உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க.,வை அட்டாக் செய்த பிரதமர்: 4 ஆண்டுகளில் இதுவே முதல்முறை

தி.மு.க.,வை அட்டாக் செய்த பிரதமர்: 4 ஆண்டுகளில் இதுவே முதல்முறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில், அக்கட்சியினர் குறித்து முதன்முறையாக பிரதமர் மோடி, பாம்பன் பாலம் திறப்பு விழாவில் கிண்டலும், கேலியுமாக பேசியதோடு, மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து பேசும்போது, 'முதலில் தமிழில் கையெழுத்திடுங்கள்; பின், மருத்துவப் பாடத்தை தமிழில் கொண்டு வாருங்கள்' என பேசினார்.

விமர்சித்ததில்லை

நேற்று முன்தினம் ராமேஸ்வரம் பாம்பன் ரயில் புதிய பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த எந்த அரசு நிகழ்ச்சியிலும், தமிழக அரசை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிரதமர் மோடி விமர்சித்து பேசியதில்லை. சமீபகாலமாக, மும்மொழி கொள்கை மற்றும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தி.மு.க., தரப்பு செயல்பாடுகள் எதற்கும் பிரதமர் மோடி, எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தான், பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவிற்காக தமிழகத்திற்கு, மோடி நேற்று முன்தினம் வந்தார். முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவும், ராஜ கண்ணப்பனும், நிகழ்ச்சி முடியும் வரை இறுக்கமாகவே காணப்பட்டனர். காரணம், நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, முதன்முறையாக அரசு நிகழ்ச்சி ஒன்றில் தி.மு.க.,வை மறைமுகமாக அட்டாக் செய்தார். 'தமிழக ரயில்வே திட்டங்களுக்காக, முன்பு இருந்ததை காட்டிலும் துறை சார்பில் 7 மடங்கிற்கு கூடுதலாக நிதி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பத்தாண்டுகளில், ஏராளமான நிதி வழங்கப்பட்டுஉள்ளது.

தமிழில் பாடத்திட்டம்

'நிதியை வாரிக் கொடுத்தாலும், சிலருக்கு காரணமே இன்றி அழும் பழக்கம் இருக்கிறது. அவர்கள் அழுதுகொண்டே இருக்கட்டும்; அவர்களால் அழத்தான் முடியும்' என கிண்டலாக கூறிய போது, மேடையில் இருந்த தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நெளிந்தார். அதே நிகழ்ச்சியில், தமிழக அரசின் மும்மொழி கொள்கையை விமர்சிக்கும் வகையில் பேசிய மோடி, 'தமிழ் மொழி மீது பற்று இருப்பதால்தான், அதன் கலாசாரத்தை உலகளவில் கொண்டு போய் சேர்த்து உள்ளோம். 'தமிழகத்தில் இருந்து சில தலைவர்கள் கடிதம் எழுதுகின்றனர். ஆனால், அது ஆங்கிலத்தில் தான் உள்ளது. 'கையெழுத்தும் ஆங்கிலத்திலேயே போடப்பட்டிருக்கிறது. 'அந்த தலைவர்கள், கையெழுத்தையாவது தமிழில் போட்டு, கடிதம் அனுப்பக்கூடாதா?' என்றார். தி.மு.க., அரசு, 'நீட்' தேர்வு விவகாரத்தில் அரசியல் செய்து வரும் நிலையில், அதற்கும் பதில் அளிப்பது போல பேசிய பிரதமர், 'ஏழை மாணவர்களுக்கும் மருத்துவ கல்வி கிடைக்கும் வகையில், தமிழில் பாடத்திட்டங்களை தி.மு.க., அரசு கொண்டு வரவேண்டும்' என கூறினார்.பிரதமரின் இப்பேச்சு, தி.மு.க., தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சொல்லுங்க உங்க முதல்வரிடம்'

பாம்பன் பால திறப்பு விழா நிகழ்ச்சி முடிந்து, மதுரை புறப்படுவதற்காக கிளம்பிய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் சார்பில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசுவை, தன் அருகில் அழைத்தார். பின், 'எங்கே உங்கள் முதல்வர்?' என கேட்டுள்ளார். 'ஊட்டியில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றுள்ளார்' என, தங்கம் தென்னரசு கூறியுள்ளார். 'இங்கே நடந்து முடிந்திருப்பது அரசு நிகழ்ச்சி; அரசியல் நிகழ்ச்சி அல்ல; நாட்டின் வளர்ச்சிக்கான நிகழ்ச்சி. இதை, உங்கள் முதல்வரிடம் சொல்லுங்கள்' என, கொஞ்சம் கடுமையான குரலில் கூறிச் சென்றுள்ளார்.பிரதமரின் இந்த ஆவேசம், அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கூடியிருந்தோரை அதிர்ச்சியடைய வைத்ததாக கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

ram
ஏப் 08, 2025 17:09

எப்படி கழுவி ஊத்துனாலும்... எங்களுக்கு.. No சூடு... No சொறனை... நாங்க அப்படித்தான்... இதுக்கெல்லாம் கோபப்பட்டா பணம் சம்பாதிக்க முடியாது...


Oviya Vijay
ஏப் 08, 2025 08:55

தமிழகத்தில் மோடி அலை என்ற ஒன்று என்றைக்குமே இல்லை. அவரே பாவம்... கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தட்டுத் தடுமாறி தன் சொந்த தொகுதியிலேயே ஜெயித்திருக்கிறார். மேலும் அவர் நடத்துவது மைனாரிட்டி கவெர்மென்ட்... இன்னமும் நான்கு ஆண்டுகள் இருக்கிறது... நடுவில் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம்... தன் நிலை அறிந்து பேசுவது நல்லது...


vivek
ஏப் 08, 2025 10:56

அப்போ திமுக தனியா தேர்தல்ல நிக்குமா ... சொல்லேன்


Raman Sinnappanaidu
ஏப் 08, 2025 16:49

எந்த உலகத்தில் இருக்கிறீர் அம்மையாரே? கண் திறந்து பாருங்கள். காது கொடுத்துக் கேளுங்கள். கண்ணிருந்து குருடாகவும், காத்திருந்தும் செவிடாகவும் உலவாதீர்கள்.


C.SRIRAM
ஏப் 10, 2025 21:42

நீங்க முதலில் உண்மையான நிலையை அறிந்து கருத்து போடுங்க


ஆரூர் ரங்
ஏப் 08, 2025 08:55

பிரதமர் திடீர்ன்னு ஏதாவது கேள்வி கேட்டிருந்தால் என்ன செய்ய? எதைப் பார்த்து பதில் சொல்ல?


venugopal s
ஏப் 08, 2025 08:52

பாஜகவின் எந்த வித்தையும் தமிழக மக்களிடம் பலிக்க வில்லையே என்ற விரக்தியின் வெளிப்பாடு தான்! அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரை இனியும் இதுபோல் நிறையவே பார்க்கலாம்!


varatharajan
ஏப் 08, 2025 08:30

ஸ்கிரிப்ட் கரெக்டா எழுதி கொடுத்தால் தானே படிப்பாரு அரசு விழாவா அரசியல் விழாவா என்று தெரியாத....


திகழ் ஓவியன், Ajax, Ontario
ஏப் 08, 2025 07:56

234 லும் வேஸ்ட் 40 க்கு 40 தும் வேஸ்ட். ஒரு அணியும் முடியாது. வெறும் ஊசிப்போன ஆரியம், வெங்காயம் அப்டின்னு இன்னும் 2000 வருசம் உருட்டலாம். வாய்ப்பு இல்லை ராஜா


Oviya Vijay
ஏப் 08, 2025 06:51

பிஜேபி மோடியை வைத்து தமிழகத்தில் எத்தனை ரோடு ஷோ நடத்திக் காட்டியும் ஒன்றும் எடுபடாமல் நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்று திமுக கூட்டணி அள்ளியது தமிழகத்தில் திமுக எந்த அளவிற்கு வலுவாக உள்ளது என்பதை பிஜேபி ட்ராமா கம்பெனியும் நன்கு அறியும்... இதோடல்லாமல் ராகுல் வேறு பிஜேபியை பார்த்து நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒருமுறை கூட தமிழகத்தை ஆள முடியாது என நாடாளுமன்றத்தில் முன்பு ஒருமுறை முழங்கியது பிஜேபியை மிகவும் நெருக்கடிக்கு ஆளாக்கி அவர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது என்றே கூற வேண்டும். என்னால் உறுதியாக ஒன்றை மட்டும் கூற முடியும்... தமிழகத்தில் பிஜேபி யாருடன் கூட்டணி வைத்தாலும் பிஜேபி இருக்கும் கூட்டணி கண்டிப்பாக தோற்கும்... அதில் மாற்றம் இல்லை...


vivek
ஏப் 08, 2025 07:09

காலைல ஒரு மொக்கை கருத்தை போடுது... 200 ரூபாய் வாங்கிட்டு. கெலம்பு ...


vivek
ஏப் 08, 2025 07:10

ஏதாவது போடுங்கப்ப


ஆரூர் ரங்
ஏப் 08, 2025 07:53

15 ஆண்டுகளுக்கு முன் திரிபுராவில் பிஜெபி என்ற கட்சியே இல்லை. இப்போது அம்மாநிலத்தின் ஆட்சி பீடத்தில் பாரதீய ஜனதா உள்ளது. மாற்றம் ஒன்றே மாறாதது. அடுத்த ஆண்டே இங்கும் மாறுதல் வரும்.


Kumar
ஏப் 08, 2025 05:58

அரசு நிகழ்வு ஏன் மோடி அரசியல் பேசினார்


K.SANTHANAM
ஏப் 08, 2025 05:57

விழா மேடையிலேயே பிரதமர் தமது கண்டிப்பை தெரிவித்திருக்க வேண்டும்.


vinoth kumar
ஏப் 08, 2025 05:34

கட்டதுரை பாடிக்கு கோபப்பட்டா , டோப்பா கைப்புள்ள பாடி தாங்காது , அதுக்கு பயந்துதான் வரலை.


சமீபத்திய செய்தி