உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கன்னியாகுமரி மாவட்டத்தை தவிர்த்த பழனிசாமி; அ.தி.மு.க.,-பா.ஜ., நிர்வாகிகள் அதிர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தை தவிர்த்த பழனிசாமி; அ.தி.மு.க.,-பா.ஜ., நிர்வாகிகள் அதிர்ச்சி

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பிரசார சுற்றுப்பயணத்தில், கன்னியாகுமரி மாவட்டம் இடம் பெறாதது, அம்மாவட்ட அ.தி.மு.க., - பா.ஜ., நிர்வாகிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5y3r993t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க, அ.தி.மு.க., முழுவீச்சில் தயாராகி வருகிறது. தமிழகம் முழுதும், மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை, கொங்கு மண்டலத்தில் பழனிசாமி துவக்கினார். சட்டபை தொகுதி வாரியாக, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், மக்களை சந்தித்து வருகிறார் . அவரது இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம், சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களுடன், வரும் 8ம் தேதி நிறைவடைகிறது. மூன்றாம் கட்ட சுற்றுப்பயணத்தை, வரும் 11ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்கி, திருப்பத்துார், சென்னை புறநகர் மாவட்டங்கள் சென்று, 23ம் தேதி நிறைவு செய்ய உள்ளார். பழனிசாமியின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பயணத்தில், கன்னியாகுமரி மாவட்டம் மட்டும் இடம் பெறவில்லை. கன்னியாகுமரி, நாகர்கோவில் தொகுதிகளில், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியும், பதம்நாதபுரம், விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல் தொகுதிகளில், தி.மு.க., - காங்., கூட்டணியும், கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றன. மீண்டும் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஏற்பட்டது, அம்மாவட்ட கட்சி நிர்வாகிகளிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இக்கூட்டணியால், வரும் தேர்தலில், விளவங்கோடு, கன்னியாகுமரி, நாகர்கோவில், கிள்ளியூர் தொகுதிகளில், வெற்றி உறுதி என, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் நம்புகின்றனர். இந்நிலையில், பழனிசாமி கன்னியாகுமரி மாவட்டம் வராதது, இரு கட்சியினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க.,வில் பல்வேறு கோஷ்டிகள் உள்ளன. சமீபத்தில், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலர் ஜான் ஜேக்கப் மாற்றப்பட்டு, ஜெயசுதர்சன் நியமிக்கப்பட்டார். இவர் மாவட்டச் செயலரானதும், திற்பரப்பு, திருவட்டாறு பகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள், தி.மு.க., - த.வெ.க., போன்ற கட்சிகளுக்கு ஓட்டம் பிடித்துள்ளனர். பூ த் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம், கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் சரியாக நடக்கவில்லை. போலி உறுப்பினர்கள் சேர்க்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பழனிசாமி வந்தால், கட்சியினர் மத்தியில் கோஷ்டி சண்டை வலுக்கும் என்பதால், அங்கு வருவதை தவிர்த்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

P. SRINIVASAN
ஆக 04, 2025 17:09

இந்த டம்மி பட்டாசு எங்கே போனாலும் வேலைக்காகாது


Muthu Kumar
ஆக 04, 2025 16:21

எடப்பாடிக்கு அதிமுக ஆட்சி பிடிக்க வேண்டியது முக்கியம் இல்லை. தலமைப் பதவிக்காக எதையும் செய்து, அதன் அடிப்படையில் கட்சியை அழிக்க வேண்டும். அப்படித்தானே நடந்து கொண்டு இருக்கிறது. எம்ஜிஆர் & ஜேஜே எப்படி கட்சியை எதிரானவர்களையும் வழி நடத்தி வெற்றி பாதையில் கொண்டு சென்றார்கள். இப்போது டெட் பாடி எப்படி அழித்து ஒழித்து வருகிறது. எனவே தான் பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.


Sakthi
ஆக 04, 2025 09:10

அ.தி.மு.க. வை அழிக்க இருப்பது எடப்பாடி palaniswamy தமிழக -பா.ஜ.வின் தற்போது இருக்கும் ஓட்டை குறைப்பது நையனார் நாகேந்திரன் .


Arul Narayanan
ஆக 04, 2025 08:38

அந்த மாவட்டத்தில் அதிமுகவிற்கு ஓட்டு இல்லை. தொகுதி பங்கீட்டில் பாஜகவிற்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப் படும் என்பதால் அந்த மாவட்டத்தை ஒதுக்கியது அவரது வழக்கமான அலட்சியமும் இறுமாப்பும் தான்.


S.L.Narasimman
ஆக 04, 2025 07:40

மதத்தலைவர்கள் வழிபாடு தலங்களில் சொல்வதை வேதவாக்காக நம்பி வோட்டு போடும் இடங்களில் நேரம் காலத்தை வீணாக செலவிட வேண்டாமென எடப்பாடியார் எண்ணி இருக்கலாம்.


ராஜா
ஆக 04, 2025 07:19

தென் மாவட்டங்கள் என்றாலே மலைக்கும் ,மலைசாமிக்கும் அலர்ஜி என்று சொல்வார்கள்,நிஜமாகவா


jeyakumar
ஆக 04, 2025 06:18

மிக மிக நல்ல ஒரு முடிவு, கல்வி அறிவு உள்ளவர்கள் சுயநலம் பிடித்தவர்கள் ஒருபோதும் அடுத்தவர்களுக்கு உதவமாட்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை