உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 என்னாச்சு? மற்ற மாநிலங்களை பின்பற்றுமா தமிழக அரசு

நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 என்னாச்சு? மற்ற மாநிலங்களை பின்பற்றுமா தமிழக அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : நெல் குவிண்டாலுக்கு ரூ.2320 ஆக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் மூன்றாண்டுகளுக்கு முன்பே தமிழக அரசு அறிவித்த ரூ.2500 திட்டத்தை தற்போது வரை செயல்படுத்தவில்லை என பாரதிய கிசான் சங்க விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அறிவிப்பை மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2300, ரூ.2320 என அறிவித்தது. ஆனால் மூன்றாண்டுகளுக்கு முன்பாக தி.மு.க., தனது தேர்தல் வாக்குறுதியில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 அளிப்பதாக வாக்குறுதி அளித்தும் தமிழக அரசு தற்போது வரை நிறைவேற்றாதது ஏமாற்றம் அளிப்பதாக சங்க தேசிய துணைத் தலைவர் பெருமாள் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது: விவசாயிகளை காப்பாற்ற மற்ற மாநிலங்களில் வேளாண் விளைபொருட்களுக்கு ஓரளவு சரியான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000; சத்தீஸ்கரில் ரூ. 3100; ஒடிசாவில் ரூ.3100; கேரளாவில் ரூ.2900 வீதம் விவசாயிகளுக்கு நெல் கொள் முதல் மையங்களில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.விவசாய ஆள் பற்றாக்குறை, கூலி உயர்வு, இடுபொருள் செலவு அதிகமாவது காரணமாக விளைபொருளின் உற்பத்தி செலவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை ஈடு செய்யும் வகையில் விளைபொருள் விற்பனை விலையும் அதிகரித்தால் தான் விவசாயி தப்பிக்க முடியும்.மத்திய அரசு சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.117 கூடுதலாக கொடுத்து குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2320 அறிவித்துள்ளது. எனவே தமிழக அரசு குவிண்டாலுக்கு ரூ.180 அதிகரித்தால் தான் மூன்றாண்டுகளுக்கு முன்பே சொன்னபடி குவிண்டாலுக்கு ரூ.2500 என்கிற வாக்குறுதியை நிறைவேற்ற முடியும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

T M MADHAVAN
ஜூன் 21, 2024 21:12

எங்கே போனார் அந்த அநோக்ய ஐயாகண்ணு


நிக்கோல்தாம்சன்
ஜூன் 21, 2024 05:41

கட்சிக்காரன் விற்ற கள்ளசாராயத்துக்கு 500 லட்சம் தூக்கி கொடுக்க முடியும் , விவசாயிகளுக்கு துண்டு தான்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ