உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சர்வ கட்சியினரும் சம்பந்தப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

சர்வ கட்சியினரும் சம்பந்தப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பமாக, தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலரும், ரவுடி நாகேந்திரனின் மகனுமான அஸ்வத்தாமனை, தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், இதுவரை கைதான நபர்களில், வழக்கறிஞர் அருள், தி.மு.க.,வைச் சேர்ந்தவர். அவரது கூட்டாளி சதீஷ், தி.மு.க.,வைச் சேர்ந்தவர். இவரது தந்தை தி.மு.க.,வில், திருவள்ளூர் மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியாக உள்ளார்.வழக்கறிஞர் ஹரிஹரன், த.மா.கா., மாணவர் அணி நிர்வாகியாகவும், ரவுடி அஞ்சலை, பா.ஜ.,வில் நிர்வாகியாகவும், செல்வராஜ் என்பவர், அக்கட்சி உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளனர். மேலும், ஹரிதரன், மலர்க்கொடி ஆகியோர், அ.தி.மு.க., நிர்வாகிகளாக இருந்தனர். தற்போது கைதான அஸ்வத்தாமன், தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி என்பதால், சர்வ கட்சியினரும் சம்பந்தப்பட்டதாக, இந்த வழக்கு மாறியிருக்கிறது.அஸ்வத்தாமனுடன் சேர்த்து, இதுவரை 6 வழக்கறிஞர்கள் கைதாகி உள்ளனர். 'அனைத்து கட்சியை சேர்ந்தோரும் சதி திட்டம் தீட்டி, ஆம்ஸ்ட்ராங் கொலையை செய்துள்ளது வெளிப்பட்டுள்ளது' என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

rama adhavan
ஆக 08, 2024 21:34

இவர் வல்லவனுக்கு வல்லவன் போல் இருக்கு. நல்லவராக இருந்தால் பலர் கூடி ஏன் இவரை தீர்த்து கட்ட வேண்டும்? தமிழகத்தில் 8 கோடி பேர் சிக்கல் இல்லாமல் அமைதியாக உள்ளனரே? ஆனாலும் உண்மை வருவதில்லை.


அப்பாவி
ஆக 08, 2024 12:50

இது அரசியல் சம்பந்தப்பட்ட பேட்டை ரவுடி கேஸ். பணத்தை பங்குபோடறதிலே தகராறு வந்துச்சுன்னா சமாதிதான். முதலில் வெட்டுன அந்த ஆறேழு பேரையும்.போட்டுத்தள்ளுங்க. விசாரணயும் வேண்டாம். புதுசா உண்மையும் தெரிய வேண்டாம்


Sampath Kumar
ஆக 08, 2024 10:03

இதுதாண்டா ஆரியம் கட்டு அமைத்த சமூக அடுக்கு அதன் உள்குத்து வீக்கம் ஆண்டான் அடிமை வர்க்கபேதம் இதை தோடி விட்டு குளிர்காயும் சனாதன சிங்கி களின் நாடகம்


ஆரூர் ரங்
ஆக 08, 2024 13:45

கைதானவர்களில் யாருமே உயர்ஜாதி இல்லை. இதே பட்டியலின மக்களிடம் உங்களை வன்கொடுமை செய்வது உயர் வகுப்பினரா அல்லது இடைச் சாதியினரா எனக் கேளுங்கள். ஆணவக்கொலைகளில் பட்டியலின அல்லது முற்பட்ட வகுப்பினர் யாரும் சம்பந்தப்பட்ட செய்திகள் வருவதில்லையே.


rama adhavan
ஆக 08, 2024 21:36

என்ன பொருள்? பிதற்றல்.


VENKATASUBRAMANIAN
ஆக 08, 2024 08:19

இதுதான் சமூக நீதி.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை