உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கருணாநிதி நாணய விழாவால் சலசலப்பு: துாங்க மறுக்கும் தி.மு.க., கூட்டணி தலைவர்கள்!

கருணாநிதி நாணய விழாவால் சலசலப்பு: துாங்க மறுக்கும் தி.மு.க., கூட்டணி தலைவர்கள்!

சென்னை: கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில், தி.மு.க., -- பா.ஜ., காட்டிய நெருக்கத்தால், தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள சலசலப்பு இன்னும் தொடர்கிறது.கடந்த 2014ல் மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்தது முதல், தி.மு.க.,வும், பா.ஜ.,வும் எதிரெதிராக செயல்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சியாக இருக்கும்போது, பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம், சமூக வலைதளங்களில், 'கோபேக் மோடி' என்ற பிரசாரத்தை தி.மு.க., மேற்கொண்டது.தமிழக மக்களிடமிருந்து அதிக வரி வருவாய் பெறும் மத்திய அரசு, தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என, மோடி அரசுக்கு எதிராக, தி.மு.க., தீவிர பிரசாரம் செய்தது. இப்படி தீவிர எதிர்ப்பு மனநிலையில் இருந்த இரு கட்சிகளும், கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் காட்டிய நெருக்கம், தமிழக அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.இதை கடுமையாக விமர்சித்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'தொட்டுப் பார், வெட்டிப் பார், ஹிந்தி தெரியாது போடா என்றெல்லாம் மத்திய அரசை பார்த்து, வறட்டு சவால் விட்ட தி.மு.க., இன்று பா.ஜ.,வுடன் ரகசிய உறவு வைத்துள்ளது' என்றார்.அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், 'கருணாநிதியை புகழ்ந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பா.ஜ.,வுடன் ரகசிய உறவு வைக்க வேண்டிய அவசியம், தி.மு.க.,வுக்கு இல்லை' என்றார்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும், 'கருணாநிதிக்கு நாணயம் வெளியிட்டதில் அரசியல் எதுவும் இல்லை. இது முழுக்க முழுக்க அரசு நிகழ்ச்சி' என்றனர். ஆனாலும், இது பற்றிய சலசலப்பு தி.மு.க., கூட்டணிக்குள் ஓயவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலர் பாலகிருஷ்ணன்:

பா.ஜ.,வை எதிர்ப்பதால்தான் தி.மு.க.,வுடன் மார்க்சிஸ்ட் கூட்டணி வைத்துள்ளது. இது தி.மு.க.,வுக்கும் நன்கு தெரியும். எனவே, தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி ஏற்பட வாய்ப்பே இல்லை. தமிழகத்தையும், தமிழக மக்களையும் தொடர்ந்து மத்திய பா.ஜ., அரசு புறக்கணித்து வருகிறது. எனவே, தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முக்கிய கட்சிகள் எடுக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

siva
ஆக 23, 2024 17:13

வெளிப்படையாக எதிர்ப்பு டெல்லியில் ஆதரவு இது தமிழ் மக்களைப் பேய்க்காட்டும் முயற்ச்சி.


Paramasivam Parama
ஆக 23, 2024 13:30

தி மு கா அடுத்தவன் தோளில் சவாரி செய்யும் குணம் கொண்ட ஒன்று. இல்லையேல் அது ஒரு மணிக்குத்திரை தான்


RAMESH
ஆக 23, 2024 04:55

உண்டியல் பயல்களுக்கு எலும்பு துண்டு இருந்தால் போதும்... மின்சார கட்டணம்... சொத்து வரி... விலைவாசி உயர்வு...பால் விலை...அக்கறை இல்லை பாலாவுக்கு


krishna
ஆக 22, 2024 20:30

BEGGERS HAS NO CHOICE.VENGAIVAYAL KALLA SAARAYA SAAVU KANJA ROWDISM PATHI PESA THUPU ILLADHA VEKKAM KETTA DRAVIDA MODEL KOOTANI KATCHIGAL PONDRA KEVALANGAL ENGUM PAARKKA MUDIYAADHU.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஆக 22, 2024 14:30

தேர்தலுக்கு தேர்தல் திமுக வீசும் பணத்தை அள்ளிக்கொண்டு செல்லும் உடன் பிறப்புகள் இதைப் பற்றி பேச தகுதி இல்லாதவர்கள். முடிந்தால் வேங்கை வயல் மார்க்ச்சிட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டுபிடித்து காட்டட்டும் நீங்கள் சொல்வதை நாங்கள் நம்புகிறோம்.


theruvasagan
ஆக 22, 2024 11:34

கொத்தடிமைகளாக இருக்கிறவர்களுக்கு தங்கள் எஜமானன் அவர்களையே இழிவுபடுத்தினால் கூட முணுமுணுக்காமல் துடைத்துப் போட்டுவிட்டு போக வேண்டிய கேவலமான பொழைப்பு. அப்படி இருக்கும்போது அவர்களுக்கு பிடிக்காதவர்களுடன் பழகினால் எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா. அதற்கு தன்மானம் சுமரியாதை எல்லாம் வேண்டுமே.


Raj
ஆக 22, 2024 11:28

பாவம் சங்கிகளின் நிலைமை


krishna
ஆக 22, 2024 20:28

RAJ SANGIBENDRAAL DHEIVIGAM DESA PATRU.ADH7 PAARAATU.200 ROOVAA OOPIS ENDRAL UNNAI POLA KATTUMARAM KUDUMBA AAYUTKAALA KOTHADIMAI. KEVALATHIN UCHAM.


குமரி குருவி
ஆக 22, 2024 08:29

தி.மு.க.நெருங்குகிறதா.. பா.ஜ.க.நெருங்குகிறதா... ஒருவருக்கொருவர் அனுசரணை தேவை இருக்கு ஆனால் தான் நெருக்கம்...ஆனால் கூட்டணி கட்சிக்கு தி.மு.க. தருகிறது கசப்பான அல்வா


Rajalakshmi Tex
ஆக 22, 2024 07:24

திமுகவின் நிரந்தர கொத்தடிமை கட்சிகள் திமுகவை எதிர்க்க தைரியம் கிடையாது????


Sathyanarayanan Sathyasekaren
ஆக 22, 2024 05:28

கம்யூனிஸ்ட் தனியாக நின்றால் ஒரு தொகுதி கூட கிடைக்காது. திமுகவிற்கு கண்டிஷன் போடும் நிலையில் கம்யூனிஸ்ட்கள் இல்லை.


krishna
ஆக 22, 2024 21:59

ORU THOGUDHIYAA.HA HA HA .ORU THOGUDHILA KOODA DEPOSIT KIDAIKKADHU.EVEN NOTAVAI THORKKA ADIKKA MUDIYAADHU UNDI KULUKKIGAL.


Paramasivam Parama
ஆக 23, 2024 13:26

தி மு கா வே அணைத்து கட்சிகளின் மேல் சவாரி செய்தால் தான் ஒடமுடியும். ரேஸில் ஜெயிக்கும் மண் குதிரை


மேலும் செய்திகள்









புதிய வீடியோ