உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை: கோவையில் தி.மு.க., அரசை வறுத்தெடுத்த இ.பி.எஸ்.,

தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை: கோவையில் தி.மு.க., அரசை வறுத்தெடுத்த இ.பி.எஸ்.,

கோவை: ''கடந்த நான்கு ஆண்டுகால ஸ்டாலின் மாடல் ஆட்சியைப் பற்றி ஒரே வரியில் சொல்வதானால், சிம்ப்ளி வேஸ்ட்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, கோவையில் நடந்த பிரசார சுற்றுப்பயணத்தில், தி.மு.க., அரசை கடுமையாக விமர்சித்தார்.'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தின் 2ம் நாளான நேற்று, கோவை வடக்கு தொகுதியில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அவர் பேசியதாவது:

அ.தி.மு.க.,வின் 10 ஆண்டு கால ஆட்சியில், கோவைக்கு ஸ்மார்ட் சிட்டி, கூட்டுக் குடிநீர் திட்டம், பாலங்கள் என அதிக திட்டங்களைத் தந்துள்ளோம். தி.மு.க., இந்த 4 ஆண்டு காலத்தில் ஒன்றுமே செய்யவில்லை. பொதுக்கூட்டங்களில் பேசும் ஸ்டாலின், அ.தி.மு.க., ஆட்சி இருண்ட கால ஆட்சி என்கிறார். கண்ணை மூடிக்கொண்டால் இருட்டாகத்தான்தெரியும் ஸ்டாலின்; கண்களைத் திறந்து பாருங்கள். அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டங்களை திறந்து வைத்து, ஸ்டிக்கர் ஒட்டுகிறது தி.மு.க.,

தி.மு.க.,வுக்கு பயம்

எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது என ஸ்டாலின் பேசுகிறார். நீங்கள் கூட்டணி பலத்தை நம்பி இருக்கிறீர்கள். நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம். மக்களுக்கு செய்திருக்கிறோம். எனவே, மக்கள் சிறந்த ஆட்சி எது என சீர்துாக்கிப் பார்த்து, 2026ல் எங்களுக்கு வாக்களிப்பர்.எங்கள் கூட்டணியில் குழப்பம் இல்லை. அ.தி.மு.க.,தலைமையில்தான் கூட்டணி. இ.பி.எஸ்.,தான் முதல்வர் வேட்பாளர் என அமித் ஷா தெளிவுபடுத்திவிட்டார். எங்களைப் பார்த்து தி.மு.க., கூட்டணிக்கு பயம் வந்துவிட்டது. நாங்கள் பலமாக இருக்கிறோம். இன்னும் கட்சிகள் வரும். 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

குப்பை அரசாங்கம்

200 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். மக்களுக்கு ஏதாவது செய்திருந்தால்தானே ஓட்டுப் போடுவர். எந்த திட்டத்தையாவது கோவைக்கு ஸ்டாலின் தந்திருக்கிறாரா? தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை. அவலமான ஆட்சி நடக்கிறது. மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. எல்லா வரிகளும் உயர்ந்துள்ளன. குப்பைக்கு வரி போட்ட ஒரே அரசு தி.மு.க., அரசுதான். இனி, தி.மு.க., அரசாங்கத்தை, 'குப்பை அரசாங்கம்' என்றே அழைப்போம்.

கோவில் சொத்து

கோவில்களில் உள்ள பணம், அவர்களின் கண்ணை உறுத்துகிறது. கோவில் வளர்ச்சிக்காக பக்தர்கள் கொடுத்த பணத்தை, கல்லுாரி கட்டுவதற்கு எடுத்து பயன்படுத்துகின்றனர். ஏன் அரசு பணத்தில் கல்லுாரி கட்ட முடியாதா. நாங்கள் கட்டினோமே. வேண்டுமென்றே, திட்டமிட்டே, கோவில் பணத்தை எடுத்து செலவிடுகின்றனர். இது எந்த விதத்தில் நியாயம்.வேளாண் பல்கலைக்குச் சொந்தமான, 222 ஏக்கர் நிலம் அருப்புக்கோட்டையில் உள்ளது. அங்கு ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கு பதிலாக, சிப்காட் அமைக்கப் போகின்றனர். சிப்காட் அமைக்க வேறு நிலம் இல்லையா. வேளாண் ஆராய்ச்சிக்கு நிலம் ஒதுக்கினால்தானே விவசாயம் வளரும்.அ.தி.மு.க., ஆட்சி அமைந்தால், பாரதியார் பல்கலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரியஇழப்பீடு வழங்கப்படும். ஸ்டாலின் ஆட்சி பற்றி ஒரே வரியில் சொல்வதானால், 'சிம்ப்ளிவேஸ்ட்'. இவ்வாறு, அவர் பேசினார்.முன்னாள் அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் உட்பட, கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருமா உள்மனசு ஆசை என்ன

பழனிசாமி மேலும் பேசுகையில், ''கம்யூ., கட்சிக்கு தமிழகத்தில் முகவரி இருக்கிறதா? கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வருகிறது. முத்தரசன், 'தமிழகத்தை எப்படி மீட்பீர்கள்' எனக் கேட்கிறார். தேர்தல் வாயிலாகவே மீட்கப் போகிறோம்.விடியா ஆட்சியை, கொடுமையான, குடும்ப ஆட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தை மீட்கப் போகிறோம். மா.கம்யூ., மாநில தலைவர் சண்முகம், 'மக்கள் பிரச்னைகளைத் தீர்க்காவிட்டால், தேர்தலில் வெல்ல முடியாது' என தி.மு.க.,வுக்கு எதிராக குரல் எழுப்பியிருக்கிறார். திருமாவளவன், 'அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வும் இணக்கமாக இல்லை' என்கிறார். எங்கள் கூட்டணியைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். எப்படியாவது கூட்டணி ஆட்சி அமையாதா என உங்கள் உள்மனம் ஆசைப்படுகிறது. வெளியே, வேறு மாதிரி பேசுகிறீர்கள். உங்கள் கூட்டணியில்தான் குழப்பம் உள்ளது,'' என்றார்.

'போதை மாடல் அரசு'

சாய்பாபா காலனி, சிந்தாமணி பஸ் ஸ்டாப் பகுதிகளில், இ.பி.எஸ்., வருகையை ஒட்டி, சாலையின் இருபுறமும் கட்சியினர் ஏராளமாக திரண்டிருந்தனர். அவர்களின் வரவேற்பை ஏற்று, இ.பி.எஸ்., பேசுகையில், ''இந்த, 50 மாத தி.மு.க., ஆட்சியில் வரியை அதிகப்படுத்தியதே சாதனை. தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து விட்டது. ஸ்டாலின் மாடல் அரசாங்கத்தை 'போதை மாடல்' அரசாங்கம் என்றே அழைக்க வேண்டும். விளம்பர மாடல் அரசு, போட்டோ ஷூட் அரசாக இருக்கிறது. மக்களைப் பற்றிக் கவலைப்படாத முதல்வர் ஸ்டாலின். வீட்டு மக்களைப் பற்றியே சிந்திக்கிறார். மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும். நடப்பது ஸ்டாலின் மாடல் அரசு அல்ல; 'பெய்லியர்' மாடல் அரசு,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

முருகன்
ஜூலை 09, 2025 17:05

உங்கள் ஆட்சியில் ஒரே நேரத்தில் இரு வேறு இடங்களில் நடந்த விபத்து இந்த ஆட்சியில் நடக்கவில்லை


ராஜா
ஜூலை 09, 2025 14:06

Eps ops IPs இருந்தாலும் அவர் சொன்னது சரி என்றார் எடுப்பார் கைப்பிள்ளை சாமி


angbu ganesh
ஜூலை 09, 2025 11:34

முதல்வருக்கே இல்ல அதன் லாரி லாரி யா போலீஸா கூப்பிட்டு போறார்


தனவேல்
ஜூலை 09, 2025 11:04

எடுபிடி அப்போ உபி போடா அங்கு பாதுகாப்பா இருக்கும்


P. SRINIVASAN
ஜூலை 09, 2025 10:20

முதலில் உன்னை காப்பாத்திக்கோ பிஜேபிடம் இருந்து. admk காணாமல் போய்விடும். மக்கள் உன்னை தூக்கியெறிவர்கள்


vivek
ஜூலை 09, 2025 14:02

உளறல் சீனு. திமுக 100 தொகுதிகளில் வீக் என்று முதல்வர் சொன்னார்...மற்ற தொகுதிகளில்...ரொம்ப வீக்....


pmsamy
ஜூலை 09, 2025 10:20

இ பி எஸ் அப்படின்னா என்ன


rameshkumar natarajan
ஜூலை 09, 2025 10:08

When EPS was in power Polachi Sex scandal was there, Koodanadu Loot was there, Tothukudi Shooting was there, all these are were safe to people? ADMK government allowed for joing in tamilnadu government services, tamil langauage was not required. What an injustice. can any sensible government will do that. After dmk government was formed, this was stopped by a GO. when our tamil youngsters were without job, EPS allowed other state people to join TN government services, for this injustice itself he should not be allowed to become CM in his entire life.


ஜூலை 09, 2025 06:53

தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை...என்பது தவறான கருத்து இ பி எஸ் .சார் .......கொலைசெய்பவர்கள் , போதை பொருள் விற்பவர்கள் , பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் , திருடர்கள் . ஊழல் செய்வோர் , மணல் கொள்ளை அடிப்போர்கள் .. மிகவும் பாதுகாப்பாக சுகமாகவும் நலமாகவும் ,வசதி வாய்ப்புடனும் ..இருக்கிறார்கள் .. இதை பாராட்ட உங்களுக்கு மனம் இல்லையா ?


Baba Bhagwaan
ஜூலை 09, 2025 14:31

super


SanthaKumar M
ஜூலை 09, 2025 22:04

ஏனென்றால் அவருக்குத் தெரியும், அவர் தனது ஆட்சியில் அனைத்தையும் செய்தார். அவர் அடுத்து ஆட்சி உருவாக்கினால் அதை மீண்டும் செய்வார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை