உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழிசையா, வானதியா? தேசிய பொ.செ., பதவிக்கு போட்டி

தமிழிசையா, வானதியா? தேசிய பொ.செ., பதவிக்கு போட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பா.ஜ., தேசிய பொதுச்செயலர் பதவியை பிடிக்க, முன்னாள் கவர்னர் தமிழிசை, அக்கட்சியின் மகளிரணி தேசிய தலைவர் வானதி ஆகியோர் ஆர்வம் காட்டும் தகவல் வெளியாகியுள்ளது.ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல், செப்., 1 முதல் நடந்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fnfwzmqp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஆர்வம்

இப்பணிகள் முடிந்ததும், அக்டோபர், நவம்பரில் கிளை கமிட்டி, மண்டல, மாவட்ட, மாநில தலைவர்கள், மாவட்ட, மாநில, தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடக்கும். வரும் டிசம்பர் இறுதியில், தேசிய தலைவர் தேர்தல் நடக்கும். புதிய தேசிய தலைவர் தேர்வானதும், தேசிய பொதுச்செயலர்கள், துணை தலைவர்கள், செயலர்கள், இளைஞரணி, மகளிரணி, எஸ்.சி., அணி போன்ற அணிகளின் தேசிய தலைவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.பா.ஜ., கட்சி பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். எனவே, தேசிய நிர்வாகிகள் நியமனத்தில், அதிகமான பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கஉள்ளது.தெலுங்கானா, புதுச்சேரி கவர்னராக இருந்த தமிழிசை தற்போது எந்த பொறுப்பிலும் இல்லை. பா.ஜ., மகளிரணி தேசிய தலைவராக இருக்கும் வானதியின் பதவிக்காலமும் டிசம்பரில் முடிகிறது.எனவே, இருவரும் தேசிய பொதுச்செயலர் பதவியை பிடிக்க ஆர்வம் காட்டி வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், தேசிய பொதுச்செயலர்கள் அருண் சிங், சுனில் பன்சால் ஆகியோரிடம் தமிழிசையும், வானதியும் பேசி வருவதாக கூறப்படுகிறது.

வாய்ப்பு

பா.ஜ., தேசிய நிர்வாகிகளில், பொதுச்செயலர் பதவி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. முக்கிய முடிவுகள் எடுக்கும் உயர்நிலை கூட்டங்களில், தேசிய பொதுச்செயலர்கள் பங்கேற்பர். ஏதாவது ஒரு மாநிலத்திற்கு மேலிட பொறுப்பாளராகவும் நியமிக்கப்படுவர். தற்போது பெண்கள் யாரும் பொதுச்செயலர்களாக இல்லை. பொதுச்செயலராக இருந்த புரந்தேஸ்வரி, ஆந்திர மாநில பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய நிர்வாகிகள் நியமனத்தின்போது, பெண்கள் இருவருக்கு, குறிப்பாக தென் மாநிலங்களைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பொதுச்செயலர் பதவி கிடைப்பது உறுதியாகி உள்ளது. கோவிந்தாச்சாரியாவுக்கு பின், தமிழகத்தைச் சேர்ந்த யாரும் பா.ஜ., தேசிய பொதுச்செயலராக இருந்ததில்லை. எனவே, இந்த முறை தங்களுக்கு பொதுச்செயலர் பதவி கிடைக்கும் என்று தமிழிசையும். வானதியும் நம்புவதாகவும், அதற்காக தீவிரமாக முயற்சித்து வருவதாகவும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இருவரில் ஒருவருக்கு தேசிய பொதுச்செயலர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பா.ஜ., வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Jay
செப் 28, 2024 12:53

கட்சியிலிருந்து ரிட்டயர் ஆகி கவர்னராகிய பின் மறுபடியும் அரசியலுக்கு வருவது பிஜேபிக்கு சுணக்கத்தை தான் ஏற்படுத்தும். அண்ணாமலையின் முகம் தான் தமிழ்நாட்டின் பிஜேபியின் வளர்ச்சிக்கு உதவும். பழைய முகங்கள் தமிழக மக்களை பொருத்தவரை அவ்வளவு தூரம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தமிழிசையை விட சிறந்தவர்கள் வானதி, விஜயதாரணி, குஷ்பூ. இல கணேசன், சி பி ராதாகிருஷ்ணன் போன்றோர் ஒதுங்கியது போல் தமிழிசை அவர்களும் இருக்கலாம். சென்னை தெற்கு தொகுதியில் தமிழிசைக்கு பதிலாக குஷ்பூ விஜயதாரணியம் நின்று இருந்தால் அதிக ஓட்டுகள் வாங்கியிருப்பதற்கு வாய்ப்பு அதிகம்.


Velayutham rajeswaran
செப் 28, 2024 10:36

உள்ளூரில் கட்சி வளர்க்க முடியல இதில் தேசிய அளவில் பதவி கேட்குதா


ஆரூர் ரங்
செப் 28, 2024 09:27

ஹிந்தி தெரிய வேண்டும். காங்கிரஸிலும் இதையே எதிர்பார்க்கிறார்கள்.


கோபாலகிருஷ்ணன்
செப் 28, 2024 08:53

வானதி அவர்கள் ஏற்கனவே அகில இந்திய மகளீரணி தலைவியாக பதவி வகித்தவர்.... ஆனால் அவர் இந்திய அளவில் கட்சியை வளர்க்க இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தது மிக, மிக, மிக குறைவு எனலாம் அவரின் அரசியல் எல்லாம் தமிழகத்தில் தான் நடத்தி கொண்டிருக்கிறார் ஆகையால் வானதி இல்லை.... தமிழிசை கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்....தவிர இந்தியா முழுவதும் அறிந்த முகம் இல்லை, இந்தி புலமையும் இல்லை மேலாக அண்ணாமலைக்கு எதிராக பேட்டி கொடுத்து தலைமையிடம் குட்டு வாங்கியவர்....ஆதலால் தமிழிசைக்கு வாய்ப்பு குறைவு.... விஜய் தாரிணி சமீபத்தில் தான் கட்சியில் சேர்ந்தார்.... அவரின் கட்சி பணியும் சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை...தேவை என்றால் குஷ்பு வகித்த பதவியான அகில இந்திய மகளீர் ஆணைய உறுப்பினராக நியமித்து தன் இறுப்பை காட்டிக்கொள்ளலாம்... கடைசியாக குஷ்பு..... இவர் ஏற்கனவே அகில இந்திய பதவியை வகித்தவர், இந்தி சரளமாக பேசக்கூடியவர், இந்தியா முழுவதும் தெரிந்த முகமானவர், தலைமையின் குட்புக்கில் இருப்பவர், அண்ணாமலையிடம் இணக்கமாக இருப்பவர், சிறுபான்மையினர்..... ஆதலால் அப்பதவிற்கு பொருத்தமானவர் இவராகத்தான் இருக்க முடியும்


VENKATASUBRAMANIAN
செப் 28, 2024 08:18

அப்போ விஜயதாரணி குஷ்பு


வீரபாண்டி அலங்காநல்லூர்
செப் 28, 2024 08:58

இந்த ரெண்டு பாட்டிகளுக்கும் கொடுக்காம அப்பதவியை அக்கா விஜயதாரணிக்கு கொடுக்கலாம். குஷ்பு வேஸ்ட் கட்சியில் இருந்து எப்போது வேணாலும் ஓட்டம் பிடிப்பார்.


Barakat Ali
செப் 28, 2024 13:43

விலைபோகிறவர்களை நம்பக்கூடாது ......... நம்மால் வாங்கப்பட்டவர்களை எதிரியும் கொஞ்சம் அதிகம் செலவு செய்து வாங்கிவிட முடியும் .......


அன்பன்
செப் 28, 2024 06:31

ஒருத்தர் கெவுனரா ஆண்டு அனுபவிச்சுட்டாரு. வானதி அக்காவுக்கு பதவி குடுக்கணும்.


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 28, 2024 09:38

ஆளுக்கு பாதியா கொடுத்தா என்ன? ராத்திரிக்கு ஒருத்தரு பகலுக்கு ஒருத்தரு


பல்லவி
செப் 28, 2024 06:10

ஒருவர் தண்ணீருக்கு இழுத்தால் மற்றவர் கரைக்கு இழுத்துச் செல்வார் என்பது நிச்சயம்.