உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராஜ்யசபாவுக்கு நட்டா - சோனியாவை தேர்வு செய்ததன் பின்ணணி என்ன?

ராஜ்யசபாவுக்கு நட்டா - சோனியாவை தேர்வு செய்ததன் பின்ணணி என்ன?

இரண்டு மிகப் பெரும் அரசியல் கட்சிகளான பா.ஜ., மற்றும் காங்கிரஸ், இரண்டு முக்கியமான தலைவர்களை ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வைத்துள்ளது, அரசியலில் சுவாரசியத்தை ஏற்படுத்திஉள்ளது.எந்த நேரத்தில் எந்த முடிவை எடுக்கும் என்பது தெரியாமல், சஸ்பென்ஸ் வைப்பதில் பா.ஜ., கைதேர்ந்தது. அதுபோல் கடைசி நேரம் வரை எந்த முடிவையும் எடுக்காமல் திகில் ஏற்றுவது காங்கிரசின் பாணி.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ninkv23w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

கோஷ்டி மோதல்

லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், பா.ஜ., தன் தேசியத் தலைவர் நட்டாவை, குஜராத்திலும், காங்கிரஸ் அதன் முன்னாள் தலைவர் சோனியாவை, ராஜஸ்தானிலும், ராஜ்யசபாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளன.ஏன் இந்த இருவரும், மக்களை சந்திக்கும் லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை என்ற கேள்வி ரீங்காரமிட்டு வருகிறது.நட்டா விவகாரத்தில், 2019 ஜூனில் அவர் செயல் தலைவராகவும், அதற்கடுத்த ஆண்டில் தேசியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். தலைமை பொறுப்பை அவர் ஏற்றதில் இருந்து, பல மாநில தேர்தல்களில், பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைத்தது. தொட்டதெல்லாம் துலங்கும் என்ற பேச்சு பரவலாக இருந்த நிலையில், அவருடைய சொந்த மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் கட்சி ஆட்சியை இழந்தது. இது தனிப்பட்ட முறையில் நட்டாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.அதற்காகத்தான் அவருக்கு லோக்சபா தேர்தலில் வாய்ப்பு தரப்படவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஹிமாச்சலில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், முன்னாள் முதல்வர் ஜெயராம் தாக்குர் வலுவானவர்களாக உள்ளனர். நட்டாவும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், கோஷ்டி மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும், லோக்சபா தேர்தலில் நாடு முழுதும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்கு வசதியாக, அதில் முழுமையாக ஈடுபடுவதற்கு வசதியாக, நட்டாவை, ராஜ்யசபா எம்.பி.,யாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதே நேரத்தில், சோனியா, 77, எடுத்த முடிவுக்கான காரணம் வேறு மாதிரியாக கூறப்படுகிறது. கடந்த, 1999ல் இருந்து லோக்சபா எம்.பி.,யாக இருந்து வரும் அவர், உடல்நிலை மற்றும் வயதைக் காரணம் காட்டியுள்ளார்.அது ஓரளவுக்கு உண்மைதான். அவரது உடல்நிலை, தீவிர பிரசாரத்துக்கு ஒத்துழைக்காது. ஆனாலும், வேறு சில முக்கிய காரணங்களும் கூறப்படுகின்றன.உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியின் எம்.பி.,யாக உள்ள அவர், வரும் தேர்தலில் அங்கு வெற்றி வாய்ப்பு மங்கலாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகளில், கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மூன்று அல்லது நான்காவது இடத்தையே பிடித்தது.

வெற்றி கிட்டுமா?

மேலும், மாநிலத்தில், ஒட்டுமொத்தமாக, 2.3 சதவீத ஓட்டுகளுடன், இரண்டு சட்டசபை தொகுதிகளில் மட்டுமே வென்றது.தற்போது ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்துள்ளதால், லோக்சபா தேர்தலில் வெற்றி கிட்டுமா என்பது தெளிவில்லாத நிலையை ஏற்படுத்திஉள்ளது.ராஜிவ் பிரதமராக இருந்தபோது, 1991 முதல், புதுடில்லியில் உள்ள, 10 ஜன்பத் சாலை பங்களாவில் சோனியா வசித்து வருகிறார். எம்.பி., பதவியை இழந்தால், அதை இழக்க நேரிடும் என்பதால், ராஜ்யசபா தேர்தலை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது.உடல்நிலை மற்றும் வயது காரணமாக, லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. இதனால், ரேபரேலி தொகுதி மக்களுக்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு கிடைக்காது. இருந்தாலும், என் இதயம் மற்றும் ஆன்மா, நினைவுகள் உங்களுடனேயே இருக்கும்.சோனியாமுன்னாள் தலைவர், காங்.,

உங்களுடன் இருப்பேன்!

-- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Anantharaman Srinivasan
பிப் 16, 2024 23:16

டேய்... எவனெவனுக்கு எப்படி வசதியோ அப்படி பதவியை பிடிக்கிறார்கள். இதில் நீயும் நானும் கருத்துக்கூற ஒன்றுமில்லை. திருட்டு ஓட்டில ஜெயித்துவராமலிருந்தால் போதும்.


Godfather_Senior
பிப் 16, 2024 16:03

பொதுமக்கள் சொத்தை சுரண்டியே வாழனும் ஆகவேதான் பதவியில் தொடரவேண்டும். எலக்ஷனில் நின்றால் தோல்வி நிச்சயம். ஆக வீடும் மக்கள் வரிப்பணத்தில் வேண்டும் பதவியும் வேண்டும், ராஜ்யசபா எம்பி பதவிதான் ஒரே வழி


Amar Akbar Antony
பிப் 16, 2024 12:34

இத்தாலி சோனியா அவர்கள், ஒரு தியாகமும் செய்யவில்லை பிரதம மந்திரிக்கு முயற்சி செய்து அது முக்கி முனகியும், முடியாமல் போனது. அதுபோல் ரெபெரெலி தொகுதியில் ஒரு ...ல்லை எங்கே தன் டெபாசிட் புடுங்கிவிடுமோ? என்பதாலும் நம்பர் பத்து சப்தர்ஜங் பங்களா இலவசமாக கிடைக்காதென்பதாலும்? தான் பங்களா மீதுள்ள ஆசையினால்எப்படியாவது பதவியில் இருக்க அதனால் பங்களா கைவசம்: ஆக கணக்கு சரிபார்த்து விவரமாக நகர்த்தப்பட்டு முடிவெடுத்துள்ளது.


Rajarajan
பிப் 16, 2024 09:57

என்னது? இவரு அவரை தேர்ந்தெடுத்தாரா?? என்ன விளையாடறீங்களா ??


பேசும் தமிழன்
பிப் 16, 2024 08:27

சென்ற தேர்தலில் உ.பி மக்கள் அமேதி தொகுதியில் பப்பு அவர்களுக்கு அல்வா கொடுத்து அனுப்பி வைத்தனர்..... இந்த முறை ரேபரேலி தொகுதியும் புட்டு கொண்டு விடும் என்று செய்தி வந்த காரணத்தால்... இத்தாலி மேடம் ராஜஸ்தான் போய் சேர்ந்து இருக்கிறார்.... ஒரு நாள் நாட்டு மக்கள் அனைத்து தொகுதிகளிலும் கான் கிராஸ் கட்சியை விரட்டி அடிப்பார்கள்..... ஏற்கெனவே கான் கிராஸ் கட்சியின் நிலமை.... கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை தான் !!! 10 ஆண்டுகளாக எதிர்கட்சி அந்தஸ்து கூட பெறாமல் போய் விட்டார்கள்... அவர்கள் நாட்டு மக்களுக்கு செய்த துரோகம் அப்படி ???


kijan
பிப் 16, 2024 00:13

பதவி தேடி வந்தபோது வேண்டாம் என மற்றவருக்கு விட்டுக்கொடுத்தவர்கள் இருவர் ....ஒருவர் ராஜராஜ சோழன் ....அடுத்தவர் சொக்கத்தங்கம் அன்னை சோனியா காந்தி .... இது வரலாறு .... ராஜ ராஜ சோழனாவது ஒருமுறை தான் விட்டுக்கொடுத்தார் .... அன்னையோ இருமுறை பிரதமர் பதவியே வேண்டாம் என்கிறார் ....


N SASIKUMAR YADHAV
பிப் 16, 2024 06:39

ஆஹா அற்புதமான முட்டு . தற்போது வரை அந்த தொகுதிக்கு எதுவும் செய்யாமல் ஆட்டய போடுவதிலேயே குறியாக இருந்தவர்களை மறுபடி மறுபடி தேர்ந்தெடுக்க முடியுமா . பாரதியஜனதா ஆட்சியில் நடக்கும் நலதிட்டங்களுக்கு பரிசாக அந்த தொகுதி பாஜகவுக்கு கிடைக்கும் .


பேசும் தமிழன்
பிப் 16, 2024 08:38

என்னப்பா புதுசா கதை விடுற... உண்மையே வேற.... அய்யா அப்துல் கலாம் மட்டும் இல்லையென்றால் இத்தாலி அம்மையார் எப்போதோ பிரதமாராகி இருப்பார்..... வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர் இந்திய பிரதமாராக வர முடியாது என்று அவர் முட்டு கட்டை போட்டதால்.... வேறு வழியில்லாமல்.... மன்மோகன் சிங் அவர்களை பிரதமர் நாற்காலியில் அமர வைத்தார்கள்..... அந்த கோபத்தில் தான் அய்யா அப்துல் கலாம் அவர்கள் இரண்டாம் முறையாக ஜனாதிபதி ஆவதை கான் கிராஸ் ஆதரவு தராமல் கட்சி தடுத்து... அதற்க்கு நம்ம கட்டுமரமும் உடந்தை... கலாம் என்றால் கலகம் என்று அப்போது வியாக்கியானம் பேசினார் !!!!


Duruvesan
பிப் 16, 2024 18:16

பாயி ஜான் சலாமலேக்கும் . அங்க நின்ன சோனியாஜிக்கு டெபாசிட் கெடைக்காது ,அகிலேஷ் முதுகில் மத்திய பிரதேசத்தில் குத்து விட்டதுக்கு அவங்க வோட்டு எல்லாம் பிஜேபி கு போடுவார்களாம் .எதுக்கு பீலா


ராமன்
பிப் 16, 2024 22:53

இந்த ஊரு இன்னுமா இதையெல்லாம் நம்புது.சுப்பிரமணியம் சுவாமி வேறு மாதிரி சொன்னாரே.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை