உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விஜயின் சனிக்கிழமை பிரசாரம் கிண்டலடிக்கும் உதயநிதி

விஜயின் சனிக்கிழமை பிரசாரம் கிண்டலடிக்கும் உதயநிதி

சென்னை: ''சனிக்கிழமைகளில் மட்டும் வெளியே வந்து, மக்களை சந்திக்கும் வழக்கம் எனக்கு இல்லை,'' என, த.வெ.க., தலைவர் விஜயை, துணை முதல்வர் உதயநிதி சாடினார். சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், சென்னை வேப்பேரியில், 'முன்னேற்றப் பாதையில் முப்பெரும் விழா' பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.

அதில், துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:

நான், பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்வேன். வாரத்திற்கு, 4 அல்லது 5 நாட்கள் வெளியூரில்தான் இருப்பேன். சனிக்கிழமைகளில் மட்டும் வெளியே வந்து மக்களை பார்க்கும் பழக்கம் எனக்கு இல்லை. ஞாயிற்றுகிழமை கூட வெளியே தான் சுற்றிக் கொண்டு இருப்பேன். நான் கிழமைகளை பார்ப்பது கிடையாது. சிலரால் சனிக்கிழமை பிடிக்காமல் போகிறது. நான் வெளியூர்களுக்கு செல்லும்போது, பெண்கள் பலர் மனுக்கள் வழங்குவர். நான் இளைஞரணி செயலராக இருந்தபோது, கொஞ்சம் மனுக்கள் வரும். இப்போது துணை முதல்வராக இருப்பதால், என்னுடைய காரில், மனுக்கள் வைக்க இடமில்லை. இருந்தாலும், மனுக்களை பெற்று, அவர்களிடம் பேசுவேன். சிரித்த முகத்துடன் என்னை வரவேற்பர். குறிப்பாக மாதத்தின், 14, 15, 16ம் தேதிகளில் சென்றால், தைரியமாக செல்லலாம். அப்போதுதான், வங்கியில் மகளிர் உரிமை தொகை வந்தடையும். அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி, 'பா.ஜ.,வுக்கு தான் நன்றியுடன் இருப்பேன்' என்கிறார். நன்றியை சொல்ல யாராவது, 4 கார் மாறி செல்வரா? அ.தி.மு.க.,வின் தலைமை அலுவலகம், சென்னை ராயப்பேட்டையில் இருக்கிறது என நினைக்கிறோம். ஆனால், அது மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வீட்டில் உள்ளது. அ.தி.மு.க.வில் பல்வேறு அணிகள் உள்ளன. தற்போது, புதிதாக ஜெயலட்சுமி அணி என, ஒன்று உருவாகி உள்ளது. அந்த பெண், ஜெயலலிதாவின் வாரிசு என கூறுகிறார். முகச் சாயலும் அவரை போல்தான் இருக்கிறது. தமிழக அரசியலில் புதிதாக சில கட்சிகள் வந்துள்ளன. கொள்கை என்றால் என்ன என்று, அக்கட்சிகள் கேட்கின்றன. அந்த கட்சிகளை சேர்ந்த இளைஞர்களிடம், தி.மு.க.வின் கொள்கை குறித்து, நம் கட்சியினர் பேச வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Padmasridharan
செப் 30, 2025 16:52

யாராவது, 4 கார் மாறி "செல்வரா?".. இது சரியா அய்யா


SUBRAMANIAN P
செப் 27, 2025 13:53

திமுகவுல பல ஆண்டுகளாக தொண்டனாகவே இருக்கும் பலருக்கு தேர்தல்ல போட்டியிட சீட்டு இல்ல.. இதுக்கு பதில் நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.. பூமியிலிருந்து விளையும் பொருட்களை உண்டால் தொண்டர் யோசிப்பார்..


JANA VEL
செப் 27, 2025 11:22

மனு எல்லாம் வாங்கி காரில் இடம் நிரம்பியவுடன் கரை எதாவது ஒரு ஆற்றுக்கோ அல்லது ஒரு பட்டாணி கடைக்கோ விட்டால் கார் சுத்தமாக காலியாகி இன்னும் இடம் கிடைக்குமே. மனுவை பற்றி யாரு கேக்கபோறாங்களே


SULLAN
செப் 27, 2025 12:25

மனு என்றாலே சமூக அநீதி என்கிறீரா ??


ராஜன்
செப் 27, 2025 10:47

மனுக்களை வைக்க காரில் இடமில்லை என்று கூறி அவரே இந்த ஆட்சியில் அவ்வளவு குறைகள் உள்ளது என்று ஒத்துக்கிறாரா


பாலாஜி
செப் 27, 2025 08:40

திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமைவரை வாரம்தோறும் விஜய் புஸ்ஸியில் மூழ்கி கிடப்பதால் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் அரசியலுக்காக ஒதுக்கியுள்ளார்.


Vasan
செப் 27, 2025 08:35

இரவெல்லாம் கண் விழித்து, அயராது, தமிழக மக்களுக்காக உழைக்கும் திரு உதயநிதி அவர்களே, புற்றீசல் போல் வரும் சிறு சிறு திரையுலக நண்பர்களுக்கெல்லாம் பதில் கூறி உங்கள் பொன்னான நேரத்தை விரயமாக்காதீர்கள். என் கீழ்காணும் அறிவுரையை ஏற்று கொள்ளுங்கள். நான் என் சிறு வயது முதலாகவே உங்கள் பாட்டனாரையும், உங்கள் தகப்பனாரையும் அவர்கள் அர்ப்பணிப்பையும் நல்லாட்சியையும் கண் குளிர பார்த்து பாராட்டி வருகிறேன். 50க்கும் மேலான ஆண்டுகளாக உங்களையும் விட திறமையாகவும், சீரும் சிறப்பாக உழைத்துக்கொண்டிருக்கும் உங்கள் தந்தையார் திரு ஸ்டாலின் அவர்களுக்கு ஒய்வு கொடுங்கள். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, மூதறிஞர் கலைஞர் பாசறையில், திரு ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படி கற்று செம்மனே வளர்ந்துள்ள நீங்கள் முதல்வராகுங்கள். உங்கள் மகன் செல்லப்புதல்வன் திரு இன்பநிதியை தமிழகத்தின் துணை முதல்வர் ஆக்கி உங்களுக்குப் பின் ஆட்சி அரியணையில் அமர வைத்து உச்சி முகருங்கள். பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி ஆகிய 6 தலைவர்களும் வரிசையாக, வாழையடி வாழையாக இருப்பது போல் போஸ்டர் தயாரித்து தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் அறிவியுங்கள். அதுவும் இப்பொழுதிலியிருந்தே. மிக அருமையாக இருக்கும். வாரிசு அரசியல், கொத்தடிமை என்றெல்லாம் பல கிழ நரிகள், குள்ள நரிகள் ஊளையிட்டு கொண்டிருக்கும். அவைகளை இம்மியளவும் சட்டை செய்யாதீர்கள். அவை தானாகவே அடங்கும். அதே நேரம் முதியவர்களை அணைத்து செல்லுங்கள், அவர்கள் பாராட்டையும் பெறுங்கள். அதே நேரம் மேற்கத்திய பாணியில் pant shirt அணிவதை தவிர்த்து திராவிட பாணியில் கறை வேட்டி அணிந்து கறையில்லா ஆட்சி அளியுங்கள். இந்த அறிவுரையை உங்களுக்கு யார் கூறுவர்? பூனைக்கு யார் மணி கட்டுவது? நான் கட்டியுள்ளேன். வாழ்த்துக்கள். வாகை சூடுங்கள். வெற்றி நமதே.


mohana sundaram
செப் 27, 2025 10:38

இது என்ன அறிவுரையோ? கூட்டத்தை விட இது பரவாயில்லை என்று கூறத் தோன்றுகிறது.


SUBRAMANIAN P
செப் 27, 2025 13:50

மூளை சுத்தமா அவுட்டு.. இனிமே காப்பாத்த முடியாது..


kamal 00
செப் 27, 2025 08:32

பால்ட்டாயிலுக்கு பால் ஊத்துற நேரம் வந்துருச்சு


VENKATASUBRAMANIAN
செப் 27, 2025 08:27

இதுவரை வாங்கி ய மனுக்களின் நிலைமை என்ன என்பதை கூறுவாரா. நான்கு வருடங்களில் லட்சக்கணக்கில் மனுக்களை வாங்கியுள்ளார். எந்த கடையில் உள்ளது. எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள். மக்கள் புரிந்து கொண்டு உள்ளனர்


Moorthy
செப் 27, 2025 08:02

விஜய் பேராசை பட கூடாது முதல் தேர்தலிலேயே முதல்வராக வேண்டும் என கள யதார்த்தாதை உணர்ந்து அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதே அவரது திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு பயன் தரும் இ பி எஸ் விஜய்க்காக பிஜேபி யை உதறி விட்டு வருவார் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது தடுக்கப்படும் விஜய் மற்றும் EPS இருவருக்குமே இது வின் வின் ஒருவேளை விஜய் சிறு சிறு கட்சிகளுடன் இனைந்து போட்டியிட்டாலும் பலன் இருக்காது 4 அல்லது 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைக்கும் காங்கிரஸ், வி சி க, கம்யூனிஸ்ட் ஒருவர் கூட திமுக கூட்டணியில் இருந்து விலகி விஜயுடன் சேரமாட்டர் அதிமுக மட்டுமே விஜய்க்கு சரியான பங்காளி


Moorthy
செப் 27, 2025 07:26

விஜய் துணை முதல்வர் இல்லை ஆகவே அவருக்கு ஒரு நாள் போதும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை