மேலும் செய்திகள்
மூன்றாண்டாக கோவில் வளாகத்தில் நடத்தப்படும் அரசு பள்ளி வகுப்புகள்!
15 hour(s) ago | 9
அல்வா கிண்டும் விவகாரம்: டில்லியில் தலைவலி!
22 hour(s) ago | 7
தமிழகத்தில் பட்டியலின கட்சிகளை ஒருங்கிணைக்க அமித் ஷா முடிவு
23 hour(s) ago | 16
சென்னை: தெற்கு ரயில்வேயில், கடந்த ஏழு மாதங்களில், முன்பதிவு இல்லாத பெட்டிகளில், 45 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். அனைத்து விரைவு ரயில்களிலும் தலா நான்கு முன்பதிவு இல்லாத பெட்டிகள் என்ற இலக்கை, தெற்கு ரயில்வே விரைவில் எட்டவுள்ளது. தெற்கு ரயில்வேயில், சென்னை உட்பட ஆறு கோட்டங்களில், 727 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில், பயணியரின் வருகை நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. விரைவு, குறுகிய துார பயணியர் ரயில்கள், மின்சார ரயில்கள் என, 1,400 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், 21.50 லட்சம் பேர் தினமும் பயணம் செய்து வருகின்றனர். பயணியர் பிரிவு வருமானத்தை முதன்மையாக வைத்து, தெற்கு ரயில்வே செயல்பட்டு வருகிறது. எனவே, கூடுதல் ரயில்கள் இயக்கம், பெட்டிகள் இணைப்பு அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 6 சதவீதம் குறிப்பாக, முன்பதிவு தேவையில்லாத ரயில்களில், குறைந்த கட்டணத்தில் அதிகமானோர் செல்வதற்கு வசதியாக, அதிக பெட்டிகளை இணைத்து இயக்க, தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் காரணமாக, கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை முன்பதிவு இல்லாத பெட்டிகளில், 45 கோடி பேர் பயணித்துள்ளனர். இதன் வாயிலாக, 1,200 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டில், இதே காலகட்டத்தில் கிடைத்த வருவாயை விட, 6 சதவீதம் அதிகம். இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் தலைமை வணிக மேலாளர் செந்தில்குமார் அளித்த பேட்டி: இந்திய ரயில்வேயின் மொத்த வருவாயில், சரக்கு பிரிவின் பங்களிப்பு 66.6 சதவீதம், பயணியர் பிரிவின் பங்களிப்பு 27.4 சதவீதம். ஆனால், தெற்கு ரயில்வேயில், பயணியர் பிரிவு வருமானம் 70 சதவீதமாகவும், சரக்கு பிரிவு வருவாய் 30 சதவீதமாகவும் இருக்கிறது. தெற்கு ரயில்வேக்கு பயணியர் பிரிவு வருமானம் தான் உயிர் நாடியாக உள்ளது. எனவே, பயணியருக்கான வசதியை ஏற்படுத்தி தருவதிலும், கூடுதல் ரயில்கள் இயக்குவதிலும், தொடர்ந்து கவனம் செலுத்தப்படுகிறது. நடப்பு நிதியாண்டில், மொத்த பயணியர் எண்ணிக்கை 77.41 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்தில் புதிதாக, 'அம்ரித் பாரத்' ரயில் சேவை துவங்கப்பட உள்ளது. இதற்கான வழித்தடம் தேர்வு நடந்து வருகிறது சென்னை வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால ரயில் இணைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, இறுதி கட்ட சோதனை நடந்து வருகிறது. வரும் ஜனவரி மாதத்துக்குள் பயன்பாட்டிற்கு வரும். புறநகர் மின்சார ரயில் சேவையில் பெரிய மாற்றம் ஏற்படும் சென்னை பரங்கிமலையில் மாநகர பஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயில், மேம்பால ரயில் வசதிகள் இடம்பெற உள்ளன. சென்ட்ரல், எழும்பூருக்கு அடுத்து, பொது போக்குவரத்து இணைப்பு வசதிகளுடன், அந்த பகுதி மாறி வருகிறது. பயணியர் வருகைக்கு ஏற்ப, வரும் ஆண்டுகளில் விரைவு ரயில்களுக்கும், பரங்கிமலையில் நிறுத்தம் வழங்கும் வாய்ப்பு உருவாகும்.
15 hour(s) ago | 9
22 hour(s) ago | 7
23 hour(s) ago | 16