உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழ் வளர்த்த மதுரைக்கு சோதனை; அ, ஆ தெரியாத 22,000 பேர்

தமிழ் வளர்த்த மதுரைக்கு சோதனை; அ, ஆ தெரியாத 22,000 பேர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையில் எழுத படிக்க தெரியாதவர்கள், 22,768 பேர் என கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு அ... ஆ... கற்பிக்க 1,644 தன்னார்வலர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களை களம் இறக்க கல்வித்துறை முடிவு செய்துஉள்ளது.மதுரையை, 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாற்றும் வகையில், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் மூலம் எழுதப் படிக்க தெரியாதவர்கள் குறித்து, இம்மாதம் முதல் கணக்கெடுக்கும் பணியை துவங்கிஉள்ளது.இதுகுறித்த விபரம் கல்வித்துறை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 22,766 பேர் எழுத படிக்கத் தெரியாதவர்கள் என, பதிவு செய்யப்பட்டுள்ளது. கணக்கெடுக்கும் பணியை ஜூன் 10 வரை, இயக்கக மாநில திட்ட இயக்குனர் நாகராஜ முருகன் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். கணக்கெடுப்பு பணிகளை சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில் கல்வி அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது.இதுகுறித்து சி.இ.ஓ., கூறியதாவது: கணக்கெடுக்கும் பணியிலும், அ, ஆ கற்பித்தல் பணிக்கும் 1,644 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். குறிப்பாக நுாறு நாள் வேலைத் திட்டம், தொழிலாளர்கள் நலவாரியம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஆகிய இடங்களில் கையெழுத்திற்கு பதில் கைரேகை பதிவு செய்யும் அனைவரும் கணக்கெடுக்கப்படுகின்றனர். யாரும் விடுபடக்கூடாது என கலெக்டரும் உத்தரவிட்டுள்ளார். எழுத்தறிவு கல்வியை பெற விரும்புவோர் அருகில் உள்ள அரசு, உதவிபெறும் பள்ளிகளை அணுகலாம். விரைவில் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மதுரை மாற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Balasubramanian
ஜூன் 07, 2024 14:55

எங்கள் தாத்தா முத்தாத்தா காலத்தில் இருந்தே யாரும் படித்தது இல்லை! எங்க பயக பேரப் பிள்ளைகளையும் படிக்க வைக்கவில்லை - இது தான் அ னாவா? என்று விவேக் காமெடியில் வரும் காட்சி போல அல்லவா இருக்கிறது


kuppusamy India
ஜூன் 07, 2024 14:22

முதலில் தமிழக முதல்வர் க்கு தமிழ் கத்து கொடுங்க.....


ஆரூர் ரங்
ஜூன் 07, 2024 11:45

பட்டமேற்படிப்பு படித்தவர்களுக்கே ஆங்கிலம் புரிவதில்லை. டிகிரி படித்ததாக கூறும் விடியல் சீட்டைப் பார்த்துக்கூட தப்பும் தவறுமாகப் பேசுகிறார். இந்த அழகில் கல்வியமைச்சர் தமிழகத்தில்தான் கல்வி வளர்ந்துள்ளது என்கிறார்.


ramani
ஜூன் 07, 2024 04:39

தமிழை மட்டும் வைத்துக் கொண்டு குண்டு சட்டியில் குதிரை ஓட்ட முடியுமா? தேவை மற்றும் பல பாஷைகள். கற்றுக் கொள்ள வேண்டும்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி