உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கப்பலில் சிக்கிய ரூ.110 கோடி போதை பொருள்: சிறையில் இருந்தபடி ஜாபர் சாதிக் கைவரிசையா?

கப்பலில் சிக்கிய ரூ.110 கோடி போதை பொருள்: சிறையில் இருந்தபடி ஜாபர் சாதிக் கைவரிசையா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க.,வைச் சேர்ந்த ஜாபர் சாதிக் பாணியில், சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போதை பொருள் கடத்த முயற்சி நடந்துள்ளதால், மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்றுமதி

தி.மு.க.,வில் நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக், போதை பொருள் கடத்தல் மன்னனாக செயல்பட்டு வந்தார். அவரது 'நெட்ஒர்க்' மலேஷியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும்விரிவடைந்துள்ளது.போதை பொருள் கடத்துவதற்காகவே, நிறுவனம் ஒன்றை துவங்கி, அதன் வாயிலாக வெளிநாடுகளுக்கு பால் பவுடர் மற்றும் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்வது போல, 'சூடோ எபிட்ரீன்' என்ற போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டார்.அவர், சரக்கு கப்பலில் தான் போதை பொருள் கடத்துவார். அதுவும், உணவு பொருட்கள் பாக்கெட்டின் அடிப்பகுதியில், எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி சூடோ எபிட்ரீன் மறைத்து வைக்கப்பட்டு இருக்கும்.இப்படி பார்சல் செய்வதில் ஜாபர் சாதிக் கைதேர்ந்தவர். டில்லியில் ஜாபர் சாதிக் மற்றும் அவரின் கூட்டாளிகளை, மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்தபோது, இந்த விபரங்கள் தெரிய வந்தன.அதே பாணியில், சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்கு கப்பலில், ஆஸ்திரேலியாவுக்கு, 110 கோடி ரூபாய் மதிப்புள்ள சூடோ எபிட்ரீன் கடத்த முயற்சி நடந்துள்ளது. இது தொடர்பாக, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த அபுதாஹிர், 30; அகமது பாஷா, 35, ஆகியோரை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் கைதுசெய்துள்ளனர்.

கூட்டாளிகள்

அவர்களிடம் பறிமுதல் செய்த பார்சல்கள், கடத்தல் முயற்சி நடந்த விதம், ஜாபர் சாதிக் பாணியில் இருப்பது தெரியவந்தது.இது குறித்து, மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். அவர்கள், அபுதாஹிர், அகமது பாஷா ஆகியோருக்கும், ஜாபர் சாதிக்கிற்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்துவருகின்றனர்.போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:ஆஸ்திரேலியா செல்ல இருந்த சரக்கு கப்பலின் கன்டெய்னரில், உணவு பொருட்கள் போல 450 மூட்டைகள் இருந்தன.அவற்றின் உள்ளே, ஒவ்வொரு மூட்டையிலும்,டியூப் லைட் தயாரிக்கும் போது, அதன் உட்பகுதியில் பூசப்படும் குவார்ட்ஸ் பவுடர் பார்சல்கள், தலா, 50 கிலோ அளவில்இருந்தன.அவற்றில், 37 பார்சல்களின் அடிப்பகுதியில், 112 கிலோ சூடோ எபிட்ரீன் இருந்தது. இதன் மதிப்பு, 110 கோடி ரூபாய்.இந்த போதை பொருள் கடத்தல் முயற்சியும், ஜாபர் சாதிக் மற்றும் அவரின் கூட்டாளிகள் போதை பொருள்கடத்தல் பாணியும் ஒன்றாக தெரிகிறது.அதனால், சிறையில் இருந்தபடி, ஜாபர் சாதிக் தன் கூட்டாளிகள் வாயிலாக போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டாரா எனவிசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள்கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

shakti
செப் 30, 2024 14:45

இந்த மார்கத்தில் செல்லும் அனைத்து பேருந்துகளும் அமைதியாக செல்லவும் . ஏனென்றால் இது அமைதி மார்க்கம்


tmranganathan
செப் 29, 2024 20:05

திருட்டு payal கல் ட்ராவிடமால் அரசை....


rasaa
செப் 29, 2024 14:22

எந்த குற்றப்பிண்ணணியிலும் இந்த அமைதி, இனிய மார்கத்தினர் இருப்பது ஏன்? அவர்கள் மத நூலில் உள்ளபடி நடந்துகொள்கின்றார்களா?


Sankara Subramaniam
செப் 29, 2024 13:01

கூட்டு களவாணி தெரியுமா. தேச துரோக செயல்கள் பேச்சுகள் ஊழல் கொள்ளை கொலை இந்துக்களை கேவலமாக பேசுவது பிராமண துவேஷம் போன்ற செயல்களை கண்டு கொள்ளாமல் நடவடிக்கையும் ஏதுமில்லாமல் பெரும்பான்மை இந்துக்களை அவமானபடுவதை பார்த்து மகிழ்வது நம்ம தாமரை தான்.எத்தனை நாள் தான் இந்த வேதனையோ.


Ramesh Sargam
செப் 28, 2024 20:54

JS சிறையில் இருந்தும் திருந்தவில்லையா..? அவன் இருப்பது தமிழ் நாட்டு சிறையில். அவனுக்கு தேவையான எல்லா சிறப்பு சலுகைகளும் கட்சினர் செய்யும் போது அவன் எப்படி திருந்துவான்? அவனை வேறு மாநில சிறையில் அடைக்கவேண்டும்.


Muralidharan S
செப் 28, 2024 17:14

ஊழலால் செய்யும் அனைவரும் சிறையில் தள்ளுவோம் என்று சொல்லி பிஜேபி ஆட்சிக்கு வந்து 10 வருடங்கள் ஆகியும், தமிழ்நாட்டில் ஊழல் புரிந்தவர்கள் இன்னும் சிறைக்கு செல்லவில்லை. ஜாபர் சாதிக் உடன் தொடர்ப்பு உடைய அரசியல் கட்சிகள் / அரசியல் வாதிகள் இன்னும் மாட்டவில்லை / சிறை செல்லவில்லை.. 2G வழக்கில் சிக்கியவர்களை , சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து, குற்றம் அற்றவர்கள் ஆகிவிட்டார்கள். 417 நாட்கள் சிறையில் இருந்த துணிச்சல்காரரும் தியாகி பட்டம் பெற்று வெளியே வந்துவிட்டார்.. ED வழக்கை அவ்வளவு ஆமை வேகத்தில் நடத்துகிறது. சட்டத்தையும், நியாயத்தையும் , தர்மத்தையும் மீறிக்கொண்டு சுற்றுபவர்களின் கலிகாலம் இது. மக்கள் பைத்தியக்காரர்கள். இன்னமும் அரசியல்வாதிகள் நம்பிக்கொண்டு இருக்கிறோம்.


நிக்கோல்தாம்சன்
செப் 28, 2024 15:09

அடுத்து டுமீரின் டுபுக்கு பெரியவன் என்ற படம் எடுப்பதற்காகவா இந்த கடத்தல் அபுதாஹிர் ?


Azar Mufeen
செப் 28, 2024 15:43

"கழிசடை உன்னை ஆசீர்வதிப்பான்" படமாக கூட இருக்கலாம் அம்மையாரே


நிக்கோல்தாம்சன்
செப் 29, 2024 05:55

கடைசியில் கடத்தல் என்பது குலத்தொழில் என்பதனை ஒப்புக்கொண்டீர்கள் அல்லவா


ஆரூர் ரங்
செப் 28, 2024 10:58

ஜாஃபர் அவ்வளவு பெரிய அப்பாடக்கார் கிடையாது.? டெல்லிக்குக் கொண்டு போய் விசாரித்து திகாரில் அடைக்கவும். இங்கு விசாரிக்க முயன்றால் திராவிஷ அநீதிகள் காரியத்தைக் கெடுத்து விடுவர்.


Shekar
செப் 28, 2024 09:50

அதற்க்காகத்தானே நாங்கள் திஹார் ஜெயில்ல இருந்து புழல் ஜெயிலுக்கு மாற்றல் வாங்கினோம், இங்கு சகல வசதி, மரியாதை, பைனாப்பிள் கேசரி எல்லாம் கிடைக்குமே


RAMAKRISHNAN NATESAN
செப் 28, 2024 09:11

அமெரிக்காவில் என்னென்ன போதை மருந்துகள் புழக்கத்தில் உள்ளனவோ அவையத்தனையும் தமிழகத்தில் கிடைப்பதாக மருத்துவர் அன்புமணி கூறினார் ... . tip of the iceberg என்று சொல்வார்கள் ..... பனிப்பாறையின் ஒரு முனை மட்டுமே தென்படுகிறது .... அதாவது உலகளாவிய நெட்வொர்க்கில் ஒரு அங்கம்தான் மன்னர் குடும்ப நண்பர் / கூட்டாளி ஜாஃபர் சாதிக் ...... அவர் இல்லாவிட்டாலும் அவரது ஆட்கள் நடத்தி வைப்பார்கள் ..... ஜாஃபர் சாதிக் மட்டும் சிக்கி தொடர்பு வைத்திருந்த மன்னர் குடும்பம், கா. துறை உயர் அதிகாரி தப்பியது எப்படி ???? ஹிந்துக்கள் மீது பாசமுள்ள பாஜக வுக்கு கட்டிங் என்ன கிடைத்தது ????


Barakat Ali
செப் 28, 2024 13:40

ஈடி ரெயிடு - கனி, சபரி யாரும் தப்பவில்லை - கூட கட்டிங்கிற்காகத்தான் ..... திமுக-விசிக நாடகம் போலத்தான் பாஜக-திமுக நாடகம் ..... அவர்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது ......


முக்கிய வீடியோ