை அழைக்காமல், அவர் பெயர் இல்லாமல், லால்குடியில் அருண்குமார் ஆதரவாளர்கள், 'பூத் ஏஜன்ட்' கூட்டத்தை நடத்தினர். இதனால், திருச்சியில் நடந்த, 'என் ஓட்டுச்சாவடி; வெற்றி ஓட்டுச்சாவடி' ஆலோசனைக் கூட்டத்தில், தன் மனக்குமுறலை வைரமணி வெளிப்படுத்தினார். அப்போது, 'மாவட்ட செயலராகிய என் படம், பெயர் இல்லாமல், சில நிர்வாகிகள் நிகழ்ச்சிகளை நடத்துவது, எனக்கு வருத்தமாக உள்ளது; வெளியே சொல்லவும் வெட்கமாக இருக்கிறது. மாவட்ட செயலர் பதவி பெரிதல்ல. கருப்பு, சிவப்பு வேட்டி கட்டிய இந்த வைரமணி, தி.மு.க.,வுக்கு துரோகம் செய்ய மாட்டான். 'நான் இறக்கும் போது, என் உடலில் தி.மு.க., கொடியை போர்த்த வேண்டும் என்பது தான் என் ஆசை. கட்சியில் பதவிக்கு தான் மரியாதை இருக்கிறது. என் சொந்த ஊரில், என் பெயர் போடாமல் கூட்டம் நடத்தினர். 'கட்சி உறுப்பினராக கூட இல்லாதவர்கள் பதவிக்கு வந்துள்ளனர். அவர்கள் எப்படி பதவி வாங்கினர் என்பதை, நான் சொல்ல விரும்பவில்லை. 'முதன்மை செயலருக்கு, மாவட்ட செயலர் மரியாதை தர வேண்டும். மாவட்ட செயலருக்கு, ஒன்றிய செயலர் மரியாதை தர வேண்டும். சில புல்லுருவிகள் செய்கிற செயல் வேதனை தருகிறது' என வைரமணி பேசினார். அவரது இந்த பேச்சு, கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமைச்சர் நேருவின் மகனுக்காக, தன் பதவி பறிக்கப்படும் என்பதை முன்கூட்டியே வைரமணி அறிந்து, இப்படி பேசினாரா என தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Easwar Kamal
நவ 07, 2025 21:56

இவர் கொள்ளை அடிச்சது பத்தாதுன்னு இப்ப்போ மவன்காரன் வேற இறக்கி விட்டாச்சு. இவங்க கொள்ளை எல்லாம் ஸ்டாலினுக்கு தெரியுமோ /தெரியாதோ ? யார் கண்டா ஸ்டாலினும் நம்மளை போல பத்திரிகை /ஊடகங்கள் மூலம் தெரிந்தோ என்னமோ ? அவரு இருந்தால் இந்த கயவர்களை ஒழித்து கட்டுங்கள். நாளை முன்னாள் முதல்வர் என்ற nilaykkum செல்லலாம். செய்கின்ற பாவங்கள் யாரு கேட்பர் என்று நினைக்க வேண்டாம். பின்னர் கொள்ளை அடித்த பணத்தை செலவழிக்க முடியாமலே போகலாம்.


JaiRam
நவ 07, 2025 20:58

விரைவில் காப்பு


Mr Krish Tamilnadu
நவ 07, 2025 18:59

நெடுநாள் கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் கட்சி கொடியை போர்த்தி, போவதற்கு தான் கட்சியை பிடித்து தொங்கி கொண்டு இருக்கிறீர்களா?. இதை போன்ற கழக தொண்டர்களால் தான் கழகங்கள் இன்னும் இயங்கி கொண்டு இருக்கின்றன. அது போதித்த சுயமரியாதை இங்கு அடிப்பட்டு போகிறதே. உங்கள் பதவி பறிப்பு, குடும்ப அரசியலில் ஆணி வேர் எங்கு உள்ளது என்பதை காட்டும்.


Naga Subramanian
நவ 07, 2025 15:54

திராவிட குடும்பத்தினர் அனைவரும், வாரிசு அரசியலில் களித்து மகிழ்கின்றனர்.


kamal 00
நவ 07, 2025 12:20

அப்பனும் மகனுக்கும் களி ரெடி உபயம் ED


ram
நவ 07, 2025 12:00

கொத்தடிமைகள் இந்த திருட்டு திமுகவில் இருக்கும் எதற்குஎடுத்தாலும் முட்டு கொடுக்கும் நபர்கள்.


அரவழகன்
நவ 07, 2025 11:15

வாரிசு அரசியல் ஓங்குக..


Oviya vijay
நவ 07, 2025 10:38

kothadimaigal ரொம்பவே குஷியாக முட்டு குடுப்பார்கள்


Madras Madra
நவ 07, 2025 10:37

ஆக குறு நில கொள்ளையர்கள் ஆட்சி தொடருது


Sun
நவ 07, 2025 10:06

தி.மு.க வில் தலைமை முதல் கீழ் மட்டம் வரை பதவிகள் பெற இரண்டு தகுதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். ஒன்று ஏற்கெனவே திமுகவில் கோலோச்சிக் கொண்டிருப்பவரின் வாரிசாக இருக்க வேண்டும் அல்லது அவர் அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்தவராக இருக்க வேண்டும். காலமெல்லாம் தி.மு.கவில் உழைப்பவர்களுக்கு கட்சிக் காரர்களின் திருமண விழா போன்ற விழாக்களில் கறிச் சோறும் மற்ற நேரங்களில் 200 ரூபாயும் மட்டுமே கிடைக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை