உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வேலுசாமிக்கு அ.தி.மு.க.,வில் பதவி: வேலுமணிக்கு செக் வைக்கும் இ.பி.எஸ்.,?

வேலுசாமிக்கு அ.தி.மு.க.,வில் பதவி: வேலுமணிக்கு செக் வைக்கும் இ.பி.எஸ்.,?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : அ.தி.மு.க., அமைப்பு செயலர்களாக, முன்னாள் அமைச்சர் வேலுசாமி, முன்னாள் எம்.பி., மைத்ரேயன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'முன்னாள் அமைச்சர்கள் கோவை வேலுசாமி, தர்மபுரி முல்லைவேந்தன், முன்னாள் எம்.பி., மைத்ரேயன், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்' என தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zj5bh34k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முன்னாள் அமைச்சரும் கோவை முன்னாள் மேயருமான வேலுசாமி, ஜெயலலிதா காலத்தில் கோவை அ.தி.மு.க.,வில் செல்வாக்குடன் இருந்தார். 2011 சட்டசபை தேர்தலில் வேலுசாமிக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், அத்தேர்தலில் வென்ற வேலுமணிக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. அதன்பின், அ.தி.மு.க.,வில் கோவை என்றாலே வேலுமணி என்றானது.

கோவை அ,தி.மு.க.,வின் அசைக்க முடியாத சக்தியாக வேலுமணி இருக்கிறார். இதனால், அமைச்சர், மேயர் போன்ற முக்கிய பதவிகளில் இருந்தவர் என்றாலும், வேலுசாமிக்கு அ.தி.மு.க.,வில் முக்கியத்துவம் கிடைக்கவில்லை. இந்த சூழலில்தான் வேலுசாமிக்கு அமைப்பு செயலர் பதவியை பழனிசாமி வழங்கியுள்ளார். இதன் வாயிலாக, கோவையில் சகல செல்வாக்கோடு கட்சியில் இயங்கி வரும் வேலுமணிக்கு, கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி செக் வைத்துள்ளார் என, அக்கட்சி வட்டாரங்களில் பேசுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

S.L.Narasimman
ஜன 29, 2025 20:23

அவர்கள் கட்சியை வலுபடுத்த கட்சியினர் மத்தியில் செல்வாக்கான நபர்களை அவர்கள கட்சி தலைவர் கலந்து பேசி நியமிக்கின்றார். இதில் செக் எங்கிருந்து வருகிறது.


கந்தன்
ஜன 29, 2025 17:14

மூழ்குனாலும் மூழ்காட்டியும் அ.தி.மு.க. தொன் டன் என்பதில் பெருமை


Haja Kuthubdeen
ஜன 29, 2025 17:42

புரட்சிதலைவரின் கட்சி இது...மூழ்க போவது யார் என்பது தேர்தலில் தெரியும்...ஒத்த அஇஅதிமுகவை வீழ்த்த 15கட்சி கூட்டணி தேவை படுது என்றால் யார் பலசாலி எண்பது தெரியவில்லையா!!!


வல்லவன்
ஜன 29, 2025 15:19

பத்து தலைமுறைக்கு கொள்ளை அடிச்சாச்சு இனி செக்கு வச்சா என்ன வக்காட்டி என்ன


Haja Kuthubdeen
ஜன 29, 2025 10:07

செக்கும் இல்லை... ஒன்னுமில்லை... ஒருவருக்கு பதவி கொடுப்பதால் மற்றொருவருக்கு எதுவும் ஆகிவிடாது...


பிரேம்ஜி
ஜன 29, 2025 07:35

முழுகும் கப்பலுக்கு புதிதாக முப்பத்தி இரண்டு கேப்டன்? மூளை கெட்டவர்கள்!


Haja Kuthubdeen
ஜன 29, 2025 10:09

முழுகும் கப்பலா... கனவு வேண்டாம். அஇஅதிமுகவிற்கு மாற்று கருத்து உள்ளவர்கள் புலம்பி கொள்ளுங்கள்.


Haja Kuthubdeen
ஜன 29, 2025 10:11

மூளை கெட்டதுகள்தான் அஇஅதிமுக தங்களை அஇஅதிமுக கூட்டணியில் எப்படியாவது சேரமுடியாதா என்று நேரடியாவும் மறைமுகமாவும் தூது விட்டு திறிகின்றன...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை