உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / செங்கொடிக்கு துரோகம் செய்தது யார்? கம்யூனிஸ்ட் மகேந்திரன் கருத்தால் சர்ச்சை

செங்கொடிக்கு துரோகம் செய்தது யார்? கம்யூனிஸ்ட் மகேந்திரன் கருத்தால் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முத்தரசன், திருப்பூர் எம்.பி., சுப்பராயன் இடையே பூசல் வலுத்துள்ள சூழலில், செங்கொடிக்கு துரோகம் செய்வதாக மூத்த தலைவர் சி.மகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். தி.மு.க., கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. திருப்பூர் சுப்பராயன், நாகப்பட்டினம் செல்வராஜ் ஆகிய இரு எம்.பி.,க்கள் உள்ளனர். தளி ராமச்சந்திரன், கீழ்வேளூர் மாரிமுத்து என இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். வரும் சட்டசபை தேர்தலில், மறைந்த தா.பாண்டியன் மற்றும் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் பணியாற்றிய நிர்வாகிகள் சிலர், தேர்தலில் போட்டியிட விரும்புகின்றனர். அதேநேரத்தில், மாநில செயலர் முத்தரசன் ஆதரவு நிர்வாகிகள், திருப்பூர் சுப்பராயன் ஆதரவு நிர்வாகிகள் இடையே, இதில் கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல், கட்சியில் மாநில, தேசிய அளவில் அதிகாரமிக்க பதவிகளை கைப்பற்றுவதிலும் போட்டி காணப்படுகிறது. தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்தாலும், சிலரின் ஆசி பெற்றவர்களுக்கு தான் பதவி கிடைக்கும் நிலை உள்ளதாக கூறுகின்றனர். கட்சியில் மாநில துணை செயலர் மற்றும் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளில் இருந்தவரான சி.மகேந்திரன், மாநில செயலர் பதவிக்கு முயற்சித்தும், அவருக்கு அது கிடைக்கவே இல்லை. கட்சியில் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக எண்ணும் அவர், தன் ஆதங்கத்தை வெளிப் படுத்தி இருக்கிறார். தற்போது கட்சியில் வெறும் உறுப்பினராக மட்டும் இருக்கும் அவர், 'செங்கொடிக்கு சிலர் துரோகம் செய்து வருகின்றனர்' என, கூறியுள்ளார். அவரது அறிக்கையில், 'சுயநலத்திற்காக சிலரை துாக்கிப் பிடிப்பதும், சிலரை துாக்கி எறிவதும், நீங்கள் துாக்கிப் பிடித்திருக்கும் செங்கொடிக்கு செய்யும் துரோகம் என்பதை எப்போது தான் உணர்ந்து கொள்ள போகிறீர்களோ? இது எல்லாருக்கும் அல்ல; சிலருக்கு மட்டுமே' என கூறியுள்ளார். இது தொடர்பாக, மாநில துணை செயலர் மு.வீரபாண்டியன் கூறுகையில், ''கட்சி ஜனநாயகத்துடன் இயங்குகிறது. கட்சியில் மகேந்திரனை யாரும் புறக்கணிக்கவில்லை. கட்சியில் எல்லாமே சரியாகத்தான் நடக்கிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை