உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மொபைல் போனில் தகவலை பகிரும்போது உண்மை தன்மையை உறுதி செய்ய வேண்டும்

மொபைல் போனில் தகவலை பகிரும்போது உண்மை தன்மையை உறுதி செய்ய வேண்டும்

''மொபைல் போன் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களாக உள்ளனர். மொபைல் போனிலிருந்து ஒரு செய்தியை அல்லது தகவலை வெளியிடும்போது அல்லது பகிரும்போது, அது சரியானதா என்பதை உறுதி செய்ய வேண்டும்,'' என, மத்திய அமைச்சர் முருகன் கூறினார்.இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டையொட்டி, 'டிராய்' எனப்படும் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த, 'ஒலிபரப்புத் துறையில் வளர்ந்து வரும் போக்குகள் மற்றும் தொழில்நுட்பங்கள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கு, டில்லியில் நேற்று நடந்தது.இந்த கருத்தரங்கை, தகவல் ஒலிபரப்பு மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை இணை அமைச்சர் முருகன் துவக்கி வைத்து பேசியதாவது: தகவல் ஒலிபரப்புத் துறையில் ஏராளமான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நிகழ்கின்றன. இத்தகைய வியத்தகு முன்னேற்றங்கள், இத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை நாள்தோறும் ஏற்படுத்தி வருகின்றன.'கன்டென்ட்' என்றழைக்கப்படும் உள்ளடக்கம் என்ற விஷயம் தான், எந்தவொரு ஒலிபரப்பு நிகழ்ச்சிகளுக்கும் முக்கியம். அதை வைத்து தான் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க முடியும். மாறி வரும் தற்போதைய சூழ்நிலையில், அந்த உள்ளடக்க விஷயங்கள் தான் பார்வையாளர்களுக்கு முதன்மை மையமாக மாறியுள்ளன.ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களும்கூட இத்துறையை எளிதாக அணுகும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட, எளிய மக்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஆகியவற்றின் பங்களிப்பு மற்றும் அவை சார்ந்த உள்ளடக்க விஷயங்கள் அதிக அளவில் இடம் பெற வேண்டும். மேலும், ஒளிபரப்பு சேவைகள் அனைத்தும் அம்மக்களுக்கு எளிதாக கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டியதும் மிக அவசியம்.நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாசார பரவலில் ஒலிபரப்புத் துறையின் பங்கு வலுவாக இருக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் உயர்தர ஊடக உள்ளடக்க விஷயங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.மொபைல் போன் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களாக உள்ளனர். மொபைல் போனிலிருந்து ஒரு செய்தியை அல்லது தகவலை வெளியிடும்போது அல்லது பகிரும்போது, அது சரியானதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இது, ஒவ்வொருவரின் தார்மீக கடமை. இந்த செய்தி அல்லது தகவல், யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையாவது பாதிக்குமா; நாட்டிற்கு எதிரானதா என்பதை உறுதி செய்த பிறகே செய்தியை அடுத்தவருக்கு பகிர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். -- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

venugopal s
அக் 18, 2024 17:56

அதற்கு முதலில் உங்கள் பாஜக ஐ டி விங் ஐ தடை செய்ய வேண்டும்! பொய் சொல்லி புரளியை கிளப்புவதில் வல்லவர்கள் அவர்கள் தான்!


அப்புசாமி
அக் 18, 2024 17:32

இது மதுரை எய்ம்ஸ் 95 சதவீதம் முடிஞ்சிடிச்சுன்னு பேசுனவருக்கு முட்டு குடுக்கும் போதே தெரியாம போச்சே கோவாலு.


Oviya Vijay
அக் 18, 2024 13:46

பகுத்தறிவு என்பதே இல்லாத சங்கிகள் இங்கே புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது குதூகலமாக உள்ளது. நன்கு கதறுங்கள் சங்கிகளே... தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிவுகளின் தாக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை போலுள்ளது உங்கள் கதறல்கள்... என்றைக்குமே தமிழகம் சங்கிகளின் கூடாரம் அல்ல. மகிழ்ச்சி...


raja
அக் 18, 2024 16:10

கொள்ளை கொலை கடத்தல் மது போதை மருந்து என்பதெல்லாம் தான் பகுத்தறிவு என்றால் சங்கிகள் இன்னும் கூட கதருவார்கள் உடன் பருப்பே....


மோகனசுந்தரம்
அக் 18, 2024 11:16

உம்மைப் போன்ற ஆட்களால் பிஜேபிக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.


raja
அக் 18, 2024 11:54

அது சரி அணிலார் பத்துறுவா பாலாஜி திமுகவுக்கு எவ்வளவு பிரயோஜனமாக இருப்பது போல இவர்களால் பிஜேபி க்கு முடியாது தான்..


கிஜன்
அக் 18, 2024 10:04

அதுபோல ...பிரதமரை ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கும்போது... சரியானவர்களை அழைக்கவேண்டும் .... இல்லையெனில் பிரதமர் பேரும் சேர்ந்து அடிபடும் ...


Iniyan
அக் 18, 2024 07:28

இவர் அறிக்கை விடுவதை தவிர்த்து எந்த ஒரு உருப்படியான காரியத்தையும் செய்ய மாட்டார். இவரை மாதிரி ஆட்களை வைத்துக்கொண்டால் ப ஜ க வளராது


raja
அக் 18, 2024 11:44

நம் தலைவர் போல் ஆட்சி ஏற்றதில் இருந்து பொங்கல் தொகுப்பில் ருவா 500 கொடியில் ஆரம்பித்து வந்த ஆர் மாதத்தில் முன்னாள் நிதி மங்குனி கூறியது போல 30000 கொடி கொள்ளை அடித்து பாட்டிலுக்கு பத்துறுவா அதிகம் வைத்து கோடிகளில் கொள்ளை அடிக்காம இருகாரெண்ணு சந்தோச படு உடன் பிறப்பே... மேலும் மின்சாரத்தின் கட்டணத்தை ஏற்றி சொத்துவரி குடிநீர் வரி குப்பை வரி பதிவு கட்டணம் முதலானவற்றை ஏற்றி கொள்ளை அடிகும் போக்கு இவரிடம் இல்லை என்று சந்தோச படு உடன் பருப்பே


Oviya Vijay
அக் 18, 2024 07:15

அப்படிப் பார்த்தா பிஜேபி தலைவர்கள் பேசுறத எதையுமே ஷேர் பண்ண முடியாது... ஏன்னா நீங்க பேசுறது எல்லாமே பொய் ஆச்சே... வாயால வடை சுடுறதுல டெல்லியில இருக்குற உங்க தலைவர் கூட எக்ஸ்பெர்ட் தானே முருகா...


raja
அக் 18, 2024 11:39

அவரு என்னா நீட்டை விளக்கும் ரகசியம் எண்களுகிட்ட இருக்கு...அனைத்து மகளீரிக்கும் ஆயிரம் ரூபா உரிமை தொகை வழங்குவோம் என்று நம் கோபாலபுரம் தலைவர் போல் வாயால் வடை சுட்டாரா உடன் பிறப்பே...


raja
அக் 18, 2024 11:50

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு ஊதியம் வழங்க படும் என்ற நமது பிரசென்னாவின் மொழியில் சொல்லவேண்டுமானால் தலைமை வேலைக்காரன் கூரியது போல வாயில் வடை சுட்டாரா உடன் பிறப்பே... ஏதாவது ஒன்று சொல்.. வாங்கும் கேவலம் ருவா 200 க்காக பொத்தாம் பொதுவாக வாய்க்குள் வந்ததை எல்லாம் டாஸ்மாக் அடிமை போல ...கூடாது உடன் பருப்பே...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை