உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஹிந்தி மாநிலமாக தமிழகம் மாறிவிடும்: சீமான்

ஹிந்தி மாநிலமாக தமிழகம் மாறிவிடும்: சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி: பீஹார் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கானோர், வாழ்வாதாரத்துக்காக வந்து, தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கி உள்ளனர். குறிப்பாக பீஹாரில் இருந்து மட்டும் ஒன்றரை கோடி பேர் வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தமிழகத்தில் ஓட்டுரிமை கொடுக்க வேண்டும் என, பலர் சொல்லி வருகின்றனர். ஏற்கனவே, அவர்கள் வாயிலாக தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஹிந்தி புகுத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு ஓட்டுரிமையும் அளித்தால் அவ்வளவுதான், வட மாநிலங்கள் போல தமிழகமும் ஹிந்தி பேசும் மாநிலமாக மாறிவிடும். தமிழ் தமிழ் என கூறிக் கொண்டிருப்போரும், ஹிந்தியில் பேசும் சூழல் உருவாகி விடும். என்றைக்கு அரசியலும் அதிகாரமும் இல்லாத சூழல் உருவாகிறதோ, அன்றைக்கு இந்த சீமான், தமிழகத்தில் இருக்க லாயக்கற்றவன்; அகதியாகி விடுவேன்; நாடு கடந்து விடுவேன். அப்படியொரு சூழல் வந்துவிடக் கூடாது என எச்சரிக்கிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 65 )

Ram
அக் 28, 2025 22:31

ஜாதி எப்ப்டி ஒழியவேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, அதேபோல் மொழி பிரிவினையும் ஒழியவேண்டும் , இங்கு மொழியே ஒரு ஜாதியின் அடையாளமாக மாறிவருகிறது ... மனிதனை மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும்


T.sthivinayagam
அக் 28, 2025 20:06

தமிழ் தேசியம் என்று கூறி கொண்டே தமிழகத்தில் உள்ள தாய் மொழி எது என்று தெரியாதவர்களுக்கு துணை போனால் மாறத்தான் செய்யும் என்று தொண்டர்கள் கூறுகின்றனர்.


பேசும் தமிழன்
அக் 28, 2025 20:03

உனக்கு என்னப்பா நீ பைத்தியம்.... என்ன வேணா பேசிட்டு போயிடுவ....


பேசும் தமிழன்
அக் 28, 2025 19:55

ஹிந்தி பேசும் நம் நாட்டுக்கு மக்களுக்கு ஓட்டுரிமை கொடுக்க கூடாது.... ஆனால் உருது பேசும் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நாட்டில் இருந்து திருட்டுத்தனமாக உள்ளே வந்தவர்கள் எல்லோருக்கும் ஓட்டுரிமை வழங்க வேண்டும்... அப்படி தானே சைமன் !!!!


தாமரை மலர்கிறது
அக் 28, 2025 19:22

ஓட்டுபோடுவதற்காக தமிழகத்திலிருந்து பீகார் செல்ல முடியாது. வடஇந்தியர்களுக்கு வாழும் இடத்தில் ஓட்டுரிமை கொடுக்கப்பட வேண்டும். அது தான் சிறந்த ஜனநாயகம். எல்லோருக்கும் சம உரிமை. சமூக நீதி. மூணு கோடி வடஇந்தியர்களுக்கு வரும் தேர்தலில் கண்டிப்பாக ஓட்டுரிமை கிடைக்கும். பிஜேபி தான் மெஜாரிட்டி பெறும்


Sundar R
அக் 28, 2025 18:44

சீமான், திமுகவை தமிழகத்தை விட்டு நிரந்தரமாக அப்புறப்படுத்தினால் தான் அவருக்கு செல்ல வேண்டிய அரசியல் பாதை தெளிவாக தெரியும். அதை விடுத்து, மூச்சை தொலைத்து வேறு விஷயங்களைப் பற்றி எவ்வளவு பேசினாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.


Sampath V
அக் 28, 2025 17:08

பல மொழிகள் கற்றவன் பண்டிதன். என்று தமிழ் கூறுகிறது.


Easwar Kamal
அக் 28, 2025 16:45

இப்போது கிட்ட தட்ட தெலுங்கு மாநிலமேகி கொண்டு இருக்கிறது. மாறியதாய் ஹிந்தி வந்துட்டு போகட்டுமே. மீண்டும் 5 ஆண்டு விட்டால் ஊரில் உள்ள எல்லாவற்றுக்கும் நாயுடு/ ரெட்டி என்று பேரை மாற்றி வைத்து விடுரகள் இந்த அரசாங்கம். நமக்கு இருப்பதோ ஒரு மாநிலம் அதயும் புடிங்கி விட்ருவானுக இந்த dravia மாடல் கூட்டம். விழித்து கொள்ளுங்கள்.


Anand
அக் 28, 2025 16:39

இன்னும் சில நாட்களில் முற்றிப்போய் சட்டையை கிழித்துக்கொண்டு திரியப்போகிறான்.


S.V.Srinivasan
அக் 28, 2025 16:13

வட மாநிலத்திலிருந்து அவர்கள் குடும்பத்தை காப்பாற்ற இங்கு வருகிறார்கள். இங்க இருக்கிற இளைஞர்கள் டாஸ்மாக் சரக்கை அடித்து விட்டு தெருவில் மட்டையாகி போவதில் குறியாக இருக்கிறார்கள். எங்கு வேலை கிடைத்தாலும் போய் வேலைசெய்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனையே கிடையாது. இந்திய குடிமகன் என்ற முறையில் எல்லோருக்கும் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் செல்லும் உரிமை இருக்கிறது. அதை தடுக்க எந்த கொம்பனாலும் முடியாது. சீமான் பொது இடங்களில் பேசும்போது உணர்ச்சி வசப்படாமல் பேசுவது நல்லது. நீங்கள் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது இந்த ஜென்மத்தில் நடக்காது. அதையும் நினைவு கொள்ளுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை