உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கரும்பு விவசாயி கைநழுவிய காரணம் என்ன?

கரும்பு விவசாயி கைநழுவிய காரணம் என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் தனக்கு அளிக்கப்படாததை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சீமான். பொது சின்னத்துக்கு அங்கீகரிக்கப்படாத கட்சிகள் உரிமை கொண்டாட முடியாது என தேர்தல் கமிஷன் சொல்ல, மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். குறிப்பிட்ட காலத்திற்குள் நாம் தமிழர் கட்சி சின்னம் கேட்டு விண்ணப்பிக்காததால், அச்சின்னம் கர்நாடக கட்சிக்கு கொடுக்கப்பட்டு விட்டது. குறிப்பிட்ட காலத்தில், வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்தேன் என சீமான் சொல்லும் விளக்கத்தை, தேர்தல் கமிஷன் ஏற்க மறுத்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cgxt3wak&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, தன் தவறை மறைத்து, அடுத்தவர் மீது பழிபோடுகிறார் என, சீமானை கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலை.

'செருப்பாவது கொடுங்க'

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று, கரும்பு விவசாயி சின்னம் பெறுவதற்காக, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து பேசினார். பின், அவர் அளித்த பேட்டியில், ''கரும்பு விவசாயி சின்னத்தை பெற, உச்ச நீதிமன்றம் செல்வேன். அந்த சின்னம் கிடைக்காவிட்டால், எந்த சின்னம் தந்தாலும், அதை வைத்து தேர்தலில் போட்டியிடுவேன்,'' என, தெரிவித்தார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி