உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கட்சி ஒன்றுபட சசிகலா உண்ணாவிரதம்?

கட்சி ஒன்றுபட சசிகலா உண்ணாவிரதம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிதறிக் கிடக்கும் அ.தி.மு.க.,வினரை ஒன்றுபடுத்த, தொடர் உண்ணாவிரதம் இருக்க, சசிகலா திட்டமிட்டுள்ளதாக, அவரது ஆதரவு வட்டாரத்தில் கூறப்படுகிறது.இதுகுறித்து சசிகலா ஆதரவாளர்கள் கூறியதாவது: அ.தி.மு.க.,வை பாதுகாக்க, சசிகலா தலைமையில் இணைய வேண்டும். அதற்காக, ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் அல்லது நீண்ட உண்ணாவிரதம் இருக்க, சசிகலா திட்டமிட்டுள்ளார். ஒற்றுமையை விரும்பும் தொண்டர்கள், அவருக்கு ஆதரவு தருவர். அதற்கான முயற்சியை சசிகலா எடுக்க உள்ளார்.இனியும் அமைதியாக இருக்கக் கூடாது என சசிகலாவிடம் தெரிவித்துள்ளோம். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவி ஏற்பு விழாவிற்கு வரும்படி, சசிகலாவிற்கு அழைப்பு வந்துள்ளது. அதன் பின், நல்ல முடிவை அறிவிப்பதாக சசிகலா, எங்களிடம் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுக்கு வலை

அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்கள், நீக்கப்பட்டவர்கள் போன்றோரிடம் பேசி, அவர்களை கட்சியில் இணைப்பதற்காக, முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய குழுவை, இ.பி.எஸ்., நியமித்துள்ளார். ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களாக உள்ள, முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், அஸ்பயர் சுவாமிநாதன், முன்னாள் எம்.பி.,யான கே.சி.பழனிசாமி உட்பட பலரை, மீண்டும் அ.தி.மு.க.,வுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

RAMAKRISHNAN NATESAN
ஜூன் 08, 2024 17:35

சசி ..... உனக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம் ????


kalidas c
ஜூன் 07, 2024 21:19

சின்னம்மா, சின்னம்மா! சீக்கிரமாக நாட்டை திரூத்துங்கம்மா! அம்மம்மா! தாங்காதுடா தமிழகம்!


Bharathi
ஜூன் 07, 2024 19:19

Mafoi Pandian must be the opt leader


vijay,covai
ஜூன் 07, 2024 17:23

அந்த அம்மாவுக்கு பண்ணுன துரோகதுக்கு வாழ் நாள் முழுவதும் உண்ணா விரதம் இருக்க வேண்டும்


ஹரிப்ரியா
ஜூன் 07, 2024 16:04

மூணுநாள் பெரியம்மா சமாதியில் தியானம் செஞ்சு பாக்கலாமே. இளநீர் மட்டும்.குடிக்கணும்.


செல்வேந்திரன்,அரியலூர்
ஜூன் 07, 2024 14:00

உண்ணாவிரதம் இருந்துதான் இந்தம்மா விதியிருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்?


வீரத் தமிழன்
ஜூன் 07, 2024 12:53

திரு அண்ணாமலை மட்டும் பாஜக தலைவரா இல்லாமல் இருந்திருந்தால் நம்ம கட்சி இந்த நிலைமைக்கு ஆளாகி இருக்காது எல்லாத்துக்கும் காரணம் அண்ணாமலை தான் ஆனாலும் ஒன்ற கோடி தொண்டர்கள் இன்னமும் இபிஎஸ் தலைமையில் கீழ தான் இருக்காங்க. எந்த ஒரு கட்சியாலும் எந்த தலைவராலும் இக்கட்சியை அழிப்பது என்பது கனவில் கூட நிறைவேறாது.


UDAIKULM
ஜூன் 07, 2024 14:44

ஒன்ற கோடி தொண்டர்கள்?


Deva Varathan
ஜூன் 07, 2024 11:31

ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களே உங்களுக்கு அறிவுரை கூற தகுதி இல்லை. இருந்தாலும் அரசியலில் ராஜதந்திரம் அவசியம் கூட்டணி முக்கியம் . அதிமுக+தேமுதிக+ தாமாகா+பாமகா+ பிஜேபி ஆகிய கட்சிகள் வாங்கிய ஓட்டுகளை கூட்டி பாருங்கள் உங்களுக்கே ஏதாவது புரியும். இவைகள் அனைத்தும் ஏற்கனவே கூட்டணி கட்சிகளாக இருந்து பிரிந்தவைகள். உண்மையில் திமுக ஜெயிக்கவில்லை இந்த கட்சிகள் தான் தங்கள் வெற்றியை விட்டுவிட்டார்கள்.


Rajasekar Jayaraman
ஜூன் 07, 2024 11:18

சிரிப்பு மூட்டிகிட்டு.


முதல் தமிழன்
ஜூன் 07, 2024 10:48

எதுக்கு இவங்களை அண்ணா தி. மு. க சேத்துக்கணும் ? தேவையே இல்லை. எடப்பாடியார் போதும் தலைமைக்கு. மீண்டும் வெல்வோம் ....எடப்பாடியார் தலைமையில்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ