உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கோவில் திருப்பணிகளில் சாதனை; சோழ மன்னர்கள் வரிசையில் ஸ்டாலின்

கோவில் திருப்பணிகளில் சாதனை; சோழ மன்னர்கள் வரிசையில் ஸ்டாலின்

சென்னை : “எது ஆன்மிகம், எது அரசியல் என்பதை ஆண்டவன் பார்த்துக் கொண்டு இருக்கிறான்,” என அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் கோவில்களுக்கு வழங்கும் நிதியை முறையாக செலவிடுவதால், திருப்பணிகளுக்கு 1,365 கோடி ரூபாயை உபயதாரர்கள் வழங்கி உள்ளனர். இது, தமிழக அரசு மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. கோவில் திருப்பணிகளில் சரித்திரம் படைத்ததால், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகிய மன்னர்கள் வரிசையில், முதல்வர் ஸ்டாலின் பெயரும் இடம்பெறும். மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் இருந்தபோது, நியாயமாக பேசினார். முதல்வர் ஸ்டாலினை மேடையில் புகழ்ந்த வரலாறும் உண்டு.ஆத்திகர், நாத்திகர் அனைவரும் மனிதர்கள் என்ற உணர்வோடு, அவர்கள் விரும்பும் மத வழிபாட்டுக்கு தேவையானதை செய்து கொடுக்கும் ஆட்சியாக தி.மு.க., அரசு இருக்கிறது.முன்னாள் முதல்வர் கருணாநிதி, பராசக்தி படத்தில், 'கோவில்கள் கூடாது என்பதல்ல; அது கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது' என்று சொல்லி இருக்கிறார். தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கும் ஆட்சியாக, அடுத்த மாதம், திருச்செந்துார் கோவிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவுக்கு, 400 கோடி ரூபாயில் திருப்பணிகள் நடைபெறுகின்றன.எது ஆன்மிகம், எது அரசியல் என்பதை ஆண்டவன் பார்த்து கொண்டிருக்கிறான். மதுரையில் நடந்த முருகன் மாநாடு, முழுக்க முழுக்க அரசியல் மாநாடு; நாங்கள் ஏற்று நடத்தும் பணிகள் அறம் சார்ந்த ஆன்மிக பணிகள். மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாழ்த்து கூறிய எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, அவரது ஆட்சியில் ஹிந்து அறநிலையத் துறைக்கு எத்தனை கோடி நிதி ஒதுக்கினார் இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 24, 2025 07:24

அம்மாவாசை ...நாகராஜா சோழன் எம் ஏ ...எம் எல் ஏ... ஆன கதைதான்


Ramesh Sargam
ஜூன் 23, 2025 19:59

திமுக செய்யும் அட்டூழியங்களை ஆண்டவன் பார்த்துக்கொண்டிருக்கிறார். அடுத்த சூர திமுக சம்ஹாரம் கூடிய விரைவில்.


sundaresanmahadevan
ஜூன் 23, 2025 17:35

ஏண்டா ஜால்ரா அடிப்பதற்கும் ஒரு எல்லை இல்லையா.சோழ மன்னர்கள் எங்கே சாதாரணமான அரசியல்வாதி ஊழல்வாதி எங்கே.


V.Rajamohan
ஜூன் 23, 2025 16:10

அட சீ..கருமமே..


எஸ் எஸ்
ஜூன் 23, 2025 13:41

சோழ மன்னர் வரிசையில் ஸ்டாலினா? அட கடவுளே!


ஆரூர் ரங்
ஜூன் 23, 2025 11:50

சோழ பல்லவ மன்னர்கள் கட்டிய பல ஆலயங்களை காணவில்லை. ஆலய நிலங்களும் அபேஸ். இதெல்லாம் திராவிஷ அறநிலையத்துறையின் மேற்பார்வையில் நடந்த சாதனை.


ஆதிநாராயணன், குவைத்
ஜூன் 23, 2025 10:25

இவ்வாறு கூற வெட்கமில்லையா இதை விட இழிவு சோழ மன்னர்களுக்கு வேறு எதுவும் இல்லை சோழ மன்னர்கள் தனது சொந்த பணத்தில் கோவில் திருப்பணிகள் செய்தனர்


vijai hindu
ஜூன் 23, 2025 09:27

கொடுமை இதுங்க எல்லாம் சோழ மன்னன் வரிசையில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறுவது சோழர் மன்னரை கேவலப்படுத்தியது போல் உள்ளது


ராமகிருஷ்ணன்
ஜூன் 23, 2025 08:59

சோழ மன்னர்களை இதைவிட கேவலப் படுத்த முடியாது. உண்மையான தமிழர்கள், சோழர்களின் வாரிசுகள் இதற்கு மானநஷ்ட வழக்கு போட வேண்டும். யார் அப்பன் வீட்டு பணத்தை கொண்டு கோயில்களை புணர் நிர்மாணம் செய்கிறார்கள். இதிலேயும் திமுகவினர் திருட த்தான் செய்வார்கள்


ManiK
ஜூன் 23, 2025 07:01

கல்வெட்டு ரெடி. இனி எல்லா கோவில்களிளும் மு.க.ஸா என்ற ஒரு சன்னிதி கட்டாயம் வைக்க சட்டமும் ரெடி. #அடிச்சுவிடு சேகர்பாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை