உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கருத்து சொன்னதற்காக வழக்கு போடுவது பாசிச அணுகுமுறை: சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி கருத்து

கருத்து சொன்னதற்காக வழக்கு போடுவது பாசிச அணுகுமுறை: சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி கருத்து

சென்னை : நில அபகரிப்பு தடுப்பு பிரிவு விசாரிக்கும் வழக்கு குறித்து, தவறான தகவல்களை பரப்பியதாக அளித்த புகார் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, கடந்த டிசம்பர், 24ல் கைது செய்தனர்.இந்த வழக்கில் ஜாமின் கேட்டு, சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=do3dwn8g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

விசாரணையின் முடிவில், சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

சமீப காலமாக, கருத்து தெரிவித்ததற்காக, குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படுவதுடன், அவர்கள் கைது செய்யப்படுவதையும் காண முடிகிறது. ஜனநாயகம் என்பது முழுக்க முழுக்க கருத்துக்கள் அடங்கியது.அவற்றில் உள்ளடக்கம் உள்ளவை மட்டுமே நிலைத்து நிற்கும். ஒரு கருத்து ஆதாரமற்றதாக இருந்தால், அது நீண்ட காலத்திற்கு நீடிக்காது. ஒரு கருத்தை சொன்னதற்காக, ஒருவர் மீது வழக்கு தொடுப்பது, பாசிச அணுகுமுறையாகும்.வழக்கு தொடுப்பது வேறு; கைது செய்வது வேறு என்பதை, உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தெரிவித்துள்ளது. காவல் துறையினர் தேவையற்ற கைது நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது.இது, போலீசாரின் காதுகளில் விழுந்ததாக தெரியவில்லை. வன்முறை துாண்டப்படும் போது மட்டுமே, காவல்துறை தலையிடுவது நியாயப்படுத்தப்படும். இந்த வழக்கில் மனுதாரர் சவுக்கு சங்கர் மீது, இரு முறை குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் மனுதாரருக்கு நிவாரணம் வழங்கிய போது, அடுத்தடுத்த வழக்குகள் தொடுக்கப்படுகின்றன.இத்தகைய அணுகுமுறை, சட்டத்தின் மீதான மரியாதையை குறைக்கும் விதமாக உள்ளது. மனுதாரர், முக்கியத்துவம் இல்லாத காரணத்திற்காக கைது செய்யப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது.காவல் துறையின் தவறான நடத்தை, எல்லா இடங்களிலும் தெளிவாக தெரிகிறது என்பதால், அவர்களின் செயலை கண்டிக்கிறேன். மனுதார் மீதான வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என, நீதிமன்றம் கருதுவதால் அவருக்கு நிபந்தனை விதிக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Jayachandran Velu
ஜன 20, 2025 13:20

சவுக்கு சங்கர் மேல் பல வழக்குகள் போடப்பட்டும் வருகிறது. தமிழக காவல்துறையால் ஆனால் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியும் வருகிறது. அது போல் தவறு செய்து இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். மாற்றுகருத்து இல்லை. ஆனால் தமிழகஅரசும், காவல்துறையும், ஒரு தனிமனிதர் அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்கிறார் என்பதிற்கு பல பழிவாங்கும் வழக்குகள். இச்செயலில் தமிழகஅரசும் காவல்துறையும் செயல்படுவதை கண்டிக்கதக்க செயலாகும். ஆகவே நீதிமன்றம் தலையீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனித உரிமை காக்க வேண்டும். அரசும் காவல்துறையும் தொடர்ந்து செய்வதால் உரிய நடவடிக்கையும் சரிய நிவாரணமும் பெற்று தரவேண்டும். அப்பொழுதுதான் தமிழகஅரசும் காவல்துறையும் திருந்தும்.


Ramesh Sargam
ஜன 18, 2025 22:08

நீதிபதி கருத்து தெரிவித்தால் மட்டும் போதாது. தமிழக காவல்துறையின் மூத்த அதிகாரிகளை நேரில் அழைத்து கடுமையாக எச்சரிக்கவேண்டும். காவல்துறையின் பணி , மக்களை காப்பாற்றவேண்டியது. ஆளும் கட்சிக்கு கூஜா தூக்குவது அல்ல.


Ram
ஜன 18, 2025 21:58

இந்த சுடலை பயந்துட்டார் … திருட்டு ரயிலேறிவந்தவருக்கு பொறந்தவர் பயந்துகிட்டே தானே இருப்பார்.


Anantharaman Srinivasan
ஜன 18, 2025 21:11

கருணாநிதி சொன்ன அதே வாசகம். போலீஸ்சின் ஈரல் கெட்டுபோச்சு. அடுத்தடுத்து கேஸ் போட்டு சிறையில் கை காலை உடைத்து விட்டால் பயந்து போய் வாய்மூடி விடுவான் என்ற சர்வாதிகார எண்ணம்.


P.Sekaran
ஜன 18, 2025 17:13

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு இது ஏற்கனவே ஏகப்பட்ட சூடு உயர்நீதிமன்றம் உச்சநீதி மன்றம் கொடுத்தும் திருந்த மாட்டேன் என்கிறார்கள். இவர்களுக்கு மக்கள்தான் தண்டனை கொடுக்க வேண்டும் தேர்தலில்


ram
ஜன 18, 2025 14:27

அப்படியே வழக்கு போட்டவனுக்கு ஒரு ஐந்து அல்லது பாத்து லட்சம் பெனால்டி போட்டால் அடுத்த தடவை யோசிப்பானுக இந்த திருட்டு திமுக அண்ட் காவல்துறை ஆட்கள்.


Anantharaman Srinivasan
ஜன 18, 2025 21:03

Penalty போட்டால் Government பணத்தை எடுத்து கட்டுவார்கள்.


முருகன்
ஜன 18, 2025 14:14

இது போல் அனைவரும் கருத்து சொன்னால் நிலமை என்ன ஆகும்


Sridhar
ஜன 18, 2025 11:38

வெறும் கண்டனம் மட்டும் போதாது. கடுமையான தண்டனை கொடுத்தால்தான் திருட்டு கும்பலும் அதன் அடியாட்களும் திருந்துவார்கள். அந்த ஆள கைது பண்ணி 3 வாரம் தவறா சிறையில் வச்சதுக்கு என்ன தண்டனை? அந்த 3 வார நேரம் வீணாணதுக்கு யார் பொறுப்பு? ஏற்பட்ட மன உளைச்சல்களுக்கும் சிறையில் அனுபவித்த கஷ்டங்களுக்கும் யார் பொறுப்பு? ஜாமீன் கிடைத்தவுடன் அந்த மகிழ்ச்சியில் இதை ஏன் எல்லோரும் அந்த பாதிக்கப்பட்ட நபர் உட்பட, சுலபமாக கடந்து செல்கிறார்கள்? தண்டனை கொடுக்கக்கூடிய நிலையில் உள்ள நீதிபதியே வெறும் கண்டனத்தோடு நிறுத்திக்கொண்டால், நியாயத்துக்கு எங்கே போவது?


Michael Gregory
ஜன 18, 2025 10:59

இந்த நபர் நீதிபதியை விமர்சித்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்து 6 மாதம் சிறையில் அடைத்தனர்.உங்களுக்கு வந்தா ரத்தம் அவர்களுக்கு வந்த தக்காளி சட்னி?


Sivakumar
ஜன 18, 2025 11:58

மிக சரி ..


angbu ganesh
ஜன 18, 2025 09:32

ஜெயலலிதா இப்படித்தான் எதுக்கெடுத்தாலும் கேஸ் போட்டு திட்டு வாங்கினாங்க அப்போதய திருட்டு ரயில் கொக்கரித்ததது இப்போ அவன் பய்யன் அத பன்றான் ஏம்ப்பா உனக்கு ஏன் பயம் உண்மையா இருந்தா தானே சவுக்கு பொய் சொல்லறாருன்னு கேசு போடறியா இல்ல உண்மையா ஏன் பேசறாருன்னு கேஸ் போடறியா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை