உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தமிழக அரசு தடை

பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தமிழக அரசு தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு முற்றிலும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால். தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qzezbj8w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0செயற்கை நிறமூட்டியை கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், இது குறித்து ஆய்வு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

raman
பிப் 18, 2024 07:13

பஞ்சுமிட்டாய் தயார் செய்வது விற்பது இரண்டும் ஒரே நேரத்தில் செய்யப்படுகிறது இது வாங்கி வைத்து பின் விற்கும் தொழில் அல்ல இது ஒரு குடிசை தொழில் என்றால் தவறில்லை மூலப்பொருளில் கலந்து இருக்கும் நச்சுப்பொருளை விற்பதற்கு தடை விதிக்கவேண்டும் அந்த நச்சுப்பொருளை தயார்செய்யும் தொழிற்சாலை மூடப்பட வேண்டும் பஞ்சு மிட்டாய் விற்கும் தொழிலாளர்கள் வயிறில் அடிக்கக்கூடாது


Raj
பிப் 17, 2024 18:20

பஞ்சு மிட்டாயில புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருக்காம்.... விக்கிற சாராயத்துல என்ன ப்ரோட்டின், விட்டாமினா இருக்கு... எத்தனையோ வருடங்களா மிட்டாய் வித்துக்கிட்டு இருக்கான் இப்போ மா. சு. கண்டுபிடிச்சாரு.... பாவம் ஏழைகள் வயிற்றில் அடிப்பது தானே விடியல் ஆட்சி.... பதிலாக சின்ன பாக்கெட்டில் சாராயம் விக்கலாமே... காஜானாவும் நிரம்பும்....


Rajathi Rajan
பிப் 17, 2024 19:17

தடை போட்டது கவர்னர் தமிழிசை தான்


vnatarajan
பிப் 17, 2024 16:29

காஷ்மீர் மிளகாய் பவுடர் இயற்கையாகவே அதிக சிவப்பு நிறமா அல்லது செயற்கையாக ரசாயன சாயம் கலந்திருக்கா


RAMAKRISHNAN NATESAN
பிப் 17, 2024 20:18

செயற்கை நிறமூட்டி அதில் உண்டு .......


jagadesh
பிப் 17, 2024 15:02

பெரும்பாலான ரோட்டோரம் கடைகள் ஓட்டல்களில் கலர் சாயம் பூசப்பட்ட சிக்கன் 65 வருத்து விற்கப்படுகிறது அதையும் தடை செய்யவேண்டும்


jagadesh
பிப் 17, 2024 14:59

அப்படியே கஞ்ஜாவையும் தடைபண்ணா ரொம்ப சந்தோசப்படுவோம் ஐயா


raja
பிப் 17, 2024 14:17

அறிவாலிகளாய் இருந்தால் சாயம் கலக்காத பஞ்சு மிட்டாயை மட்டும் விற்கலாம் என்று சட்டம் போட்டு இருப்பார்கள் .....


ஆரூர் ரங்
பிப் 17, 2024 13:42

பாவப்பட்ட ஏழைகள் விற்கும் பண்டம். எனவே பஞ்சு மிட்டாய் வணிகர்களுக்கு நல நிதி உருவாக்கி மாதம் 10000 ரூபாய் விலையில்லா உரிமைத் தொகை அளிக்க வேண்டும்


Sivagiri
பிப் 17, 2024 12:39

பாண்டிசேரியில் தடை செஞ்சதால இங்கேயும் தடை - திராவிட மாடல் புட்டுக்கிச்சு - - இருந்தாலும் , பாணி பூரி - பாப்கான் - சாட் ஐடம்ஸ் - இவற்றையும் ஆய்வு செய்து தடை செய்ய வேண்டும் - -


rama adhavan
பிப் 17, 2024 12:15

What about vegetation /non vegetation food items with poisonous color agents everywhere in our state in hotels, food stalls, road side eateries? Don't they also to be banned forthwith like sugar candies (பஞ்சு மிட்டாய் )


Ganapathy
பிப் 17, 2024 12:09

அதானே எங்க சாராய வியாபாரத்தையும் தடை செய்வீங்களோன்னு நினச்சு பயந்தே போயிட்டேன்.


RAMAKRISHNAN NATESAN
பிப் 17, 2024 17:58

அது உற்சாக பானம் ........... இளம் விதவைகள் உருவாவது மதுவினால் அல்ல ...... அதனுடன் கெட்டுப்போன சைடு டிஷ் சாப்பிடுவதால்தான் .....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை