உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எங்கு அமைகிறது ஒசூர் விமான நிலையம்? காத்திருக்கிறது ‛டிட்கோ

எங்கு அமைகிறது ஒசூர் விமான நிலையம்? காத்திருக்கிறது ‛டிட்கோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஓசூர் விமான நிலையம் அமைக்க, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழக அரசின், 'டிட்கோ' நிறுவனம் தேர்வு செய்த நான்கு இடங்களில், இந்திய விமான நிலையங்களின் ஆணைய அதிகாரிகள், செப்டம்பர் இறுதியில் ஆய்வு செய்தனர். இத்திட்டத்திற்கு போட்டியாக, ஓசூர் அருகேயுள்ள சோமனஹள்ளியில் விமான நிலையம் அமைக்க, கர்நாடக அரசு திட்டமிட்டு உள்ளது. எனவே, ஓசூர் விமான நிலைய திட்டப்பணிகளை விரைவாக துவக்க, ஏ.ஐ.ஐ., முடிவை எதிர்பார்த்து, டிட்கோ காத்திருக்கிறது.

போக்குவரத்து நெரிசல்

தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் உருவெடுத்துள்ளது. அங்கு, டாடா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள், ஏற்கனவே தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. இதுதவிர, மின்சார வாகனம், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உற்பத்தி ஆலைகளும் துவக்கப்பட்டு வருகின்றன. தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு விமானத்தில் சென்று, சாலை மார்க்கமாக ஓசூர் செல்கின்றனர். பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்னையாக உள்ளது. ஓசூரில் மேலும் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்களின் பயண நேரத்தை குறைக்கவும், அங்கு சர்வதேச விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 'டிட்கோ' எனப்படும், தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நான்கு இடங்களை தேர்வு செய்தது. அவற்றை, ஏ.ஏ.ஐ., எனப்படும் இந்திய விமான நிலையங்களின் ஆணையத்திடம் வழங்கி, சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்து தர வலியுறுத்தியது. ஆணைய அதிகாரிகள் நான்கு இடங்களில், செப்டம்பர், 29ல் ஆய்வு செய்தனர்.

சாதகமான சூழல்

அதில் எந்த இடத்தில் விமான நிலையம் அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது என்பதை தெரிவித்த பின், அங்கு, விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில், தமிழக எல்லையை ஒட்டியுள்ள சோமனஹள்ளியில், சர்வதேச விமான நிலையம் அமைக்க, கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. ஓசூருக்கும், சோமனஹள்ளிக்கும் இடையேயான துாரம், 50 கி.மீட்டருக்கும் குறைவு. ஓசூர் விமான நிலைய அறிவிப்பால்தான், சோமனஹள்ளியில் விமான நிலையம் அமைக்கும் பணியை துவக்க, கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, ஓசூர் விமான நிலையப் பணிகளை விரைவாக துவக்கும் வகையில், இடத்தேர்வுக்கு, ஏ.ஐ.ஐ., அனுமதியை எதிர்பார்த்து, டிட்கோ காத்திருக்கிறது. இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நான்கில் எந்த இடம் சாதகமாக உள்ளது என்பதை, ஏ.ஏ.ஐ., பரிந்துரை செய்ய வேண்டும். அந்த இடம் தேர்வு செய்யப்பட்டால்தான் இட அனுமதி, திட்ட அனுமதி என, விமான நிலையம் அமைக்கும் பணிகளில் ஈடுபட முடியும். எனவே, விரைந்து ஆய்வு முடிவை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ppk
ஏப் 03, 2025 13:06

தயவுசெய்து உலகம் பகுதியில் வேண்டாம் விவசாயம் அழிந்து விடும் மற்றும் விவசாய மக்கள் வாழ்வாதாரம் அழிந்து விடும் பல குடும்பங்கள் நடுத்தெருவில் வாடும்....


V GOPALAN
அக் 24, 2024 13:37

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலயத்திருலிருந்து தஞ்சாவூர் 35 கிலோமீட்டர் தூரத்தில்தான் உள்ளது. எனவே மெட்ரோ ரயில் மூலம் இவ்விரு மாவட்டத்தையும் இணைதால் 20 நிமிடத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு வரமுடியும் எனவே தஞ்சாவூர் விமான நிலையம் தேவை அற்றது


Parthiban
அக் 24, 2024 20:34

ஓசூரில் விமான நிலையம் அமைப்பது பற்றி கட்டுரை ஆனால் நீங்கள் தஞ்சாவூர் பற்றி பேசுகிறீர்கள்


S.jayaram
அக் 24, 2024 12:40

ஓசூரில் விமான நிலையம் அமைப்பதை விட அதற்கு முன்னால் ஒரு 20 கிம் தொலைவில் அமைத்தால் எந்தப்ரட்சினையும் இன்றி அமைக்கலாம் அவர்கள் எங்கே அமைத்தாலும் நமக்கு பிரட்சினை இல்லை, நாம் பாட்டுக்கு விமான நிலையத்திற்க்கும் இடையில் ஓசூர் நகரை அனைத்து வசதிகளுடனும் உருவாக்கி விடலாம்


Mm.perumal
அக் 24, 2024 11:57

ஒசூர் சர்வதேச விமான நிலையம் அமையும் பட்சத்தில் அதன் வலிமை பன்மடங்காக பெருகும்.ஒசூரில் சாப்ட்வேர் கம்பெனிகள் பெங்ளுருவேயே நம்பிவாழ்ந்துவரும் தமிழ் பட்டாதாரிகள் யிற்றில் பால் வார்த்ததது மாதிரி ஆகும். பல பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் முதலீடுகளை செய்வதற்க்கு தட்பவெட் நிலை நியூயார்க்கு சமமானதாக உள்ளது. பல கோணங்களில் பார்த்தாலும் ஒசூர் பன்னாட்டு விமானதளத்திற்கு 100% பக்காவான தேர்வு.


Nandakumar Naidu.
அக் 23, 2024 15:55

பெங்களூரில் ஏற்கனவே ஒரு சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதிக்க கூடாது. ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி தர வேண்டும்.


Nandakumar Naidu.
அக் 23, 2024 15:53

பெங்களூரில் ஏற்கனவே சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு சர்வதேசமான நிலையம்


கிஜன்
அக் 23, 2024 07:18

வடமேற்கு மாவட்டங்கள் ...அதிவேகமாக வளர்ச்சி பெரும் .... மாண்புமிகு ...தமிழக முதல்வர் சிறப்பு கவனம் எடுக்க வேண்டும் ... அப்படி விமான நிலையம் அமையும்பட்சத்தில் ....அவர்களது முன்னாள் கூட்டணிக்கட்சி தலைவர் ...மூதறிஞர். சக்கரவர்த்தி இராசாசி ...அவர்கள் பெயரை வைக்கவேண்டும் ...


Ravichandran
அக் 24, 2024 16:12

வந்தேறி பெயரை வைக்கவா நாங்கள் விமான நிலையம் அமைக்கிறோம்?


புதிய வீடியோ