உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வாட்ஸ் அப் குரூப்பில் முடிவாகிறது டெண்டர்: கோவை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அதிர்ச்சி

வாட்ஸ் அப் குரூப்பில் முடிவாகிறது டெண்டர்: கோவை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அதிர்ச்சி

கோவை: கோவை மாநகராட்சியில் கோரப்படும் டெண்டரை, சிண்டிகேட் முறையில் இறுதி செய்வதற்காக, ஒப்பந்ததாரர்களுக்குள், 'வாட்ஸ் அப்' குரூப் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது, அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.கோவை மாநகராட்சியின், பொது நிதி மற்றும் மத்திய - மாநில அரசுகள் வழங்கும் மானிய நிதி சேர்த்து, ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வரை டெண்டர் கோரப்பட்டு, பணிகள் செய்யப்படுகின்றன.ஒப்பந்ததாரர்கள் 'சிண்டிகேட்' போடக் கூடாது; ஒளிவு மறைவு இருக்கக் கூடாது என்பதற்காக, 'இ-டெண்டர்' நடைமுறை பின்பற்றப்படுகிறது.இம்முறையில் டெண்டர் இறுதி செய்தாலும், ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கேட்டு, ஆளுங்கட்சியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் நெருக்கடி கொடுக்கின்றனர்.கமிஷன் கொடுக்காவிட்டால், 'ஒர்க் ஆர்டர்' வழங்காமலும், பணத்தை விடுவிக்காமலும் நிறுத்தி வைக்கும் நடைமுறை, சமீபகாலமாக பின்பற்றப்படுகிறது.சில நாட்களுக்கு முன், ஒப்பந்ததாரர்களை அழைத்து, மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசிக்கப்பட்டது.அப்போது, 'டெண்டர் கோருவதில் போட்டி போடக்கூடாது; யார் யாருக்கு என்னென்ன பணி தேவை என முன்னரே தெரிவித்தால், அவர்களுக்கே ஒதுக்கப்படும்; ஒரு ஒப்பந்ததாரருக்கு ஒரு வேலை கொடுக்கப்படும். அப்பணியை முடித்ததும் அடுத்த வேலை தரப்படும்' என, அறிவுறுத்தியதாக, ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.இச்சூழலில், கடந்த, 14ம் தேதி காலை, 11:30 மணியளவில்,'சிசிஎம்சி டெண்டர் மெம்பர்ஸ்' என்ற பெயரில், புதிதாக, 'வாட்ஸ் அப்' குழு உருவாக்கப்பட்டு இருக்கிறது; 192 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றனர். மாநகராட்சியில் சமீபத்தில் கோரப்பட்ட டெண்டர் இனங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில், எந்தெந்த ஒப்பந்ததாரருக்கு என்னென்ன பணி வேண்டும் என கேட்டு, பதிவு போடச் சொல்லி, அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, 97வது வார்டில் ரூ.11.52 லட்சம் மதிப்புக்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணி கேட்டு, ஒரு ஒப்பந்த நிறுவனத்தினர் பதிவிட்டிருக்கின்றனர். இது, சிண்டிகேட் போல், 'செட்டிங் டெண்டர்' என்பதால், மாநகராட்சி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

'கடுமையான நடவடிக்கை'

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''கடந்த, 14ம் தேதி 'வாட்ஸ் அப்' குரூப் உருவாக்கியுள்ளனர்; அனைவருக்கும் தெரியும் வகையில், டெண்டர் அறிவிப்புகளை வெளியிடுவது பிரச்னையில்லை.அதை வைத்துக் கொண்டு, அவருக்கு இந்த வேலை; இவருக்கு அந்த வேலை என டெண்டரை முடிவு செய்வது தவறானது; கடுமையான நடவடிக்கை எடுப்போம். இதுதொடர்பாக, தமிழக அரசின் உயரதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தமிழ் மைந்தன்
ஜன 18, 2024 21:11

விஞ்ஞான ஊழல் என்றால் சும்மாவா?


Nachiar
ஜன 18, 2024 18:44

புதுப் புது திருட்டு. இதை சமாளிக்கவே மட்டும் மத்தியில் ஒரு துறை வேண்டும். . விக்ரமாதித்தன் வேதாளம் கதை போல் முடிவே இல்லாதது DMK Files, தொடர் கதைதான் போல் தெரிகிறது.


rasaa
ஜன 18, 2024 13:39

வேலை தரமாக இருக்கின்றதா என்பதை ஆராய்ந்து, சோதனை செய்ய இங்கு அதிகாரிகள் இல்லை. கட்டிங் மட்டும் வசூலிப்பார்கள்.


Raa
ஜன 18, 2024 12:10

முகமது பின் துக்ளக்கின் ஆணை : கோயமுத்தூரில் வாட்ஸாப்ப்புக்கு தடை விதித்து ஒப்பந்தங்கள் நேர்மையாக நடக்க நடவடிக்கை எடுத்தத துக்ளக்கின் ஆளுமையை என்ன சொல்லி பாராட்ட? குறிப்பு: கோயமுத்தூரில் மட்டும் தான் வார்ஸாப்புக்கு தடை...பக்கத்தில் போத்தனுரில் கூட தடை இல்லை.


Duruvesan
ஜன 18, 2024 08:39

விடியல் சார் ரொம்ப ஸ்டிட்டு


duruvasar
ஜன 18, 2024 08:34

சர்க்காரியா கமிஷன் சும்மா சொல்லவில்லை திமுக என்பது மேம்பட்ட விஞ்ஞான திருட்டு கும்பல் என்று.


மேலும் செய்திகள்