உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கவர்னர் - முதல்வர் இடையே மீண்டும் துவங்கியது மோதல்

கவர்னர் - முதல்வர் இடையே மீண்டும் துவங்கியது மோதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கவர்னர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே, கொள்கை ரீதியாக மோதல் இருந்து வருகிறது. இதனால், இந்த ஆண்டு சட்டசபையில் உரையாற்ற, கவர்னரை அரசு அழைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையில், கவர்னர் அழைப்பில், அவரை முதல்வர் நேரில் சந்தித்து பேசினார். அதன்பின் சுமுக உறவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. அதற்கேற்ப குடியரசு தினத்தன்று, கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.ஆனால், நேற்று முன்தினம் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வெண்மணி கிராமத்திற்கு சென்றார். அங்கு, 1968ம் ஆண்டு படுகொலையில் உயிர் பிழைத்த பழனிவேல் என்பவரை சந்தித்து பேசினார். மீனவர்கள் வசிக்கும் நம்பியார் நகர், பட்டியலின சமூகத்தினர் வசிக்கும் ஜீவா நகரை பார்வையிட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ds9d4wen&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதைத் தொடர்ந்து தன் 'எக்ஸ்' பதிவில், 'கிராமங்கள் முழுதும் மோசமான வறுமை நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த துரதிருஷ்டவசமான நிலையில், சகோதர - சகோதரிகள், சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக, இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என, ஒருவரால் வியக்க மட்டுமே முடியும்' என கூறியுள்ளார்.இது, ஆளுங்கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே வார்த்தை போர் துவங்கி உள்ளது. காந்தி நினைவு தினம் தொடர்பாக, நேற்று முன்தினம் முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், 'தேசத் தந்தை காந்தி ஒற்றை மதவாத தேசியவாதத்தை ஏற்கவில்லை; அதனாலேயே மத வெறிக்கு பலியானார். அவர் மீதான கோபம் வகுப்புவாதிகளுக்கு குறையவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், அவரை வலதுசாரி சக்திகள் இழிவுபடுத்துவது தொடர்கதை. காந்தியால் இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என கவர்னர் ரவி சொல்லி இருப்பது, வன்மம் கலந்த நோக்கத்துடன் தான்' என, கூறியிருந்தார்.அதற்கு முந்தைய நாளே, 'காந்தி குறித்து நான் அவ்வாறு பேசவில்லை' என, கவர்னர் விளக்கம் அளித்திருந்தபோதும், முதல்வர் அதை சுட்டிக்காட்டியிருந்தார்.இச்சூழலில், நேற்று கவர்னர் ரவி வெளியிட்டுள்ள பதிவு:நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால், நாகப்பட்டினம் மாவட்டத்தில், தகுதி வாய்ந்த ஏழை கிராமத்தினர், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனை பெற முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.பாட்டாளி வர்க்க சாம்பியனாக அழைத்துக் கொள்ளும் ஓர் அரசியல் கட்சியால், கீழ்வெண்மணி கிராமத்தில், சுற்றிலும் ஏழைகளின் ஓலை குடிசைகளுக்கு மத்தியில், படுகொலை செய்யப்பட்ட 44 ஏழைத் தொழிலாளர்களை நினைவுகூரும் வகையில், விலை உயர்ந்த கான்கிரீட் கட்டுமானம், ஒரு நினைவுச் சின்னமாக அமைந்திருப்பது முரணானது மட்டுமின்றி, தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானமும் கூட. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.விதிகளுக்கு உட்பட்டேவீடுகள் ஒதுக்கீடுதமிழகத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, ஏழைகளுக்கான வீட்டு வசதி திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன; எவ்வித குறைபாடும் இல்லை. திட்டங்கள் குறித்த விபரங்களை விரிவாக அளிக்க, அத்துறை தயாராக உள்ளது.வீட்டு வசதி வாரியத்தில் வீடுகள் விற்பனைக்கான வழிகாட்டி விதிகள் இருப்பது போன்று, ஏழைகளுக்கான திட்டங்களுக்கும் விதிகள் உள்ளன. இதற்கு உட்பட்டு தான் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன.-முத்துசாமி, அமைச்சர், வீட்டு வசதி துறை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

DVRR
ஜன 30, 2024 17:43

1) தமிழ்நாட்டில் மேலும் பல குறிப்பிடத்தக்க முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நேற்றைய மாநாடு அமைந்தது என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அதாவது அங்கே ஒருவன் லுலு மாதிரியே மாட்டிக்கொண்டான் போல இருக்கின்றது அவனிடம் இவர் டீல் நான் ரூ 12,000 கோடி கொடுக்கின்றேன் நீ கொடுப்பது போல அது இருக்கட்டும் 2) மதவெறிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்???யாரு நீ???நீ தானே சொன்னே நான் கிருத்துவன் என்று???இந்த மதவெறியை என்ன சொல்வது???3 3) கைதாகியும் செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்வது ஏன்? - சென்னை ஐகோர்ட்டு கேள்வி???இது தான் திருட்டு திராவிட மாடல் என்று சொல்லியிருக்கவேண்டும் கோர்ட்டில் 4) ஆதிக்க வல்லூறுகளுக்கு எதிராக நம் இந்தியா ஒன்றுதிரள உறுதியேற்க வேண்டிய நாள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்???யாரு ஆதிக்க வல்லூறு திருட்டு திராவிட மடியில் அரசு தானே??? 5) மதவெறிக்கு எதிராக குரல் கொடுப்போம்: வைகோ???யாரு என்ன பேசுறதுன்னு விவஸ்தையே இல்லையா??? 6) முதலீட்டாளர்களுக்கு உதவி செய்ய தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். நாங்கள் துபாய் லூலூ போர்முலா வைத்தருக்கின்றோம்


திகழ்ஓவியன்
ஜன 30, 2024 19:21

ஒருத்தன் பிரதமர் ஆனதும் 8400 கோடி யில் தனிவிமானம் வாங்கி ஊர் ஊரா உலகம் என்று சுற்றினான் , கடைசியில் திரும்பி வந்து தேசிய சொத்துக்களை விற்றான் அது மாதிரி நடக்காமல் இருந்தாள் போதுமே


Duruvesan
ஜன 30, 2024 16:37

விடியலுக்கு விடியல், ஜூன் மாதம் முதல் சங்கிகள் தொடங்குவார்கள்


Sridhar
ஜன 30, 2024 13:30

இவ்வளவு அக்கரமங்களையம் இமாலய ஊழல்களையும் செய்துகொண்டு அவற்றில் மாட்டியபிறகும் தயிரியமாக இந்த திருட்டு கும்பலால் இப்படி வீராவேசமாக பேசமுடிகிறதே, அதை கண்டிப்பாக பாராட்டியே தீரவேண்டும். ஜெயிலுக்கு போகப் போகிறோம்ங்கற பயம் அவனுக கண்களில் துளிக்கூட இல்லை பாருங்க. எல்லாம் 2G சரித்திரம் கொடுக்கற தயிரியம்தான் இப்போ இருக்கற அரசின் மெத்தனப்போக்கை பார்க்கும்போது இவுனுக தயிரியத்தில் தப்பு சொல்லமுடியாது.


duruvasar
ஜன 30, 2024 11:43

முத்துசாமி அய்யா டாஸ்மாக் வேலைகள் தலைக்குமேல் இருக்கையில் வீட்டு வசதி பற்றியெல்லாம் பேசவேண்டாமே. அதுபோக தன்கைவசமுள்ள அந்த விதிமுறைகளை விலாவாரியாக வெளியிடலாமே. அதுவும் பிப்ரவரி 8 க்கு பிறகுதான் முடிவு செய்யப்படுமா ?


Dharmavaan
ஜன 30, 2024 10:40

கையாலாகாத திருடனை திருடன் என்றால் கோபம் வருகிறது


venugopal s
ஜன 30, 2024 13:04

ஆளுநரை இப்படி எல்லாம் அவமரியாதையாகப் பேசக்கூடாது!


Dharmavaan
ஜன 30, 2024 10:32

காரணம் உச்சநீதியின் கேவலமான தீர்ப்பே ...ஆளுநர ஜட்ஜ் போல் நியமிக்கப்பட்டவர் நீதிபதிக்கு சமம் .அவர் ஜனாதிபதிக்கு மட்டுமே கட்டுப்பட்டவர் அவரை கோர்ட் கேவலப்படுத்தியதன் விளைவே திமுக ரவுடி கூட்டம் அநாகரீக பேச்சு. கோர்ட் சரியாக செயல்பட்டால்தான் தீர்வு. ஆளுநருக்கேற்ற மரியாதை கொடுக்க வேண்டும்


Velan Iyengaar
ஜன 30, 2024 11:33

நீதிபதிக்கு சமம் என்பதே தவறு ஒப்புக்கு அப்படி வைத்துக் கொண்டாலும்.. நடுநிலையோடு தான் எந்த நீதிபதியும் செயல்பட வேண்டும் கேடுகெட்ட தனத்தை அந்த பதவியில் உட்கார்ந்து கொண்டு செய்யக்கூடாது


Indian
ஜன 30, 2024 09:33

ஏழு அரை இங்கு இருக்கும் வரை இப்படிப்பட்ட மோதல் போக்கு இருந்துக்கொண்டே தான் இருக்கும்


vijay
ஜன 30, 2024 10:25

ஆமாம் ஆமாம்... திராவிட மாடல் என்ற "ஏழரை" இங்கு இருக்கும் வரை போர் இருந்துகொண்டுதான் இருக்கும்.


Velan Iyengaar
ஜன 30, 2024 08:33

BJ கட்சியை தமிழகத்தில் குழி தோண்டி புதைக்கும் வேலைய செவ்வெனே செய்து வருவது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளும் தமிழக மக்கள்...


VENKATASUBRAMANIAN
ஜன 30, 2024 08:33

சனி தோஷம் கவர்னருக்கு இல்லை. முதலவருக்குத்தான். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார். இனிமேல் மக்கள் ஏமாற மாட்டார்கள். அந்த பயம் திமுகவை பேச வைக்கிறது


Svs Yaadum oore
ஜன 30, 2024 08:17

தேசத் தந்தை மத வெறிக்கு பலியானாராம்...


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி