உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தனியாகவா, அணியாகவா என்பது சஸ்பென்ஸ்: சொல்கிறார் த.வெ.க., தலைவர் விஜய்

தனியாகவா, அணியாகவா என்பது சஸ்பென்ஸ்: சொல்கிறார் த.வெ.க., தலைவர் விஜய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: த.வெ.க., தலைவர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள, ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா, மலேஷிய தலை நகர் கோலாலம்பூரில், நேற்று முன்தினம் நடந்தது. அதில், விஜய் பேசியதாவது: சினிமா என்பது மிகப்பெரிய கடல். கரையோரமாக சிறிய மணல் வீடு கட்ட ஆசைப்பட்டேன். மாளிகையாக மாற்றிக் கொடுத்துள்ளீர்கள். என் ரசிகர்கள் 33 ஆண்டுகள் எனக்காக நின்றனர். அதனால், அடுத்த 33 ஆண்டுகள், அவர்களுடன் நிற்க முடிவெடுத்துள்ளேன். அவர்களுக்கு ஒன்று என்றால், அவர்கள் வீட்டு வாசலில் போய் நிற்க முடிவெடுத்துள்ளேன். எனக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்த, என் ரசிகர்களுக்காக, நான் சினிமாவையே விட்டுக் கொடுக்கிறேன். இந்த விஜய், நன்றி என வெறுமனே சொல்லி செல்பவன் கிடையாது. நன்றிக்கடனை தீர்த்துவிட்டுதான் செல்வான். வாழ்க்கையில் நீங்கள் முன்னேற வேண்டுமென்றால், சும்மா, வருவோர், போவோர் எல்லோரையும் எதிர்க்க முடியாது. வலுவான எதிரிகளை எதிர்த்தால்தான், வலுவாக இருக்கிறோம் என்பது தெரியும். விஜய் தனியாக வருவாரா அல்லது அணியாக வருவாரா என, சமீபகாலமாக பேச்சு வருகிறது. நாம் என்றைக்கு தனியாக வந்திருக்கிறோம். கடந்த 33 ஆண்டுகளாக மக்களுடன்தான் இருக்கிறோம். அப்போது, அது மிகப்பெரிய அணிதானே. இப்போதும், 'தனியாகவா, அணியாகவா என விளக்கமாக சொல்லவில்லையே' என தோன்றும், 'சஸ்பென்ஸ்' இருந்தால்தானே 'கிக்' இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

தடுமாறி விழுந்தார்

மலேஷியாவில் இருந்து நேற்று இரவு விமானத்தில், சென்னைக்கு த.வெ.க., தலைவர் விஜய் திரும்பினார். விமான நிலையத்தில், அவரது கட்சியினர் திரண்டிருந்தனர். அவர்களை போலீசார் தடுக்க, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, விஜயை அவரது பாதுகாவலர்கள், பாதுகாப்பாக அழைத்து சென்றனர். எனினும், கார் அருகே சென்றபோது, தள்ளுமுள்ளு காரணமாக, விஜய் தடுமாறி கீழே விழுந்தார். அவரை பாதுகாவலர்கள் தாங்கி பிடித்து, காரில் ஏற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Balasubramanian
டிச 29, 2025 23:01

தனியாகத்தான்! அப்போது தான் பிரசாந்த் கிஷோர் மாதிரி அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கலாம்!


Balamurugan
டிச 29, 2025 18:13

என்ன மணியா டெபாசிட் கிடைக்குமா?


angbu ganesh
டிச 29, 2025 16:39

மலேசியாவில் மத போதகம் செஞ்சிருக்கான் வந்த முக்கிய பிரமுகர்கள் எல்லாம் ஸ்தோத்திரம் படிக்கறவனுங்க ஆகா அது ஆடியோ லான்ச் அல்ல மத பிரச்சாரம்


தமிழ்யாழினி
டிச 29, 2025 15:16

அயல் நாடு ,உள் நாடு மிஷனரிகள் தான் ஜேசப் விஜயை இயக்குகிறார்கள்.


ராமகிருஷ்ணன்
டிச 29, 2025 15:11

சீமாண்டி காண்பிக்காத கொரளி வித்தையை இவர் காண்பிக்க போராரு அதிகபட்சமாக 8 டூ 10 சதவீதம் ஓட்டுகள் வாங்கலாம். அதுவும் கூட்டணி அமைவதை பொருத்து, ஆரம்ப பில்டப் கொஞ்சம் ஓவராய் இருக்கு.


RAMAKRISHNAN NATESAN
டிச 29, 2025 14:38

டிவிகேவுக்கு வாக்களிப்பதற்குப் பதிலாக திமுகவுக்கே நேரடியாக வாக்களித்து விடலாம் .... இரண்டும் ஒன்றுதான் ....


சந்திரன்
டிச 29, 2025 14:38

படம் என்னவோ தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆக போகுது கோலாலம்பூரில் நிற்பாரோ இவர் வெற்றி பெற்றால் லண்டனில் விழா வைப்பாரோ. பிரச்சனையை சிங்ஙப்பூரில் தீர்ப்பாரோ


Madras Madra
டிச 29, 2025 12:16

ஒரு கால் ஜோசெப் விஜய் வெற்றி பெற்றால் முதல்வர் ஆனால் தமிழகத்துக்கு சாப கேடு என்றே பொருள்


Shekar
டிச 29, 2025 09:49

தள்ளுமுள்ளு காரணமாக, விஜய் தடுமாறி கீழே விழுந்தார்...


முருகன்
டிச 29, 2025 09:02

சஸ்பென்ஷன் என தாமதமாக கரூர் வந்த மாதிரி ஆகி விட போகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை