உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்... செல்வப்பெருந்தகை பேச்சின் பின்னணியில் யார்?

டில்லி உஷ்ஷ்ஷ்... செல்வப்பெருந்தகை பேச்சின் பின்னணியில் யார்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'எத்தனை காலம் தான் கையேந்துவது? காங்கிரசை வலுப்படுத்த வேண்டும்' என, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை சமீபத்தில் பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது; அத்துடன் தி.மு.க., - -காங்., கூட்டணியில் உரசலையும் உண்டாக்கியது. செல்வபெருந்தகைக்கு முன்னாள், காங்., தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எதிர்ப்பு தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9kihaxke&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'தி.மு.க., - -காங்., கூட்டணி தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ள நிலையில் இப்படி பேசலாமா? திடீரெனெ செல்வப்பெருந்தகை இப்படி பேசக் காரணம் என்ன? இதன் பின்னணியில் இருப்பது யார்?' என பல கேள்விகள் எழுந்துள்ளன.'உ.பி.,யில், 'இண்டியா' கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றதால், மிக உற்சாகமாக உள்ளார் ராகுல். உ.பி., வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க, பாத யாத்திரை செல்ல இருக்கிறார். தமிழகத்திலும் ராகுல், பிரியங்கா என இருவருமே பாத யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். கட்சியை வலுப்படுத்தவே இந்த முயற்சி. செல்வ பெருந்தகை சும்மா அப்படி பேசவில்லை; ராகுல், பிரியங்கா சொல்படி தான் அவர் செயல்பட்டுள்ளார்' என, டில்லி அக்பர் சாலையில் உள்ள, காங்., அலுவலகத்தில் பேச்சு அடிபடுகிறது.இதற்கிடையே, டில்லி மீடியாவை, 'மோடி மீடியா' என கிண்டலடித்த ராகுல், டில்லி பத்திரிகையாளர்களை விருந்திற்கு அழைக்கப் போகிறாராம். காங்கிரசுக்கு, 99 தொகுதிகள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியில் உள்ளதால் இந்த ஏற்பாடாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ramani
ஜூன் 17, 2024 17:00

காங்கிரஸ் என்னதான் கஜகர்ணம் அடித்தாலும் அதனால் ஆட்சியில் அமர முடியாது. அது இறந்த கட்சி. 99 இடங்களில் வெற்றி பெற்றதற்கே இந்த ஆட்டம் போடுது. மூன்றிலக்க இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. இனி வரும் காலங்களில் அதுகூட கிடைக்காது என்பது உறுதி


tmranganathan
ஜூன் 17, 2024 09:21

ஒரு நாளும் காங்கிரஸ் தேறாது.காரணம்.அன்னான் தங்கை இத்தாலி பேரன் பேத்திகள் பாட்டிக்கு தான் adimaigal.


ஆரூர் ரங்
ஜூன் 16, 2024 14:19

ரிசர்வ் வங்கி பியூன் லண்டனில் சொத்து வாங்கிய ரகசியம் என்ன


Ramesh Sargam
ஜூன் 16, 2024 12:51

எத்தனை காலம் தான் கையேந்துவது? அப்பாடி, காங்கிரஸ் கட்சியில் இப்பத்தான் ஒருத்தருக்கு சூடு, சொரணை பிறந்திருக்கிறது. மகிழ்ச்சி.


M Ramachandran
ஜூன் 16, 2024 11:29

கொளகொள வாழைய்யப்பழம்


venkatakrishna
ஜூன் 16, 2024 06:30

செல்வபெருந்தொகை அவர்கள் திறமையானவர். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது அவரது கடமை. டெல்லி எப்போதும் அடுத்தவன் முதுகில் சவாரி செய்து பழக்கம். அதை மாற்ற முடியாது. இப்போதிருக்கும் நிலையில் இவர் ஒரு தேசிய கட்சிக்கு மாறுவதுதான் அவர் எதிர்காலத்திற்கு நல்லது.


ஆரூர் ரங்
ஜூன் 16, 2024 03:26

ஒரு அடிமை வாய் திறந்ததை இன்னொரு அடிமை ஆட்சேபித்தார். அம்புட்டுதான். நாட்டுக்கு விடுதலை கிடைத்தவுடனேயே காங்கிரசில் அடிமைத்தனம் ஆரம்பித்து விட்டது. இங்குnஸ்டாலினை தனிநபர் துதிபாடுவது மட்டுமே பிழைக்கும் வழி. பீட்டர் அல்போன்ஸ் வழிதான் சூப்பர்.


Sivakumar
ஜூன் 16, 2024 07:45

ஒரு மாநில தலைவர் நான் தேர்தல்ல நிக்க மாட்டேங்குறார். அவரை வலுக்கட்டாயமாக நிக்க வற்புறுத்துகிறார்கள். அவரும் அடிமை போல நின்னு தொக்குறார். இந்த அடிமை கட்சியை பத்தி ஒன்னும் சொல்ல மாட்டிங்களா சார்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி