உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஸ்மார்ட்போனுக்கு கடன் வாங்குவது அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

ஸ்மார்ட்போனுக்கு கடன் வாங்குவது அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஸ்மார்ட்போன், வீட்டு உபயோகப் பொருட்களுக்காக கடன் வாங்குவது, நடப்பு, 2024ல், 37 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.'ஹோம் கிரெடிட் இந்தியா' என்ற நிறுவனம், 'இந்தியா எப்படி கடன் வாங்குகிறது' என ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. டில்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா, பெங்களூரு, ஹைதராபாத், ஆமதாபாத், புனே, கொச்சி உள்ளிட்ட, 17 நகரங்களில், 18 - 55 வயதுக்குப்பட்டோரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.ஆய்வறிக்கை விபரம்:நடப்பு ஆண்டில் ஸ்மார்ட்போன், வீட்டு உபயோகப் பொருட்களுக்காக கடன் வாங்குவது மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்த தேவைக்காக கடன் வாங்குவது, 2020ல், 1 சதவீதமாக இருந்தது. தற்போது, 37 சதவீதமாக உயர்ந்துள்ளது.வீட்டு மேம்பாடுகளுக்கான கடன்கள், 2022ல் 9 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது, 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. மருத்துவ அவசர தேவைகளுக்காக கடன் வாங்குவது, நடப்பு ஆண்டில் குறைந்துள்ளது. இது, 2020ல் 7 சதவீதத்தில் இருந்து தற்போது 3 சதவீதமாக சரிவடைந்துள்ளது.கல்விக்காக கடன் வாங்குவதில் நிலையான போக்கு தொடர்கிற நிலையில், திருமணத்துக்காக கடன் வாங்குவது, 2021ல், 3 சதவீதத்தில் இருந்து, நடப்பு ஆண்டில், 5 சதவீதமாக அதிகரித்துள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை