உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / புதிய டி.ஜி.பி., பட்டியல் அனுப்பாததில் கோளாறு உள்ளது: பழனிசாமி ஆவேசம்

புதிய டி.ஜி.பி., பட்டியல் அனுப்பாததில் கோளாறு உள்ளது: பழனிசாமி ஆவேசம்

திருச்சி: ' 'அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்கும் போது, ஸ்டாலின் சட்டை, வேஷ்டி இரண்டையும் கிழித்துக் கொண்டு செல்வார்,'' திருச்சியில் பழனிசாமி பேசினார். 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் பிரசாரம் மேற்கொண்டிருக்கும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று திருச்சி, திருவெறும்பூரில் பேசியதாவது: தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்று 51 மாதங்களில், மக்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. கவர்ச்சிகரமாக பேசி, நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளை வெளியிட்டு ஓட்டு வாங்கியவர்கள் தி.மு.க.,வினர். தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துள்ளது. மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும்போது, விலைவாசி உயர்வை குறைக்க நடவடிக்கை எடுப்போம். அமைச்சர் நேரு, எம்.ஜி.ஆருக்கு பெண்களிடம் இருந்த செல்வாக்கை போல், ஸ்டாலினுக்கு இருப்பதாக தெரிவித்தார். எம்.ஜி.ஆருக்கு என்று தனி அடையாளம் உள்ளது. அவருக்கு இணையாக யாரும் இல்லை. அவருக்கு இணையாக வைத்து, யாரையும் பேசக்கூடாது. சட்டசபையில், அ.தி.மு.க., அழுத்தம் கொடுத்ததால் தான், மகளிர் உரிமை தொகை திட்டத்தை தி.மு.க., அரசு கொண்டு வந்தது. ஓட்டுக்களை வாங்கும் வரை அழகாகவும், கவர்ச்சிகரமாகவும் தி.மு.க.,வினர் பேசுவர். ஆட்சிக்கு வந்து விட்டால், மக்களை மறந்து விடுவர். தமிழக டி.ஜி.பி., ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன், புதிய டி.ஜி.பி., பட்டியலை அனுப்பி இருக்க வேண்டும். புதிதாக நியமனம் செய்யப்பட வேண்டிய டி.ஜி.பி.,க்களின் பட்டியலை இதுவரை, தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பவில்லை. இதில், ஏதோ ஒரு உள்நோக்கமும், கோளாறும் இருக்கிறது. இது குறித்து, தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கருணாநிதி குடும்பத்திடம் அடிமை சாசனம் எழுதிய கொடுத்தவர்கள் தி.மு.க., அமைச்சர்கள். தி.மு.க.,வினருக்கு லாபம் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் விலை உயர்த்தி விடுகின்றனர். விலை உயர்வு காரணமாக, அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில், சட்டசபையில் ரகளை செய்து, சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வந்த ஸ்டாலின், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்கும் போது சட்டை, வேஷ்டி இரண்டையும் கிழித்துக் கொண்டு செல்வார். அது தான் நடக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

pakalavan
ஆக 24, 2025 14:10

கூவத்தூரில் கூத்தடித்த கயவர்கள்


Kadaparai Mani
ஆக 24, 2025 10:15

Very strange tamil main stream media. Why no media showing the EPS meetings which are getting crowds like MGR.Media third rate in tamil nadu. Day before Yesterday mr.Annamalai praised EPS and wanted him to be the next CM.Why no media given headlines.In the last four years tamil media has earned very bad name and these people will be very active once EPS assumes power in 2026


S.L.Narasimman
ஆக 24, 2025 07:36

எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்து ஏழைமக்கள் நல பணியில் சிறப்பாக செயல்படும் போது சுடாலின் வேட்டி சட்டை மட்டுமில்லாது டோப்பா தலையையும் பிய்த்து கொண்டு ஓடும் காலம் நிச்சயம் நடக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை