உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நாட்டிலேயே அதிக கடன் வாங்கியது தமிழகம் தான்

நாட்டிலேயே அதிக கடன் வாங்கியது தமிழகம் தான்

'என் மண் என் மக்கள்' பயணம், இன்னும் 104 தொகுதிகளை சந்திக்க இருக்கும் வேளையில், தினமும் மூன்று தொகுதிகள் என்ற அடிப்படையில், பாதயாத்திரையை முடுக்கி விட்டிருக்கிறோம்.பிரதமர் மோடியின் திட்டங்கள், அதன் நன்மைகள் எப்படி மிக விரைவாக கடைக்கோடி மக்களைச் சென்றடைகிறதோ, அப்படியே இனி நம் பாதயாத்திரையும் விரைவாக பயணிக்கவுள்ளது.

ஏற்காடு

மலைகளின் இளவரசியாகப் போற்றப்படும் ஏற்காட்டில், பாதயாத்திரை பயணம் நடந்தது. அந்த சட்டசபைத் தொகுதியில் பயணம் வெகுச் சிறப்பாக நடந்தேறியபோது, பா.ஜ., மீது மக்கள் வைத்திருக்கும் மலையளவு நம்பிக்கை மனசைத் தொட்டது.பிரதமர் மோடி, சேலத்துக்கு 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான 41.4 கி.மீ., தொலைவு சேலம் - -மேக்னசைட் சந்திப்பு, -ஓமலுார் -- மேட்டூர் அணை பகுதிக்கான ரயில் வழித் தடங்களை இருவழிப் பாதையாக்கும் திட்டத்தையும் சமீபத்தில் துவங்கி வைத்தார். கடந்த 2014ம் ஆண்டுக்கு முந்தைய 10 ஆண்டுகளில், தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து எவ்வளவு பணம் கிடைத்ததோ, அதை விட இரண்டரை மடங்கு அதிக பணத்தை பிரதமர் மோடி அரசு வழங்கியுள்ளது.

தாராளம்

தமிழகத்தில் நெடுஞ்சாலைகளை அமைக்க, ரயில்வே துறையை நவீனப்படுத்த, லட்சக்கணக்கான ஏழை குடும்பங்களுக்கு, மத்திய அரசின் இலவச ரேஷன் பொருட்கள், இலவச மருத்துவ சிகிச்சை, தரமான வீடு, கழிப்பறை, குழாய் வாயிலாக குடிநீர், சமையல் எரிவாயு இணைப்பு போன்ற பல நலத் திட்டங்களை, மக்களுக்கு வழங்கி வருகிறது. ↓↓மத்திய அரசு, தமிழகத்திற்கு ஆறு ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளை வழங்கியுள்ளது. அதில், 2,488 மலைவாழ் பழங்குடி மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிகளுக்கு, இந்த ஆண்டு 8.67 கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் தி.மு.க., அரசு, ஏற்காடு மலைக் கிராமங்களுக்கு சரியான சாலை வசதிகள் கூடச் செய்து தரவில்லை. அவசர காலங்களில் மருத்துவமனை செல்லும்போது கூட, துணியில் கட்டி தான் நோயாளிகளையும், கர்ப்பிணிகளையும் துாக்கிச் செல்லும் அவலநிலை உள்ளது↓சேர்வராயன் மலை பகுதியில் உள்ள 93 குக்கிராம மக்கள், பல தலைமுறைகளாக சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளனர் ↓தமிழக அரசு, கடந்த மூன்று ஆண்டுகளில் 2.69 லட்சம் கோடி ரூபாய் கடனை கூட்டி உள்ளது. இந்தியாவில் அதிக கடன் பெற்ற மாநிலங்களில், 'நம்பர் ஒன்' ஆக, தமிழகத்தை மாற்றி உள்ளனர்.

ஆத்துார்

இந்திய தொல்லியல் அளவீட்டு நிறுவனத்தால், பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்ட கோட்டைகளில் ஆத்துார் கோட்டையும் ஒன்று. ஆத்துாரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற ஜவ்வரிசிக்கு, மத்திய அரசு, மார்ச் 2023ல் புவிசார் குறியீடு வழங்கியது. கடந்த 2019ல், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், 351 மாசடைந்த நதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதலிடம், ஆத்துார் தொகுதியில் உள்ள வசிஷ்ட நதிக்கு கிடைத்து உள்ளது. தமிழகத்தில் உள்ள கூவம், அடையாறு, நொய்யல், தாமிரபரணி என்று ஒவ்வொரு நதியும் மாசுபட்ட நதிகளாக உள்ளன. இதை சரி செய்ய, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆத்துாரை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பாலம் இல்லாததால் வசிஷ்ட நதியில், தண்ணீரில் இறங்கி கடந்து செல்கின்றனர். வாகன ஓட்டிகள், ஆற்றை கடக்க சிரமப்படுவதோடு, சில நேரங்களில் தண்ணீரில் சிக்கி அவதிக்கு ஆளாகின்றனர். இங்கு ஒரு பாலம் அமைக்கக் கூட, சரியான நடவடிக்கை எடுக்காமல் உள்ளது தி.மு.க., அரசு.

கெங்கவல்லி

இந்தப் பகுதியல் உள்ள தம்மம்பட்டி மரச் சிற்பங்கள், உலகப் புகழ் பெற்றவை. தம்மம்பட்டி மரச் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தர, தமிழக பா.ஜ., முயற்சி மேற்கொண்டு வருகிறது. வரும் லோக்சபா தேர்தலில், தமிழக மக்களுக்காக உழைக்கும் நல்ல நபர்களை தேர்வு செய்ய வேண்டும். பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் துணை நிற்க வேண்டும். பயணம் தொடரும்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Sivagiri
ஜன 05, 2024 22:47

நாட்டிலேயே இதுவரை அதிகமாக அரசாங்கத்தை கொள்ளை அடித்தது இப்போ உள்ள தீயசக்தி மாடல் ஆட்சிதான்னு வெளிப்படையா சொல்ல வேண்டியதுதானே


hari
ஜன 05, 2024 20:33

ஸ்டாலின் சொன்ன உடால்ஸ் நியூஸ் பக்கம் எந்த முட்டுஸ் காணோம்... இங்கே கதறுறங்க....அந்த பக்கம் வாங்கப்பா .


Anantharaman Srinivasan
ஜன 05, 2024 20:24

65 வருட ஆட்சியில் காங்.வாங்கிய கடன் only 60 லட்சம் கோடி. 10 ஆண்டுகள் முடிவதற்குள் மோடியின் மத்தியரசு வாங்கியிருக்கும் கடன் 100 லட்சம் கோடி. One can verify this if any doubt under RTI act.


raja
ஜன 05, 2024 13:29

திருட்டு திராவிட மாடெல் கொள்ளை கூட்ட கோவால் புற திமுகவை தமிழர்கள் அடித்து விரட்ட முடிவெடுத்து விட்டார்கள்.....


sahayadhas
ஜன 05, 2024 13:08

உலகத்திலே அதிக கடன், மற்றும் ஏழை நாடு இந்தியா


rajen.tnl
ஜன 05, 2024 23:34

அய்யா உலகத்திலே அதிக கடன் வாங்கிய நாடு அமெரிக்கா ,, சும்மா கதை எல்லாம் விட கூடாது


duruvasar
ஜன 05, 2024 12:01

தி ச தி மு எங்கேயோ போய்விட்டார். பிறந்ததிலிருந்தே இவர் ஒரு " மேத்ஸ் டைகர்" என நினைக்கத் தோன்றுகிறது. அடேங்கப்பா ஆளை விடுங்கள். இவர்களையெல்லாம் அடிச்சி திருத்த முடியாது, அடிச்சிட்டு தான் திருத்தமுடியும்.


செந்தமிழ் கார்த்திக்
ஜன 05, 2024 11:02

கடந்த 10 வருட ஆட்சி செய்த அதிமுக கட்சியை கேள்வி கேட்க துப்பில்லை. கடந்த 5 வருடங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து கொண்டு தமிழ்நாட்டு மக்களை முட்டாள் ஆக்கும்பொழுது தெரியவில்லையா மேற்கூறிய மக்கள் படும் இன்னல்கள் ? இப்போது மட்டும் என்ன ஞானஉதயம் ? எல்லாம் மக்களை ஏமாற்ற போடப்படும் வேஷம் தானே ? நடத்துங்கள்.


rajen.tnl
ஜன 05, 2024 23:38

அதிமுக ஆட்சியில் கடன் கடன் என்று குதித்தது யார் .. 2020 ல் கடனால் நாடு அழிகிறது என்று நீலிக்கண்ணீர் வடித்தது யார் ? உங்க முதல்வர்தான் ..


செந்தமிழ் கார்த்திக்
ஜன 05, 2024 10:59

கடந்த 10 வருடங்களில் உலகிலையே அதிகமாக கடன் வாங்கியா நாடுகளில் இந்தியா தான் நம்பர் 1 என்பதும் எத்தனை பேருக்கு தெரியும்? 110 லட்சம் கோடி. BJParty என்ன ஒரு இமாலய சாதனை. ?


Kasimani Baskaran
ஜன 05, 2024 11:32

அள்ளி விடு….


செந்தமிழ் கார்த்திக்
ஜன 05, 2024 12:48

இதற்கு தான் இக்கால தலைமுறையாவது படிங்கடா படிங்கடான்னு தலையால் அடித்து கொள்கிறோம்.


வீரபாண்டி,அலங்காநல்லூர்
ஜன 05, 2024 13:10

மோடியின் அரசாங்கம் இந்தியாவில் உள்ள அத்தனை கோடி மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட்டது மட்டுமல்லாமல் இன்று வரை தன் மக்களுக்கு அரிசி முதல் கோதுமை வரை இலவசமாக கொடுத்து கொண்டு இருக்கிறது


ராமகிருஷ்ணன்
ஜன 05, 2024 13:13

நீ அள்ளி வுடுவதை யாரும் நம்ப மாட்டார்கள்.


Kasimani Baskaran
ஜன 05, 2024 14:26

அரை நூற்றாண்டு திராவிட ஆட்சியில் நீ என்ன படிச்ச?


rajen.tnl
ஜன 05, 2024 23:40

உண்மையை பேசுங்கப்பா .. திமுகக்காரன் என்றுமே உண்மையை பேச மாட்டேங்கிறான்


Duruvesan
ஜன 05, 2024 08:22

ஆக விடியல் பிரதமர் ஆனால் எல்லோருக்கும் டாஸ்மாக் இலவசம், மாசம் 2000 கொடுப்பாரு


Krishna
ஜன 05, 2024 07:29

இந்த பயணத்தில் உள்ளூர் பாஜக தொண்டர்கள், பொது மக்கள் மற்றும், கடைகாரர்களிடம் ஆயிரக்கணக்கில் வசூலிக்கிறார்கள் (செலவுகளை சமாளிக்க என்று), இது அண்ணாமலை ஐயாவுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. (கும்பகோணம் மற்றும் சுற்றுப்புறத்தில் நடந்தது)


Ravichandran,Thirumayam
ஜன 05, 2024 13:12

நீ ஒரு பக்கா அறிவாலய உபி என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது..????


rajen.tnl
ஜன 05, 2024 23:41

அந்த அறிவாலய உபி பொய்யை மட்டும்தான் பேசும் ...


மேலும் செய்திகள்









புதிய வீடியோ