உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / புகையிலை பொருள் விற்றால் ரூ.1 லட்சம் அபராதம்

புகையிலை பொருள் விற்றால் ரூ.1 லட்சம் அபராதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தில், தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க, 391 கூட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 7,693 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டு, 39,359 கிலோ புகையிலை பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவர்களிடமிருந்து, 6.22 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.புகையிலை பொருட்கள் விற்போருக்கான அபராத தொகை, முதல்முறை 5,000; இரண்டாம் முறை, 10,000 ரூபாயாக இருந்தது. தற்போது, முதல் முறை 25,000; இரண்டாம் முறை 50,000; மூன்றாம் முறை 1 லட்சம் ரூபாய் என, அபராதத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. விற்பனை கடைகளுக்கு சீல் வைப்பதுடன், கடைகளுக்கான உரிமம் ரத்து செய்யப்படுகிறது. எனவே, வியாபாரிகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கக்கூடாது.- ககன்தீப்சிங் பேடி,மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Godyes
பிப் 23, 2024 23:54

பெரிசு நடக்கற வேலய பாரு.


Ranjith Rajan V
பிப் 23, 2024 21:41

விற்பவனுக்கு தான் அபராதம். தயாரிப்பவன் தாராளமாக தயாரிக்கலாம்..


Ram pollachi
பிப் 23, 2024 16:53

பெட்டி கடையில் பீடி, சிகரெட், வெற்றிலை பாக்கு, நிஜாம் லேடி, குட்கா இதுதான் தினசரி ஓடும். கொள்முதல் சுமார் பத்தாயிரம் இருக்கும் அவர்களிடம் ஒரு லட்சம் அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறுவது நல்ல காமெடியாக இருக்கு... இனிதான் வியாபாரம் சூப்பரா இருக்கும் பல்லே பல்லே ..


Duruvesan
பிப் 23, 2024 15:16

பாஸ் தாஸ்மாக்ல விக்கும் சாராயம் உடம்புக்கு நல்லது


kulandai kannan
பிப் 23, 2024 14:45

பஞ்சு மிட்டாய்??


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 23, 2024 16:24

மது, புகையிலை இவற்றைவிட பஞ்சு மிட்டாய் கொடியது என்பதால் அதைத் தடை செய்து விட்டோம் .....


sahayadhas
பிப் 23, 2024 12:57

வடஇந்தியாவில் திரும்பிய இடமெல்லாம பான்மசா, பீடா வாயர்கள் அத கவனியுங்கள்.


Anantharaman Srinivasan
பிப் 23, 2024 12:40

என்ன முயன்றாலும் முடியாத காரியம். எதற்கு இந்த வீண் அறிவிப்பு. அரசியல் கட்சி பிரமுகர்கள் வியாபாரமே இதுதானே.


அப்புசாமி
பிப் 23, 2024 12:20

எங்க ஊரு முனீஸ்வரன் கோவிலில் சாமிக்கு காணிக்கையா சுருட்டு ஏத்தி வெச்சு மக்கள் செத்து விழற மாதிரி சுருட்டு நாத்தம். கட்டு கட்டா ஏத்துறாங்க. ஏன்னு கேப்பார் இல்லே


g.s,rajan
பிப் 23, 2024 12:06

புகையிலையைப் பல வகையில் தவறாகப் பயன்படுத்தும் மக்களின் மூக்கையும்,வாயையும் எப்பொழுதும் இனி முகமூடி போட்டுத் தான் மூடணும்....


Barakat Ali
பிப் 23, 2024 11:06

உங்க சர்வாதிகாரி இருக்காரே அவரோட அன்பு அண்ணன் மகன் வையாபுரி சிகரெட்டு கம்பெனி ஏஜென்சி வெச்சிருக்காரு ...... அவரைக் கேளுங்க .....


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி