உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இண்டி இல்லாமல் வேறு கூட்டணி ஏன்?: ராகுல் கோபம்

இண்டி இல்லாமல் வேறு கூட்டணி ஏன்?: ராகுல் கோபம்

புதுடில்லி: சமீபத்தில், முதல்வர் விஜய் தலைமையில், மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி தொடங்கப்பட்டது. இதில், காங்., விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் காங்., இருந்தாலும், ராகுலுக்கு இதில் வருத்தம் என, சொல்லப்படுகிறது. 'இதுவரை ஏன் இண்டி கூட்டணியில் விஜய் சேரவில்லை; தனியாக ஒரு கூட்டணியை தொடங்க வேண்டிய அவசியம் என்ன?' என, அவர் கோபப்பட்டதாக சொல்லப்படுகிறது.இது தொடர்பாக, டில்லி காங்., மூத்த தலைவர் ஒருவர் தமிழக காங்., தலைவர் மாணிக்கம் தாகூரிடம் பேசி, ராகுல் வருத்தப்படுவதாக சொல்லியுள்ளாராம். 'இது தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான கூட்டணி மட்டுமே; இந்தியாவிற்கானது அல்ல' என, சொல்லியுள்ளார் தாகூர்.மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வை எதிர்த்து காங்., உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, தேசியவாத காங்., ஆகியவை இணைந்து, 'மகா விகாஸ் அகாடி' என்ற கூட்டணியை உருவாக்கி, சட்டசபை தேர்தலை சந்தித்தன. அதே போல் தான், இந்த தமிழக கூட்டணி என்கிறாராம் தாகூர்.ஆனால், இந்த பதிலால் ராகுல் சமாதானம் அடையவில்லை. இன்னொரு பக்கம், கூட்டணி தொடர்பாக மாணிக்கம் தாகூர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதால், அவருக்கு முக்கியத்துவம் கிடைத்து விட்டது என்றும், அது, த.வெ.க.,வினருக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கூட்டணி துவங்கிய அன்றே பிரச்னைகளும் ஆரம்பித்து விட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Nandakumar Naidu
செப் 13, 2026 04:39

இதில் விசித்திரம் என்னவெறால், மத வெறி பிடித்த கட்சிகள் எல்லாம் சேர்ந்து "மத சார்பற்ற" கூட்டணி ஆரம்பிக்கிறதாம். பணத்திற்காகவும், ஓசிகளுக்காகவும் வாக்குகளை உங்களை குழி தோண்டி புதைக்க நினைக்கும் இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள். இப்போது நடப்பதும் ஒருவகையில் ஹிந்து விரோத ஆட்சி தான்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ