மேலும் செய்திகள்
போக்குவரத்து செயல் திட்டம்: கோவை, மதுரைக்கு எப்போது?
22 hour(s) ago | 1
மதுரை: ஹாக்கி விளையாட்டுகளுக்கு போதிய பயிற்சியும், முக்கியத்துவமும் தராததால் தற்போது விளையாடி வரும் ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியிலும், 2026ல் நடக்க உள்ள உலகக்கோப்பை ஹாக்கி போட்டியிலும் இந்திய அணி சார்பில் தமிழக வீரர்கள் இடம்பெறவில்லை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழகத்தில் பல்வேறு விளையாட்டுகளுக்கென பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் உள்ளன. பள்ளியில் இருந்து அடுத்த நிலைக்கு மாணவர்கள் விளையாட்டு பயிற்சி பெறுவதற்கு கல்லுாரி விடுதிகள் இல்லை. கோவில்பட்டியில் மட்டும் கல்லுாரி மாணவர்களுக்கான ஹாக்கி விளையாட்டு விடுதி உள்ளது. தமிழகத்தில் ஒன்றிரண்டு மைதானங்களில் மட்டுமே செயற்கை புல்தரை (டர்ப்) ஹாக்கி மைதானங்கள் உள்ளன. பெரும்பாலான பள்ளி, கல்லுாரி வீரர்கள் மண் தரையில் விளையாடியே பயிற்சி பெறுகின்றனர். ஆரம்பத்தில் இருந்தே புல்தரை மைதானத்தில் விளையாடி பழகினால் தான் உடல் அதற்கேற்ப பயிற்சிக்கு தயாராகும். மண்தரை, களிமண் தரை, 'டர்ப்' என மாறி மாறி விளையாடும் போது வீரர்களின் ஓடும் திறன், தாவும் திறன், பந்தை அடிக்கும் திறன், உடற்தகுதி திறன் எல்லாமே மாறும். அதாவது களிமண் தரையில் பயிற்சி பெற்றவர்கள் 'டர்ப்' தரையில் ஆடும் போது புதிதாக விளையாட்டை கற்றுக் கொள்வது போலிருக்கும். முன்னணியில் மாநிலங்கள்
மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், அரியானா, ஒடிசா மாநிலங்களில் மாநில அரசு சார்பில் விளையாட்டுக்கான ஹாக்கி அகாடமிகள் நிறைய உருவாக்கப்பட்டுள்ளன. திறமையான வீரர்கள் கண்டெடுக்கப்பட்டு பயிற்சிக்கு பின் இந்திய ஜூனியர், சீனியர் அணியில் சேர்க்கப்படுகின்றனர். பஞ்சாப், ஓடிசா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடக அணி வீரர்கள் தற்போது நடைபெறும் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அதிகளவில் இடம் பெற்றுள்ளனர். இதிலுள்ள 8 வீரர்கள் அடுத்து வரும் 2026 உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இடம்பெற உள்ளனர். கோவில்பட்டியில் உள்ள கல்லுாரி மாணவர்களுக்கான ஹாக்கி விடுதி மாணவர்கள் தான் மாநில ஜூனியர், சீனியர் அணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதுபோன்று மதுரை, கோவை, திருச்சி, சென்னையில் கல்லுாரி விடுதிகளை உருவாக்க வேண்டும். அப்போது தான் ஹாக்கி விளையாட அதிக அளவில் மாணவர்கள் வருவர்.
22 hour(s) ago | 1