உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பலிக்காமல் போன பன்னீர் துாது: மாற்றி யோசிக்கும் ஆதரவாளர்கள்

பலிக்காமல் போன பன்னீர் துாது: மாற்றி யோசிக்கும் ஆதரவாளர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி விடாப்பிடியாக மறுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பன்னீர்செல்வம், பழனிசாமி என இரட்டை தலைமையின் கீழ் இருந்த அ.தி.மு.க., கடந்த 2022ல் பழனிசாமியின் ஒற்றை தலைமையின் கீழ் வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பன்னீர்செல்வம், 2011 ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். அத்துடன், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். கட்சியில் தன் ஆதரவாளர்களுடன் இணைய, பழனிசாமிக்கு துாது மேல் துாது விட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், பழனிசாமி தொடர்ந்து நிராகரித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.,வும் பன்னீர்செல்வத்தை கழற்றி விட்டுள்ளதால், அவருடைய ஆதரவாளர்கள் மாற்றுக் கட்சிகளுக்கு செல்லும் யோசனைக்கு வந்துள்ளனர். இது குறித்து, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலுக்குள், வலுவான கூட்டணியில் இருக்க வேண்டும் அல்லது அ.தி.மு.க.,வில் சேர்ந்துவிட வேண்டும் என்பதில் பன்னீர்செல்வம் உறுதியாக இருக்கிறார். ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை என தெரிகிறது. அதனால், இனியும் பன்னீரை நம்பி பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு அவருடைய ஆதரவாளர்கள் வந்துள்ளனர். அனைவரும் மாற்றி முடிவெடுக்க திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Anbilkathiravan
ஆக 28, 2025 18:27

பன்னீரை தவிர அனைவரும் ஆ தி மு க வில் சேரலாம் .


Vijay D Ratnam
ஆக 28, 2025 17:07

திமுக போல, காங்கிரஸ் போல, பாமக, தமாகா, மதிமுக, தேமுதிக போல வாரிசு அரசியல், குடும்ப அரசியல், பரம்பரை அரசியல் என்ற பச்சை அயோக்கியத்தனத்தை கொண்டு வர முயற்சித்த ஓ.பன்னீர்செல்வம் இன்று அரசியலில் அட்ரஸ் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டு அரசியல் அநாதை ஆகிவிட்டார். அதிமுகவின் ப்ளஸ் பாய்ண்ட் அது வாரிசு அரசியலுக்கு, குடும்ப அரசியலுக்கு எதிரானது என்பதுதான். அதிமுக அதன் அடுத்த தலைவரை அந்தக்கட்சியே தேடி கொண்டு வந்து நிறுத்தும் வல்லமை பெற்றது . பாவம் ஓபிஎஸ், அவரை பார்த்து மவனை தூக்கிட்டு திரியும் ஜெயக்குமார் போன்றவர்கள் திருந்தனும். அப்பனுக்கு பிறகு மவன், பேரன், கொள்ளுப்பேரன் வந்து உட்கார இது திமுக அல்ல.


Kovandakurichy Govindaraj
ஆக 28, 2025 15:58

ஓபிஸ்க்கு இருக்கும் ஒரே கடைசி வாய்ப்பு டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்து விடுவது தான் .


Sun
ஆக 28, 2025 14:35

தனக்கும் ,தன் மகனுக்கும் ஒரு அரசியல் புகலிடம் வேண்டும். அதற்காக பா.ஜ.க உறுப்பினர் போல் பா.ஜ.கவிடம் விழுந்து கிடந்தார், ஸ்டாலின் வீட்டு கதவைத் தட்டினார், எப்படி, எப்படியோ எடப்பாடியிடம் தூது விட்டார். எந்தக் கதையும் நடக்கல. பாவம் இவரை நம்பி சென்றவர்கள்.


aaruthirumalai
ஆக 28, 2025 13:57

ஹீ ஹீ ஹீ


ramesh s
ஆக 28, 2025 12:55

அ தி மு க விற்கு துரோகம் செய்ய வேண்டும் என்பதில்லை. துரோகம் செய்ய நினைத்தால் கூட அதன் தொண்டர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். அ தி மு க ஆட்சிக்கு எதிராக ஓட்டளித்தது கட்சி தலைமை அலுவலக கதவை உடைத்தது கட்சியின் சின்னத்தை முடக்கியது கட்சியின் அரசியல் எதிரி ஸ்டாலினை சந்தித்தது பின் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று சொன்னது. பச்சை துரோகி.


Premanathan S
ஆக 28, 2025 10:44

இனி போக்கிடம் வேறில்லை


பாலாஜி
ஆக 28, 2025 10:01

அரசியல் வாழ்க்கை இனி உங்களுக்கு இல்லை ஓபிஎஸ்.


V RAMASWAMY
ஆக 28, 2025 09:32

அது குதிரையே அல்ல, பின் என்ன மண் குதிரை? ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது போல, அந்தக்காலத்தில் நல்லவர் என்று கருதி அம்மா அவர்கள் தற்காலிக முதல்வர் என்று அவ்வப்போது இவரை நியமித்ததால் இவர் உடனே எதிர்கால முதல்வர், கட்சி தலைவர் என்று தானே நினைத்துக்கொண்டு செயல்பட்டு மூக்கை அறுத்துக்கொண்டு விழிக்கிறார்.


VENKATASUBRAMANIAN
ஆக 28, 2025 07:51

மண் குதிரை யை நம்பி யாரும் வரமாட்டார்கள்.


சமீபத்திய செய்தி