மேலும் செய்திகள்
எஸ்.ஐ.ஆர்., பணியில் தி.மு.க.,வினர் மிரட்டல்
6 minutes ago
அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி மலருமா?
2 hour(s) ago
சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாசும், தலைவர் அன்புமணியும் போட்டி போட்டு போராட்டம் அறிவித்துள்ளதால், அக்கட்சி நிர்வாகிகள் தர்மசங்கடமான நிலையில் உள்ளனர். பா.ம.க.,வில் அப்பா -- மகன் இடையே ஏற்பட்ட மோதலால், இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுதும், 100 நாட்கள் நடைபயணத்தை முடித்துள்ள அன்புமணி, வன்னியர் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி, வரும் டிசம்பர் 17ல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். அதே கோரிக்கையை வலியுறுத்தி, வரும் டிசம்பர் 12ல், தமிழகம் முழுதும் கலெக்டர் அலுவலகங்கள் முன், பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ராமதாஸ் அறிவித்துள்ளார். 'தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் இந்தப் போராட்டம் இருக்கும்' என்றும் ராமதாஸ் கூறியிருக்கிறார். இரு தரப்பினரும் நடத்தும் போராட்டங்களுக்கு, இரு தரப்பில் இருந்தும், பா.ம.க., வன்னியர் சங்க நிர்வாகிகள் போராட்டத்தை நோக்கி முடுக்கப்படுவதால், அவர்கள் தர்மசங்கடத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர். 'ராமதாஸ் அறிவித்துள்ள போராட்டம் பெயரளவிலானது. அதனால், வன்னியர்களுக்கு எந்த நன்மையும் நடக்கப் போவதில்லை; ராமதாஸ் நடத்தும் போராட்டத்துக்கு செல்ல வேண்டாம்' என, அன்புமணி தரப்பினர் பா.ம.க.,வினரை உசுப்புகின்றனர். இதையறிந்த ராமதாஸ் தரப்பினர், 'அன்புமணி நடத்தும் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு சென்றால், சிறை செல்ல நேரிடும்; குடும்பத்தை கவனிக்க முடியாது' என சொல்லி வருகின்றனர்.இதனால், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் குழம்பி போய் உள்ளனர்.
6 minutes ago
2 hour(s) ago